டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்பதால் NATO, ரஷ்யா-உக்ரைன் மோதல், மற்றும் மத்திய கிழக்கு, ஈரான்-இஸ்ரேல் உறவுகள் ஆகியவற்றில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அது பற்றி இங்கு காண்போம்.
NATO வை பற்றிய சந்தேகம்
ட்ரம்ப் அவர்களின் முதல் ஆட்சி காலத்திலேயே நேட்டோ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “நீங்கள் பாதுகாப்புக்கு செலவழிக்காதீர்கள், உங்களுக்காக நாங்கள் மட்டும் செலவழிக்க முடியாது” என்று ஐரோப்பிய நாடுகளை கடுமையாகப் பேசியது நினைவிருக்கலாம். நட்டோவிலிருந்து அமெரிக்கா விலகினால், அது உலக அரசியலில் மாற்றங்களை உருவாக்கும். பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை நம்பி பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன என்பதால், அமெரிக்கா உடன்படிகையை விலக்கினால், ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போர் தாக்கம்
ட்ரம்ப் திரும்ப ஆட்சிக்கு வருவதால், ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறைவாக இருக்கலாம். இது ரஷ்யாவுக்கு நன்மை பயக்கும் சூழல் உருவாக்கக்கூடும். இல்லையெனில் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.
மத்திய கிழக்கில் Trump
மத்திய கிழக்கு பிரச்சினையில் ட்ரம்ப் மீண்டும் ஈரானுக்கு எதிரான தனது கொள்கைகளை வலுப்படுத்துவார். இது ஈரான்-இஸ்ரேல் உறவுகளில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும். இது இஸ்ரேலுக்கு சாதகமாக அமையும். அவரின் முந்தைய ஆட்சியில் உருவான "அப்ரஹாம் ஒப்பந்தம்" மூலம், இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஆட்சி பின்பற்றும் வழியில், ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது அடக்குமுறை போடலாம்.
சீனாவுடன் Trump
ட்ரம்ப் மீண்டும் அதிபராக வருவதால் சீனாவுக்கு விதிக்கப்படும் வர்த்தக கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அவர் சீனாவிலிருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார மோதல்கள் மேலும் அதிகரிக்கும்.
ட்ரம்ப் பசிபிக் பகுதியில் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவின் பாதுகாப்பு பங்கை வளர்த்தார். அவர் மீண்டும் வெற்றி பெற்றதால், தைவான் மற்றும் இந்தியா – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ உளவுத்துறை செயல்பாடுகள் அதிகரிக்கலாம். இதுவே சீனாவுக்கு எதிரான சூழலாக உருவாக்கும். ட்ரம்ப் சீனாவைச் சுற்றி சக்திவாய்ந்த நாடுகளின் வலையமைப்பை உருவாக்குவார்.