ஈரன் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தொடர் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக இருக்குமோ என்ற பதட்டம் ஏற்பட்டு #WorldWar3 என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதளத்தில் ட்ரண்டாகி வருகிறது.
பல வருடங்களாக நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை கடந்த சில வருடங்களாகவே உச்சத்தை எட்டியுள்ளது. அதன் நீட்சியாக பாலஸ்தீனம் ஈரனுடனும் பகையை வளர்த்து போருக்கு தயார் நிலையிலே இருந்தது.
கடந்த 1ம் திகதி (2024 அக்டோபர் 1) ஈரன் இஸ்ரேல் மேல் நடத்திய திடீர் தாக்குதலால் சற்று பதட்டமடைந்த பாலஸ்தீன் பதிலடி தாக்குதலை பலமாக திட்டமிட்டு, ஒரு சர்ஜிக்கல் ஸ்டைல் அட்டாக்கை வெற்றிகரமாக நடத்தி உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் வாங்கியிருந்த அதிநவீன F-35 ரக விமானங்கள் இந்த தாக்குதாலை நிகழ்த்தியுள்ளன. 100-க்கும் அதிகமான இஸ்ரேல் போர் விமானங்கள் இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து இந்த தாக்குதலை அசாதாரணமாக சாத்தியப்படுத்தியுள்ளன.
உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன், ஈரனில் மக்கள் வாழும் பகுதிகள், எண்ணெய் மற்றும் அணு உற்பத்தி மையங்களை கவனமாக தவிர்த்து விட்டு, முக்கிய ராணுவ தளவாடங்கள் மற்றும் இலக்குகளை குறி வைத்து தாக்கியுள்ளது இஸ்ரேல்.
தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டதாகவும் தற்பொழுது தாக்குதல் நிறைவுபெற்றதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ள போதும், ஈரன் மற்றும் அதன் நட்பு நாடுகள் என்ன மாதிரியான எதிர்வினையாற்றுவார்கள் என எச்சரிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறாது இஸ்ரேல்.
ஈரன் மட்டுமின்றி அதன் அண்டை நாடுகளான சிரியா மற்றும் ஈரக்கையும் ஒரு கை பார்த்து விட்டது இஸ்ரேல். எனவே, இஸ்ரேலுக்கு பதிலடி பலமாக இருக்கும் என்ற பதட்டம் உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் உக்ரைனுடன் உக்கிரமாக மோதிக் கொண்டே, அமெரிக்காவுடன் ஒரு நீண்ட மோதலுக்கு தயாராக வேண்டும் என்று அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் உலக தலைவர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வட கொரியா தென் கொரியா இடையேயான பல வருட பகை, இருநாட்டு பார்டர்களில் போர் மேகங்களை மொத்தமாக கூட்டி வைத்துள்ளது. மற்றொரு பக்கம் சீனா-தைவான் மோதல் முற்றி, மூச்சு விட முடியாதபடி தைவானை சுற்றி வளைத்து ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா போல் போருக்கு தயாராகி வரும் உலக நாடுகளின் நடவடிக்கை மூன்றாம் உலகப் போருக்கான முன்னுரையை முடித்து விட்டு, மெயின் கண்டெண்டிற்குள் காலடி எடுத்து வைத்து விட்டதாகவே உலக அரசியல் பார்வையாளர்கள் கருதிகிறார்கள்.
இந்நிலையில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாம் உலகப் போரை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தில் #WorldWar3 என்ற ஹேஷ்டேக், எக்ஸ் வலைத்தளத்தில் வேகமாக ட்ரண்டாகி வருகிறது.