புனித யாத்திரைக்கான ஸ்தலங்களில் குறிப்பிடத்தக்க ஸ்தலமாக கைலாய மலை உள்ளது. சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் கைலாய மலை பல வியக்க வைக்கும் மர்மங்களை தன்னுள் கொண்டுள்ளது. சமணம், பௌத்தம், இந்து மற்றும் போன் மதம் போன்ற நான்கு மதங்களால் புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. மகா சிவராத்திரியில் சிவ பக்தர்கள் கைலாஷ் மானசரோவருக்கு படையெடுப்பது அதிகம்.
ஆனால் இங்கு மலை ஏறுவது அவ்வளவு எளிதல்ல. இம்மலையில் நிறைந்திருக்கும் மர்மங்கள் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் தன் உயிரை பணயம் வைத்துத்தான் செல்ல வேண்டும்.
கைலாய மலையின் மர்மங்கள்:
1. கடினமான பாதை: 6638 மீ உயரத்தில் முழுக்க முழுக்க பணியால் சூழ்ந்த படி அமைந்துள்ளது கைலாய மலை. எவரெஸ்ட் மலையை விட சிறியதாக இருந்தாலும் இந்த மலையின் உச்சியை அடைவது மிக மிகக் கடினம் என்று இங்கு பயணித்தவர்கள் கூறுகிறார்கள். சிலர் பாதி வழியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரணித்த சம்பவங்களும் நிறைய உள்ளது.
2. உச்சியை அடைந்த ஒரே நபர்: வரலாற்றிலேயே முதல்முறையாக கைலாய மலையை முற்றிலுமாக ஏறியவர் ஒருவர் மட்டுமே. அவர்தான் புத்த துறவியான மிலரெபா. எப்பேர்ப்பட்ட மனிதனாலும் சாத்தியப்படாத செயல் இவரால் மட்டும் எப்படி முடிந்தது? ஆரம்ப கால கட்டங்களில் இவர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர். இருந்தும் தன் தவறுகளை திருத்திக் கொண்டு, பல ஆண்டுகள் கடுமையான துறவம் மேற்கொண்டு திபெத்திய முனிவரானார்.
நம் அனைவருக்கும் தெரிந்த போதி தர்மர் கூட இவரை சந்தித்த பிறகு தான் முக்தி அடைந்தார். தனது கடுமையான பக்தியினால் கைலாய மலையை வெற்றிகரமாக அடைந்தவர் மிலரெபா. பயணத்தை முடித்த மிலரெபா யாரையும் இனிமேல் இந்த மலையில் ஏற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால், இந்த மலையில் கால்வைப்பது இம்மலையை உறைவிடமாக கொண்டிருக்கும் சிவனின் அமைதியை கலைப்பது போன்றது என்றுள்ளார்.
3. இளமை டூ முதுமை: ஒருமுறை சைபீரிய மலை ஏறுபவர்கள் ஒரு குழுவாக கைலாய மலையில் பயணம் மேற்கொண்டபோது அவர்களுக்கு கால் மற்றும் கை நகங்கள் மிக வேகமாக வளர தொடங்கின. அவர்களுக்கு சில மணி நேரம் என்பது பல வாரங்கள், மாதங்கள் ஆனது போன்று உணர்வு ஏற்பட்டது. தலை முடி நரைக்க ஆரம்பித்தது. உடனே நிலமை மோசமாக ஆரம்பித்ததால் மலை ஏறுவதை நிறுத்திவிட்டு வீடு திரும்பினர். வெறும் ஒரு வருட காலத்திலேயே முதுமையினால் ஒவ்வொருவராக உயிரிழந்த சம்பவம் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. இதற்கான காரணத்தை இதுவரை எந்த விஞ்ஞானியாலும் கண்டறிய முடியவில்லை.
4.ஓம் என்ற சத்தம்: கைலாயத்திற்கு பயணம் செய்தவர்கள் கூறும் கதைகளில் ஒன்று 'ஓம்' என்ற சத்தம் மலைகளில் இருந்து கேட்கப்படுவது. இதைக் கண்ட விஞ்ஞானிகளே வியந்து போய் உள்ளனர். கைலாயத்தில் இருக்கும் பல விஷயங்களுக்கு காரணமோ விடையோ யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 'இது எல்லாம் வல்ல சிவபெருமானின் செயல்' என்று சிவ பக்தர்கள் கூறுகின்றனர்.
5. மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை மலை: கைலாய மலையின் கட்டமைப்பு இயற்கையாக உருவான மலை போன்று இல்லாமல் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது போன்று இருக்கும். ஏனெனில், இயற்கை நிகழ்வினால் இது போன்ற கூர்மையான படிக்கட்டுகள் போன்று மலைகள் உருவாவது சாத்தியம் இல்லை. விஞ்ஞானிகள் கூறுவது கைலாஷ் உண்மையில் மனிதனால் உருவாக்கப்பட்ட வெற்றிட பிரமிடு என்றும் 100 க்கும் மேற்பட்ட சிறிய பிரமிடுகளால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
6. நிறம் மாறும் கைலாயம்: மலைப் பயணத்தில் மிகவும் பிரம்மிக்க வைப்பது கைலாய மலையில் மாறிவரும் நிறங்களைக் காண்பது. காலை நேரங்களில் வெள்ளை நிறமாகவும், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தில் தங்கமாகவும், சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் தோன்றுகிறது.
இத்தனை அம்சங்கள் கொண்ட மலையில் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், இங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகள் அனைத்தும் சிவபெருமானின் லீலைகள் என்று அறியும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.