வெறும் 34 கிலோமீட்டர் கொண்ட இந்த இடத்திற்கு ஏதாவது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் உலகப் பொருளாதாரமே சரியும் நிலைமை ஏற்படும் என்று சொன்னால் அந்த இடம் உலகிற்கு எவ்வளவு ஆபத்தானதாக மற்றும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அப்படி ஒரு இடம் தான் மொத்த உலகத்தையே தற்போது அச்சுறுத்தி வருகிறது.
'ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மஸ்' என்று சொல்லக்கூடிய நீர் அணை ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையே உள்ளது. ஸ்ட்ரெயிட் என்று சொன்னால் இரண்டு கடல்களை அல்லது பெரிய நீர்ப்பகுதிகளை இணைக்கும் ஒரு குறுகிய பாதை என்று அர்த்தம். நமது பூமி 70% பெரும் கடல்களால் சூழப்பட்டுள்ளது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். மேலும் 80% எல்லா வர்த்தகமும் இந்த பெருங்கடலில் தான் நடைபெறுகிறது. அதாவது இந்த கடல்களில் எந்த நேரமும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த பெருங்கடல்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் பூமியில் இயற்கையாகவே நீர் அணைகள் என்று சொல்லப்படும் ஸ்ட்ரெய்ட்ஸ் உருவாகி இருக்கும். ஏதாவது ஒரு காரணத்தால் இந்த நீர் அணைகள் தடுக்கப்பட்டால் உலகத்துக்கே பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு மார்ச் 2021 ஆம் ஆண்டு ஒரு சரக்கு கப்பல் சூயஸ் கேனலில் ஆறு நாட்கள் சிக்கியது. இதனால் இந்த கேனல் வழியாக செல்லும் போக்குவரத்து அனைத்துமே துண்டிக்கப்பட்டது. இந்த ஒரு நிகழ்வு உலகம் முழுவதும் பத்து மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. இதுபோலவே பூமியில் நிறைய நீர் அணைகள் இருக்கின்றன.
குறுகிய பாதை கொண்ட நீர் அணைகளை ஆங்கிலத்தில் 'சோக் பாயிண்ட்' எனவும் கூறுவர். அட்லாண்டிக் மட்டும் பசிபிக் பெருங்கடலின் வர்த்தகத்தை கட்டுப்படுத்த 'பனாமா கேனல்' இருக்கிறது. பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலின் வர்த்தகத்தை கட்டுப்படுத்த 'ஸ்ட்ரைட் ஆஃப் மலாகா' இருக்கிறது. ஆப்பிரிக்காவிற்கு செல்லும் வர்த்தகத்தை கட்டுப்படுத்த 'கேட் ஆஃப் குட் ஹோப்' இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே 'ஸ்ட்ரைட் ஆஃப் ஹார்மஸ்' போன்று ஆபத்தானது இல்லை.
'ஸ்ட்ரெயிட் ஆப் ஹார்மரஸ்' பெர்சியன் கல்ஃப் மற்றும் கல்ஃப் ஆஃப் ஓமனை இணைக்கும் வெறும் 34 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இடம். இந்த உலகின் அனைத்து கப்பல்களும் பூமியின் மற்ற இடங்களுக்கு போக இந்த வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பரைன், கட்டார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற 8 நாடுகள் அவர்களின் கடற்கரையை பெர்சியன் கல்ஃப் உடன் பகிர்ந்து கொள்வதால் இது ஒரு முக்கியமான இடமாக கருதப்படுகிறது.
சில நாடுகளின் முக்கிய அடையாளமே அவர்களிடம் இருக்கும் எண்ணெய் இருப்புகள் தான். எண்ணெய் இந்த முழு உலகத்திற்கும் ஒரு முக்கியமான எனர்ஜி சோர்ஸ் ஆகும். உலகின் 33% ஆற்றல் நுகர்வு( energy consumption) எண்ணெயை சார்ந்த தான் இருக்கிறது. அது போக்குவரத்து தேவைக்காகவோ அல்லது மின்சாரத்தை தயாரிக்கும் இயந்திரங்களுக்காகவோ அனைத்திற்குமே எண்ணெய் ஒரு முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
உலகின் பல தொழிற்சாலைகள் 70 சதவீதம் எண்ணெயை வைத்துத்தான் இயக்கப்படுகிறது. உலகின் 50% எண்ணெய் இருப்புகள் ஸ்ட்ரைட் ஆஃப் ஹார்மஸில் தான் உள்ளன. இந்த இடம் தடுக்கப்பட்டால் உலகிற்கு கிடைக்கக் கூடிய 4% கச்சா எண்ணெயில் 1% கிடைக்காது. அதனால்தான் இந்த இடத்தை கட்டுப்படுத்தினால் மூன்றாம் உலகப் போர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.
தற்போது ஹெஸ்புல்லா தலைவரின் மரணத்திற்கு பிறகு ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இவர்களுக்கிடையே ஆன மோதல் உலக எண்ணை விலையை ஏற்கனவே பாதித்துள்ளது. இஸ்ரேல் தனது பரம எதிரியான ஈரானின் தாக்குதலுக்கு பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.
ஒருவேளை ஈரான் தனது எண்ணை வர்த்தகத்தை நிறுத்தி விட்டால் உலகமே கடும் பொருளாதார சரிவை சந்திக்கப் போவது மட்டுமின்றி மூன்றாம் உலகப்போர் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.