Thursday 17th of April 2025 - 05:14:03 AM
பெங்குயினோட கள்ள காதல் கதை: யாரும் பார்க்காத பெங்குயினோட மறுபக்கம்
பெங்குயினோட கள்ள காதல் கதை: யாரும் பார்க்காத பெங்குயினோட மறுபக்கம்
Santhosh / 24 மார்ச் 2025

ஒரு நிமிஷம் கண்ண மூடி பாருங்க பனி படர்ந்த ஒரு இடம், குளிர்ல நடுங்காம சின்ன சின்ன பெங்குயின்கள் நம்ம ஊரு ஆளுங்க மாதிரி நடந்து, பேசாமயே கதை சொல்ற மாதிரி இருக்கு. இவங்க நடக்குறது மட்டும் இல்ல, காதலிக்கிறது, சண்டை போடுறது, சில சமயம் “கள்ளக் காதல்” கூட செய்கிறது. ஆமாம், மனிதர்கள் மாதிரியே ஏமாத்துறதுலயும் இவங்க கில்லாடிங்க! பெங்குயின்கள பத்தி நம்ம ஊரு சினிமாவுல வர்ற காதல் கதை மாதிரி பேசலாம் வாங்க.

பெங்குயின்கள் காதல் பண்றது நம்ம ஊரு ஜோடிகள பாக்குற மாதிரி இருக்கும். ஒரு ஆண் பெங்குயின், பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி ஒரு சின்ன கல்லை தேடி எடுத்து, “இது உனக்காக!”னு கொடுக்கும். ஒரு பையன் பொண்ணுக்கு ரோஜாப்பூ வாங்கி குடுக்கிற மாதிரி தான் இது. அந்த பெண் பெங்குயின் அந்த கல்லை பிடித்தால், “சரி, நீ தான் என் ஜோடி”னு முடிவு பண்ணிடும். இப்படி ஒருத்தர ஒருத்தர் தேர்ந்தெடுத்து வாழும். இதில் பல பெங்குயின் வகைகள் உள்ளன அவை அடெலி, எம்பரர் வகைகள்.

பல பெங்குயின்கள் வாழ்க்கை முழுக்க ஒரே ஜோடியோட இருக்கும். ஆனா சில பெங்குயின்கள் அப்படி இல்லை “நம்ம ஆளு இல்லைனா என்ன?”னு தனிமையை தேடும் . நம்ம ஊருல சில பேர் “வீட்டுல ஒரு ஆள், வெளியில ஒரு ஆள்”னு வாழ்கிற மாதிரி, பெங்குயின்களுக்கு உள்ளேயும் இப்படி நடக்குது. அடெலி பெங்குயின்கள பத்தி ஆராய்ச்சி பண்ணினவங்க சொல்றாங்க , சில ஆண் பெங்குயின்கள் தங்கள் ஜோடிக்கு கூடு கட்ட பாறையை தேட போயிருக்கும் போது, பெண் பெங்குயின் வேறு ஒரு பெங்குயின் இடம் போயி “ஹாய், என் கூட சேர்ந்துக்குறியா?”னு முயற்சி பண்ணுமாம். இது நம்ம பக்கத்து சீரியல்ல வருகிற “கள்ள காதல்” மாதிரி தான்! சில சமயம் ஆண் பெங்குயின்களும் தங்களது துணை இல்லாதப்போ வேற பெண் பெங்குயினை போயி கண் அடிக்குமாம் .

இந்த ஏமாத்துற விஷயம் எப்பவும் சுமூகமா போகாது. ஒரு ஆண் தன் ஜோடி வேற ஆண் கூட இருக்குறத பாத்தா, உடனே சண்டையை ஆரம்பிக்குமாம். நம்ம ஊரு ஆளுங்க தெருவுல “நீ யாருடா அவ கூட?”னு கேக்குற மாதிரி, இவங்க கழுத்த நீட்டி, சத்தம் போட்டு, சில சமயம் கொத்தி சண்டை போடுது . ஒரு ஆராய்ச்சில பாத்தாங்க ஒரு ஆண் பெங்குயின் தன் பொண்ணு வேறு ஒருவனோடு போனதை பாத்து, அவனை தாக்கி, பிறகு தன் ஜோடியையும் ஒரு அடி அடிச்சிருக்கு! இது நம்ம பக்கத்து குடும்ப சண்டை மாதிரி இல்ல?

இப்போ நம்ம ஊருல “ஏண்டா இப்படி ஏமாத்துறீங்க?”னு கேட்டா, “அது சும்மா டைம் பாஸ்”னு சொல்லுவாங்க.ஆனா பெங்குயின்களுக்கு இது டைம் பாஸ் இல்ல , இயற்கையோட விளையாட்டு. சில சமயம் நல்ல கூடு கட்டுறதுக்கு பாறை கிடைக்கலனா, வேற ஆண் பெங்குயின் கிட்ட இருந்து திருடுறதுக்கு இப்படி பொண்ணுகள ஏமாத்துது. இல்லனா, தங்கள் குட்டிகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கணும்னு வேற ஜோடி தேடுது. நம்ம ஊருல “பணத்துக்காக காதல் பண்ணுறாங்க”னு சொல்ற மாதிரி, இவங்க உயிர் வாழுறதுக்காக இப்படி பண்ணுது.

பெங்குயின்கள் நம்மள மாதிரி நடந்துக்கிறது இதோட நிற்கவில்லை.  குட்டிகள பாத்துக்குறதுல நம்ம ஊரு அம்மா-அப்பா மாதிரி தான் அதுங்களும். ஆணும் பெண்ணும் மாறி மாறி முட்டைய காக்குது, சாப்பாடு தேடி குடுக்குது. ஒரு எம்பரர் பெங்குயின் ஆண் , தன் ஜோடி சாப்பாடு தேட போனா, குட்டிய குளிர்ல இருந்து காப்பாத்த காலில் வச்சு அணைச்சுக்குது.

பெங்குயின்கள் ஏமாத்துறது ஒரு பக்கம் இருந்தாலும், அவங்க ஒருத்தர ஒருத்தர் எவ்வளவு நம்பி இருக்காங்கனு பாத்தா ஆச்சரியமா இருக்கும். ஆயிரக்கணக்கான பெங்குயின்கள் கூட்டத்துல இருந்து தங்கள் ஆள தேடி கண்டுபிடிக்குது. நம்ம ஊரு காதலர்கள் மாதிரி “உன்ன தவிர வேற யாரு?”னு ஒரு பாசம் இருக்கு.

நம்ம ஊருல இதை பாத்தா என்ன சொல்லுவோம்? “அடேங்கப்பா, பறவைக்கே இப்படி மனசு இருக்கா?”னு ஆச்சரியப்படுவோம். சில பேர் “இது எல்லாம் சாமியோட சித்து விளையாட்டு”னு சொல்லுவாங்க. ஆனா உண்மையில இது இயற்கையோட ஒரு பகுதி பெங்குயின்களுக்கு கூட நம்ம மாதிரி உணர்ச்சி, தேவை, தப்பு பண்ற புத்தி எல்லாம் இருக்கு.

 

டிரண்டிங்
முதலிரவு வீடியோவை நண்பனுக்கு அனுப்பிய இளைஞர். அடுத்து நடந்த பயங்கரம்!
க்ரைம் / 27 அக்டோபர் 2024
முதலிரவு வீடியோவை நண்பனுக்கு அனுப்பிய இளைஞர். அடுத்து நடந்த பயங்கரம்!

தன்னுடைய முதலிரவு சாகச வீடியோவை அவ்வப்பொழுது தனிமையில் பார்த்து ரசித்து வந்துள்ளார் அந்த இளைஞர். அடி

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
2025 உலக அழிவின் ஆரம்பமா? பாபா வங்காவின் கணிப்புகள்.
மர்மங்கள் / 21 டிசம்பர் 2024
2025 உலக அழிவின் ஆரம்பமா? பாபா வங்காவின் கணிப்புகள்.

ஜோதிடம், ஜாதகம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட யாராவது அடுத்து நடக்கப்போவது என்னவென்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி