Tuesday 23rd of September 2025 - 08:16:38 AM
நிலவுக்கு மிக அருகில் உள்ள நாடு எது தெரியுமா? ஆச்சரியமூட்டும் இயற்பியல் சோதனைகள்.
நிலவுக்கு மிக அருகில் உள்ள நாடு எது தெரியுமா? ஆச்சரியமூட்டும் இயற்பியல் சோதனைகள்.
Kokila / 22 ஏப்ரல் 2025

தென் அமெரிக்கா பூமியின் நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு. இது உலகின் நான்காவது பெரிய கண்டம் ஆகும். தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள நாடு தான் ஈக்வடார்(Ecuador). இது மற்ற இடங்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமானது. 

ஸ்பானிஷ் மொழியில் இவ்விடத்தை பூமத்திய ரேகை என்று குறிப்பிடுகிறார்கள். பூமியை வட துருவமாகவும் தென் துருவமாகவும் பிரிக்கும் ஒரு கற்பனை கோடு தான் பூமத்திய ரேகை. உலகத்தில் மொத்தம் 13 நாடுகள் இந்த பூமத்திய ரேகையில் அமைந்துள்ளன.

ஈக்வடார் பகுதி பூமியின் வெளிப்புறத்தில் மற்ற இடங்களை ஒப்பிடும் போது உயர்வாக தென்படும் காரணத்தினால் நிலாவுக்கு அருகில் செல்வதாக நம்மால் உணர முடிகிறது. இதனால்தான் இந்த நாட்டில் அமைந்துள்ள சிம்போராசோ மலையில் நிலாவுக்கு அருகில் செல்ல முடியும் என்று கூறுகின்றனர். இந்த நாட்டினுடைய தலைநகரான குய்டோ, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,850 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால், இந்த தலைநகரம் உலகத்தின் மிக உயர்ந்த இரண்டாவது தலைநகரமாகும்.

இவ்வளவு அம்சங்கள் கொண்ட தென் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் வருவது மிகவும் அதிகம். அதற்குக் காரணம் இங்கே காணக்கூடிய சுவாரஸ்யமான இயற்பியல்(science) சோதனைகளும் கூடத்தான். 

மனிதனின் இயல்பான புத்தியே விசித்திரமாக உள்ளதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பது தானே. ஈக்வடாரில் அமைந்துள்ள சிம்பரோசோ (Mt.Chimbarozo) மலையில் ஒரு நேர்கோடு வரையப்பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட நேர்கோட்டில் நீங்கள் நேராக நடக்க முயற்சித்தால் தடுமாறி கீழே விழுவீர்கள். இதற்குக் காரணம் மற்ற இடங்களை விட இங்கு புவியீர்ப்பு விசை 0.3% குறைவாகவே உள்ளது.  

சுற்றுலா பயணிகளும் ரீல்ஸ் மோகம் கொண்ட இளைஞர்களும் இந்த இடத்தில் வீடியோ எடுப்பது வழக்கம். 

பூமி உருண்டையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பூமியின் சரியான வளைவு அமைந்துள்ள பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சுலபம்தான். இதனை ஈக்குவடோரியல் லைன் (equatorial line) என்று கூறுவர். 

அடுத்ததாக, ஒரு தொட்டியில் தண்ணீர் ஊற்றினால் அது வழக்கமான திசையில் சுழலாது. இலைகள் அந்த தண்ணீரில் விழும்போது வழக்கமான சூழலை உருவாக்காது. வலது திசையிலோ எதிரெதிர் திசையிலோ சுற்றாமல் நேரடியாக தொட்டியில் அமைந்துள்ள நடுப்பகுதிக்குள் சென்று விடும். 

ஈக்வடாரில் நண்பகல் நேரங்களில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால் உங்களால் உங்கள் நிழலையே பார்க்க முடியாது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஈக்வடார் பகுதியில் இயற்பியல் விதிகள் சற்று வித்தியாசமாகத் தோன்றும். பூமி சுழலும் போது, இந்த ஈக்வடார் பகுதிக்கு அருகில் ஒரு வலுவான வெளிப்புற விசை உள்ளது. இதுவே இங்கு ஈர்ப்பு விசையை பலவீனப்படுத்த காரணம்.

இது போன்ற இடங்களில் வாழ்வது மிகவும் சவாலான ஒன்று. ஏனெனில், சூரியனுக்கு அருகில் இருப்பதால் வெயிலில் எரிச்சல் ஏற்படுவதும் இங்கு வாழும் மக்களுக்கு பழகிப்போன ஒன்றாக இருக்கிறது.

ஈக்வடாரின் சிறப்பம்சம் இயற்பியல் சோதனைகள் மட்டுமல்ல. இங்குள்ள கலாபகோஸ் தீவுகள் 9,000 க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களைக் கொண்டுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ளது. இந்த அதிசய தீவில் உலகில் வேறு எங்கும் காணப்படாத விலங்குகள் செழித்து வளர்கின்றன.

அதனால் சுற்றுலா செல்ல நினைக்கும் நபர்கள் இதுபோன்ற இயற்கை ஆச்சரியமூட்டும் இடங்களுக்கு சென்று புதுவிதமான அனுபவங்களை உருவாக்கலாம்.

டிரண்டிங்
கப்பலில் கொடூர சிறைச்சாலை. அமெரிக்காவின் அட்டூழியம்
உலகம் / 05 மே 2024
கப்பலில் கொடூர சிறைச்சாலை. அமெரிக்காவின் அட்டூழியம்

சிறைகள் என்றாலே கொடூரம்தான். அந்த கொடூரத்தை கோரமாக்கி, மரணத்தை விட கொடுமையான தண்டனையை கைதிகள் நித்தம

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
இசைல அரசியல்? ராக்ஃபெல்லரா? என்ன செஞ்சாரு
அரசியல் / 03 மே 2025
இசைல அரசியல்? ராக்ஃபெல்லரா? என்ன செஞ்சாரு

432 Hz இசை இயற்கையோட ஒத்து மனசுக்கு அமைதி தரும்னு நம்பப்படுது; ஆனா 440 Hz-ஐ ராக்ஃபெல்லர் சதி மூலமா உ

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி