திறமையான பாடலாசிரியர்களின் நல்ல வரிகளை பயன்படுத்தாமல், டம்மி லிரிக்ஸை போட்டு பாடலாசிரியர்களை டம்மியாக்கி வைரமுத்துவை வளர்த்து விட்டவர் இளையராஜாதான் என கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
இளையராஜா - வைரமுத்து இடையேயான வன்ம பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வந்தாலும், சின்மயி பிரச்சினை, இளையராஜாவின் எம்பி பதவி, போன்ற சம்பவங்களுக்கு பின் பிஜேபி - திமுக போராகவே பார்க்கப்படுகிறது.
திரைப்பட விழா ஒன்றில் பேசிய வைரமுத்து, "சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கும், சில நேரங்களில் மொழியை விட இசை சிறந்ததாக இருக்கும். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்சானி" என தன் திருவாய் மலர்ந்து, மறைமுகமாக இளையராஜாவின் 'ஞானி' பட்டத்தின் மேல் தன் வன்மத்தை கக்கி வைத்தார்.
வைரமுத்துவின் வன்மைத்தை பார்த்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், "வைரமுத்துவிற்கு கர்வம் தலைக்கேறிடிச்சு, அவருக்கு நல்ல புத்தி இல்லை. வைரமுத்து வாயை பொத்திகிட்டு இருக்கனும், இல்லையென்றால் விளைவுகள் பயங்கரம்" என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஆல்ரெடி 'இடம் பொருள் ஏவல்' திரைப்பட இசை பஞ்சாயத்தில், இளையராஜா மேல் காண்டில் இருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, வாண்டடாக இசையா - கவியா பஞ்சாயத்து வண்டியில் ஏறி, தன் பங்கிற்கு இளையராஜாவை கலாய்த்துள்ளார்.
இசையா - கவியா பஞ்சாயத்து குறித்து தனது 'X' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார் சீனு ராமசாமி.
"உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியூன்களுக்கு நிறைய டம்மி லிரிக்ஸை ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்" என கங்கை அமரனை டேக் செய்து தன் அன்பையும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்து மிக மரியாதையாக இளையராஜாவை கலாய்த்திருந்தார் சீனு ராமசாமி.
சீனு ராமசாமியின் ட்வீட்டை பார்த்த விளம்பர வெறி கஸ்தூரியும் நானும் அறிவாளி தெரியுமா? என வம்படியாக வண்டியில் ஏறி தன் புத்திசாலிதனத்தை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளித்துள்ளார்.
சீனு ராமசாமியின் ட்வீட்டிற்கு கமெண்ட் போட்டுள்ள கஸ்தூரி, அதில் "திரு. வைரமுத்துவுக்கு முன்னும் பின்னும் இசைஞானி இளையராஜாவின் மெட்டுகளுக்கு பாட்டெழுதி ஹிட்டடித்த பெரும் திறமைசாலிகளை எதற்கு குறைத்து பேச வேண்டும்? சீனு ராமசாமியின் இந்த பதிவு மிகவும் வருத்தத்திற்குரியது. தேவையற்றது" என தன் இசை - கவியுலக புலமையை வெளிப்படுத்தியிருந்தார்.
கஸ்தூரியின் கமெண்டிற்கு பதில் அளித்துள்ள சீனு ராமசாமி "கவிஞர்கள் கவிதை வரிகளை எழுதி பாட்டில் பேர் வாங்கி விடக்கூடாதுன்னு கவனமா இருப்பாரு அதுக்கு காரணம் வைரமுத்து வளர்ச்சி அண்ணாவுக்கு பிடிக்கல கண்ணா" என்று நான் இயக்கி வரும் கோழிப் பண்ணை செல்லதுரை படத்தில் பாடல் எழுத வரும் போது டம்மி லிரிக்ஸ் விசயத்தை சொன்னது திரு கங்கை அமரன் அவர்கள்.
என விளக்கம் கொடுத்துள்ள சீனு ராமசாமி, "மேலும் அடுத்த படம் ராஜா சாருடன் இணைந்து ஒரு படம் இயக்கவும் காத்திருக்கேன். அவர் மேனேஜர் ச்ரிராம் சார் கூட பேசி இருக்கேன் சகோதரி" என தெரிவித்துள்ளார்.
இதனால், மேனேஜர் ஸ்ரீராமின் வேலைக்கு ஏதும் பிரச்சினை இருக்காதே இளையராஜா ஸார்? என கலாய்த்து வருகிறார்கள் இணையவாசிகள்.