மனித உயிர் இறந்த பிறகு எங்கு செல்கிறது? மறுபிறவி உண்மையா? இது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது . சிலர் வெறும் கற்பனை என நம்புகிறார்கள் . ஆனால், ஒரு குழந்தை தன்னுடைய முன்ஜென்ம வாழ்க்கையை பற்றியும் தனது கணவர் மற்றும் பிறந்த வீடு பற்றிய தகவல்களை துல்லியமாக சொல்ல ஆரம்பித்தால்?
இது கதை இல்ல. இந்தியா முழுக்க அதிர்ச்சி அடைய வைத்த உண்மையான சம்பவம். இந்த குழந்தையின் பெயர் ஷாந்தி தேவி. மகாத்மா காந்தியே இதனை விசாரிக்க குழு அமைத்தது இதன் சிறப்பு
1926-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஷாந்தி தேவி, மற்ற குழந்தைகள் போல அல்லாமல், மூன்றாவது வயதில் இருந்தே தனியாக இருந்தாள். அவள் தன் பெற்றோரைப் பார்ப்பதற்குப் பதிலாக, வேறொரு குடும்பத்தைக் குறித்து பேசத் தொடங்கினாள். "இது என் வீடு இல்லை," "நான் எங்க வீட்டுக்கு போகணும்," "என் கணவர் எங்கே?" என்ற பதில்கள் அவளிடம் இருந்து வந்துகொண்டே இருந்தன.
இது குழந்தைகளின் கற்பனை என்று அவளது பெற்றோர் நினைத்தனர். ஆனால், ஐந்தாவது வயதில் அவள் சொன்ன தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஷாந்தி கூறியதாவது: அவள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா என்ற ஊரில் வாழ்ந்திருக்கிறாள். அவளது முன்னாள் பெயர் லுக்டி தேவி. அவள் கேதர் நாத் என்ற மனிதரை திருமணம் செய்திருக்கிறாள். அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது. ஆனால், பிரசவ நேரத்தில் அவள் உயிரிழந்து விட்டாள்.
இத்தகவல்கள் கேட்டதும், அவளது பெற்றோர் முதலில் நம்பவில்லை. ஆனால், காலம் செல்ல செல்ல ஷாந்தி கூறிய தகவல்கள் நம்பாமலும் இருக்க முடியவில்லை அந்த ஊருக்கே சென்று விசாரிக்க முடிவெடுத்தனர் அவளது பெற்றோர். அங்கு கேதார்நாத் என்ற மனிதர் உண்மையில் வாழ்ந்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், லுக்டி தேவி என்ற பெண் அவர் மனைவியாக இருந்ததும், அவள் பிரசவத்தில் இறந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, கேதார்நாத் நேரில் ஷாந்தியை சந்திக்க வந்தபோது, அவள் அவரின் தனிப்பட்ட ரகசிய விஷயங்களை கூறினாள், இதனால், அவரே திகைத்துவிட்டார்
இந்த சம்பவம் மகாத்மா காந்தியுடைய கவனத்திற்கும் சென்றது. அவர் தனிப்பட்ட ஆராய்ச்சி குழுவை அமைத்து, ஷாந்தியின் சொற்களில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்தார். குழுவினர் அனைவரும் முடிவுக்கு வந்த ஒரே விஷயம்—சிறுமி சொன்ன தகவல்களில் பெரும்பாலானவை உண்மையானவையே!
இன்று வரை இதன் மர்மம் தீர்க்கப்பட வில்லை