Monday 23rd of December 2024 - 06:52:37 PM
விக்னேஷ் சிவனை ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள். அப்படி என்ன நடந்தது?
விக்னேஷ் சிவனை ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள். அப்படி என்ன நடந்தது?
Kokila / 02 டிசம்பர் 2024

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கஷ்ட காலம் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் இவர்களை ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர்.

 அக்டோபர் மாதம் நெட்ஃளிக்ஸில் ரிலீஸ் ஆனது நயன்தாராவின் ஆவணப்படம் "பியாண்ட் தி ஃவேரி டேல்". அந்த ஆவணப் படத்தில் வரும் சில காட்சிகள் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தில் வந்தவை. அந்த காட்சிகளுக்காக நடிகர் தனுஷ் தனது அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி, சுமார் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருந்தார். அந்த வழக்குக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்காத நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பற்றிய இன்னொரு விஷயம் பேசும் பொருளாக மாறி தனது டுவிட்டர் அக்கவுண்ட்டையே நீக்கும் அளவிற்கு நடந்துள்ளது.

2012 இல் போடா போடி படத்தில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய 'நானும் ரவுடிதான்' படம் பெரிய ஹிட் கொடுத்தது. அதே ஜோடியை வைத்து எடுத்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும் ஓரளவிற்கு ஹிட்டானது. கூட்டி கழித்துப் பார்த்தால் சுமார் ஐந்து படங்கள் கூட வராது. அவர் இயக்கும் படங்கள் முற்றிலும் பொழுதுபோக்கு அம்சம் உடையவை. தற்போது 2025 இல் வெளியாக இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டியை வைத்து இயக்கியுள்ளார். இது ஒரு சை-ஃபை ரொமான்டிக் காமெடி படம் என்று கூறப்படுகிறது.

தற்போது கலாட்டா பிளஸ் என்ற யூடியூப் தளத்தில் 'பேன் இந்தியா டைரக்டர்ஸ் ரவுண்டு டேபிள் மீட்' நடந்தது. இதில் மஞ்சமல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம், அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பெரிய படங்களை கொடுத்த இயக்குனர்கள் சிலர் கலந்து கொண்டனர். இதில் 2024 இல் எந்த படத்தையும் கொடுக்காத விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டது நாற்காலி சும்மா இருக்கு, வந்து உட்காருங்க என்பதைப் போல ஆயிற்று.

விக்னேஷ் சிவன் பேசியது, "நடிகர் அஜித் நானும் ரவுடிதான் படத்தை பார்த்துவிட்டு என்னை தொடர்பு கொண்டார். தான் பெரிதாக படங்கள் பார்ப்பதில்லை என்றும் 'நானும் ரவுடிதான்' படத்தில் வரும் பார்த்திபன் கதாபாத்திரம் அவரை கவர்ந்ததாகவும் கூறினார். நான் அந்த கதாபாத்திரத்தை வைத்து 'ஆவேசம்' படத்தைப் போன்ற கதை ஒன்றை தயாரிப்பாளரிடம் சொன்னேன், ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "

என்னதான் புரியும்படி பேசினாலும் அந்த நிகழ்ச்சிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்பது தான் நிதர்சனம். அந்த வீடியோவின் கீழ் உள்ள கமெண்ட் செக்சன் முழுவதுமே விக்னேஷ் சிவனை திட்டி எழுதியிருந்தனர் நெட்டிசன்கள். அதில் சில " சிட்டி ஆர்மியில் ஒரு கருப்பு ஆடு, குரூப்ல டூப்பு விக்கி, தண்ணி கேன் போட வந்திருக்கார், நெப்போ ஹஸ்பண்ட் விக்கி"என்று கமெண்ட் செக்‌ஷன் முழுவதுமே விக்னேஷ் சிவனைப் பற்றி மட்டுமே இருந்தது. 

சமீபத்தில் தன்னுடைய டுவிட்டரில் இருந்து தன்னுடைய அக்கவுண்ட்டை நீக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். சமூக வலைதளங்களில் விக்கியைப் பற்றி பேசப்படும் நெகட்டிவ் விஷயங்களே காரணம் என்று பலர் கூறினாலும் அதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் கமுக்கமாக உள்ளார் விக்னேஷ் சிவன்.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ஜப்பான் சென்ற தமிழ் நடிகைகள். என்ன விசேஷம் தெரியுமா?
சினிமா / 05 நவம்பர் 2024
ஜப்பான் சென்ற தமிழ் நடிகைகள். என்ன விசேஷம் தெரியுமா?

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை தான் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் நெப்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி