ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புதின்.
ரஷ்யாவின் எட்டாவது அதிபர் தேர்தல் கடந்த மார்ச் 15 முதல் 17 வரை மொத்தம் மூன்று நாட்கள் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் 88.48 சதவீத வாக்குகளை பெற்று ரஷ்யாவின் 8வது அதிபராக பதவியேற்றார்.
புதினை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலாய் ஹர்டினோவ் 4.37 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. மற்ற எதிர்கட்சிகளான தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லாட்ஸ்கி, மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோர் சொற்ப சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. இந்த தேர்தல் முடிவுகளின்படி புதினுக்கு எதிராக பிரதான எதிர்கட்சி இல்லாத சூழ்நிலையை ரஷ்ய மக்கள் ஏற்படுத்துயுள்ளனர்.
2000-ம் ஆண்டு மே 7-7ம் திகதி முதல் முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்ற புதின் தொடர்ந்து 20 வருடங்கள் ரஷ்ய அதிபராக இருந்து வருகிறார். இடையில் 2008-ம் ஆண்டு மே 7-ம் திகதி முதல் 2012-ம் ஆண்டு மே 7-ம் திகதி வரை நான்கு ஆண்டுகள் த்மித்தி மெட்வடேவ் அதிபராக பதவி வகித்தார். அந்த நான்கு ஆண்டுகளும் புதின் ரஷ்யாவின் பிரதமராக இருந்தார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் இன்னும் 6 ஆண்டுகள் புதின் ரஷ்ய அதிபராக நீடிப்பார்.
இதுவரை நடந்த 8 ரஷ்ய அதிபர் தேர்தல் வரலாற்றில், புதின் மட்டுமே ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். முதல் அதிபராக மற்றும் இரண்டாவது அதிபராக 1991 முதல் 1999-ம் ஆண்டு வரை போரிஸ் எல்ட்ஷின் பதவி வகித்தார், அதன் பின் 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை புதினும், 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை த்மித்தி மெட்வடேவும் அதிபராக பதவி வகித்தனர். பின் 20012-ம் ஆண்டு முதல் புதினே மீண்டும் மீண்டும் அதிபராக வெற்றி பெற்று பதவியில் நீடித்து வருகிறார்.