இந்த உலகம் பல வினோதமான விஷயங்களை உள்ளடக்கி இருக்கு. நாமும் பலவிதமான வினோதங்களை தொலைக்காட்சியிலோ ஸ்மார்ட் போனிலோ கண்டு வருகிறோம். வானம் ஏன் இவ்வளவு உயரமாக இருக்கு, கடல் ஏன் இவ்வளவு ஆழமாக இருக்கு, இந்த ஆழமான கடலுக்குள்ள அப்படி என்ன இருக்கும்னு பலவிதமான கேள்விகள் நமக்கு தோன்றி இருக்கும்.
இந்த பூமியிலேயே சூரியன் தான் மிக முக்கியமான ஒன்று. சொல்லப்போனால் நம்ம வாழ்க்கையே சூரிய ஒளியில் தொடங்கி சூரிய ஒளியில் முடிகிறது. நம்ம ஊர்ல சூரியன் வரும்போது வேலைக்கு போயிட்டு சூரியன் மறையும் போது வீடு திரும்புவோம். ஆனால் சூரியனே மறையாத ஒரு நாடு இருக்கு. அதுதான் இந்த பூமியின் கடைசி நாடாக விளங்கும் 'நார்வே'.
பூமி உருண்டை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் பூமியின் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொரு நாடு உள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது.
வடக்கு நோர்வேயில் உள்ள ஹேவர்ஃபெஸ்ட் நகரில், சூரியன் 40 நிமிடங்கள் மட்டுமே மறைகிறது. எனவே, இது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 40 நிமிடங்கள் மட்டுமே இருட்டாக இருக்கும், மீதமுள்ள 23 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்த நகரம் ஒளியால் நிறைந்துள்ளது.
இங்கு கோடை காலத்தில் இரவு பொழுதே இருக்காது. வட துருவத்திற்கு அருகில் இருப்பதால், மற்ற நாடுகளைப் போல ஒவ்வொரு நாளும் பகல் அல்லது இரவு இல்லை. அதற்கு பதிலாக, இங்கு ஆறு மாதங்கள் பகலும் ஆறு மாதங்கள் இரவும் இருக்கும். குளிர்காலத்தில், இங்கு சூரியன் தெரிவதில்லை, ஆனால் கோடையில், இங்கு சூரியன் மறைவதில்லை. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த நாட்டிற்கு பார்வையிட வருகிறார்கள்.
நோர்வே ஒரு விசித்திரமான நாடாக மட்டுமல்லாமல் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. "க்ளோபல் பீஸ் இண்டெக்ஸ்" என்ற வருடாந்திர அறிக்கையில், நோர்வே ஒரு பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஆண்டுதோறும் நார்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமில்லை.
மேலும் 'சுஷி' என்ற கடல் வகை மீன் அறிமுகமானது நார்வே என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இங்குள்ள உணவுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை போன்று இல்லாமல் வேறுபட்டு இருப்பதை நீங்கள் காணலாம். பொதுவாக சுவையான உணவுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
அடுத்ததாக நார்வேயில் உள்ள E-69 என்ற நெடுஞ்சாலையில் தனியாகச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. E-69 நெடுஞ்சாலை பூமியின் முனைகளை நோர்வேயுடன் இணைக்கிறது. இந்த சாலை தான் உலகின் கடைசி சாலையாகும். நீங்கள் அங்கு சென்றடையும் போது, எங்கு செல்வது என்று உங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் இங்குதான் உலகம் முடிகிறது.
நீங்கள் இந்த நெடுஞ்சாலையில் செல்ல விரும்பினாலும், தனியாகச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு எல்லா இடங்களிலும் பனி உள்ளது, எனவே தனியாகப் பயணம் செய்வதால் தொலைந்து போகும் வாய்ப்பு இருப்பதால் தனிப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது.
படிப்படியாக நார்வே வளர்ச்சியடைந்து, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கினர். இப்போது சுற்றுலாப் பயணிகளும் இங்கு தங்குவதற்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் வசதி அமைக்கப்பட்டு வருகிறது.