Monday 23rd of December 2024 - 07:26:19 PM
பணத்தை கட்டிவிட்டு பொண்டாட்டியை கூட்டி செல் - சேலத்தில் கொடூர கந்து வட்டி கொடுமை.
பணத்தை கட்டிவிட்டு பொண்டாட்டியை கூட்டி செல் - சேலத்தில் கொடூர கந்து வட்டி கொடுமை.
எல்லாளன் / 05 மே 2024

வாங்கிய கடனின் ஒரு தவணையை கட்டவில்லை என்ற காரணத்தினால்,ஏழை  கூலித் தொலிலாளியின் மனைவியை வங்கிக்கு அழைத்து சென்று பிணையக் கைதி போல் வைத்திருந்த சம்பவம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்து பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகே உள்ள துக்கியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது பிரசாந்த். கொந்தனார் வேலை செய்து வரும் பிரசாந்தின் மனைவி பெயர் கௌரிசங்கரி. நான்கு மாதங்களுக்கு முன், குடும்ப வறுமை காரணமாக வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 35 ஆயிரம் ரூபாய் வாராந்திர தவணை வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். ஒவ்வொரு வாரமும் ரூபாய் 770 வீதம் 52 வாரங்கள் (மொத்தம் 40,040 ரூபாய்) செலுத்தி கடனை அடைப்பதாக உறுதி கொடுத்துள்ளார் பிரசாந்த்.

எப்பொழுதும் ஏழைகளின் அழியாத சொத்தான "சொன்ன சொல் காப்பாற்றுதல்" படி, கொடுத்த வாக்குறுதிபடி தொடர்ந்து 42 வாரங்கள் (மொத்தம் 32,340 ரூபாய்) பணத்தை சரியாக கட்டிக் கொண்டு வந்தார் பிரசாந்த். மீதம் 10 வாரங்கள் மட்டுமே தவனை பாக்கி இருதுள்ளது.

கடந்த ஏப்ரல் 30ம் திகதி, அந்த வார தவணையை செலுத்த சொல்லி பிரசாந்தின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார் தனியார் வங்கியின் ஊழியர் சுபா. ஏதோ வேலையில் இருந்த பிரசாந்த் சுபாவின் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், பிரசாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற வங்கி ஊழியர் சுபா, அங்கு பிரசாந்த் இல்லாததால் சில மணி நேரங்கள் பிரசாந்தின் வருகைக்காக காத்திருந்திருக்கிறார். ஆனால் பிரசாந்த் வீட்டிற்கு வராததால், வீட்டில் இருந்த பிரசாந்தின் மனைவி கௌரிசங்கரியை தன்னுடன் அழைத்துக் கொண்டு வாழப்பாடியில் உள்ள வங்கி கிளை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 

வங்கி கிளையில் வைத்து வார தவணையை செலுத்தி விட்டு உன் கணவன் உன்னை வீட்டிற்கு அழைத்து செல்லட்டும், அதுவரை இங்கேயே இரு என வங்கி ஊழியர் சுபா பிரசாந்தின் மனைவி கௌரிசங்கரியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைத கௌரிசங்கரி, கணவர் பிரசாந்திற்கு போன் செய்து தகவலை சொல்லி அழ, பதறிபோன பிரசாந்த் வாழப்பாடி போலிஸ் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்திடம் புகார் தெரிவித்துள்ளார். 

பிரசாந்த்தின் புகாரின் அடிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் உத்தரவின் பேரில் வாழப்பாடி தனியார் வங்கி கிளையின் அலுவலகத்திற்கு சென்றனர் போலிஸ். இரவு 8 மணியாகியும் வங்கி மூடப்படாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வாடிக்கையாளார்களை தொந்தரவு செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கியின் உத்தரவு இருக்கும் நிலையில் இரவு 8 மணிவரை ஒரு பெண்ணை பணையக் கைதி போல் பிடித்து வைத்துக் கொண்டு, வாடிக்கையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது யார் என வங்கி மேலாளரிடம் போலிஸ் கேட்ட போது, மாத கடைசி என்பதால் வேறு வழியில்லாமல் ஓவர் டைம் வேலை பார்ப்பதாக வழிந்துள்ளார் வங்கி மேலாளர்.

மேலும், கௌரிசங்கரியை பணையக் கைதியாக பிடித்து வைத்திர்ப்பது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் பிரசாந்த் மற்றும் வங்கி நிர்வாகம் என இரு தரப்பினரிடம் விவரங்களை கேட்டு, சமரசம் பேசிய போலிசார் முன்னிலையில் அந்த வார தவணையான 770 ரூபாயை செலுத்திய பின் தன் மனைவி கௌரிசங்கரியை அழைத்து சென்றுள்ளார் பிரசாந்த.

மொத்தத்தில், தான் செலுத்த வேண்டிய வார தவணையை செலுத்தி விட்டார் ஏழை கூலி தொழிலாளி பிரசாத். ஆனால், சட்ட விதிகளை மீறி ஒரு பெண்ணை பிணையக் கைதியாகா பிடித்தி வைத்திருந்த வங்கி ஊழியர் சுபாவிற்கோ, அதற்கு பொறுப்பான வங்கி நிர்வாகத்திற்கோ அவர்கள் செய்த தவறிற்கு தண்டனை கிடைத்ததாக தெரியவில்லை.

என்ன செய்வது? ஏழைகள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம்தானே.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி