உத்ரபிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டம் முத்திகாஞ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கேசர்வானி. 63 வயதான ராஜேந்திர கேசவானி டிம்பர் மர கட்டைகள் வியாபாரம் செய்து வந்தார்.
ராஜேந்திர கேசவானியின் மகன் அன்ஷூ கேசர்வானி-க்கு (27 வயது) கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா (21 வயது) என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் பெற்றோர்கள்.
50 லட்சம் செலவில் மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்திய அன்ஷிகாவின் பெற்றோர், 16 லட்சம் மதிப்புள்ள கார் உட்பட, ஷிவானி தனிக்குடித்தனம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சீராக கொடுத்துள்ளனர்.
ஆனால், திருமணத்திற்கு பின் தனிக்குடித்தனம் செல்லாமல் தன் குடும்பத்துடனேயே வசித்து வந்துள்ளார் அன்ஷு. அதற்கு அன்ஷிகாவும் எந்த ஆட்சேப்பனையும் தெரிவிக்கவில்லை.
தந்தையின் டிம்பர் மர வியாபாரத்தை கவனித்து வந்த அன்ஷு, தங்கள் வீட்டின் தரை தளத்தை மர வியாபார கடையாகவும், அடித்தளத்தை மரங்களை அடுக்கி வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வந்தனர்.
மொத்தம் மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு படுக்கை அறைகள் இருந்தன. அன்ஷீ மற்றும் அன்ஷிகா தம்பதிகள் முதல் மாடியில் வசித்து வந்தார். அன்ஷுவின் சகோதரி ஷிவானி இரண்டாவது மாடியில் வசித்து வந்தார்.
வழக்கமாக, இரவு 8 மணிக்கு அன்ஷிகா இரவு உணவிற்காக தரை தளத்திற்கு வருவார். ஆனால், சம்பவத்தன்று (2024 மார்ச் 19-ம் திகதி) அவர் இரவு உணவிற்கு கீழே வரவில்லை. அவர் தூங்கியிருப்பார் என அன்ஷு குடும்பத்தினர் நினைத்தார்கள்.
இரவு 10 மணியளவில் அன்ஷூ கடையில் இருந்து வந்ததும், அவர் தனது மனைவி அன்ஷிகாவை அழைக்க மாடிக்கு சென்றார்.
கதவு உள்பக்கமாக பூட்டியிருக்க, அன்ஷு அறைக் கதவை தட்டியுள்ளார். ஆனால், உள்ளேயிருந்து பதில் வராததால் தொடர்ந்து கதவை பலமாக தட்டி சத்தமாக அன்ஷிகாவை அழைத்துள்ளார். ஆனால், உள்ளேயிருந்து பதில் வராததால், கதவிற்கு மேல் இருந்த கண்ணாடியை உடைத்து அறைக்குள் நுழைந்துள்ளார் அன்ஷு.
அன்ஷுவின் சத்தம் கேட்டு கீழே இருந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வேகமாக மேலே மாடிக்கு ஓடி வந்தனர்.அனைவரும் அறைக்குள் சென்று பார்த்த பொழுது, உள்ளே அன்ஷிகா தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
அன்ஷூவும் அவரது மாமாவும் உடனடியாக அருகில் இருந்த போலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும், அன்ஷுவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர் அன்ஷூ குடும்பத்தினர்.
தகவல் அறிந்த அன்ஷிகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலர் அன்ஷீவின் வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்ய தொடங்கினார்கள்.
வரதட்சனை கேட்டு கொடுமை செய்தே தன் மகள் அன்ஷிகாவை அடித்து கொலை செய்த பின் தூக்கில் தொங்க விட்டுள்ளார்கள் அன்ஷு குடும்பத்தினர் என குற்றம் சாட்டிய அன்ஷிகாவின் தந்தை அம்ற்றும் உறவினர்கள் அன்ஷு குடும்பத்தினரை தாக்க தொடங்கினார்கள். அங்கிருந்த அன்ஷுவின் உறவினர்கள் பதில் தாக்குதல் நடத்த அந்த இடத்தில் இரு குடும்பத்திற்கும் இடையில் பெரும் கைகலப்பு நடந்தது.
அப்பொழுது அன்ஷிகாவின் தற்கொலை குறித்து தகவல் பெற்றி அன்ஷுவின் வீட்டிற்கு வந்த போலிஸ், அடிதடியில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர்.
அன்ஷிகாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் புகுந்து அன்ஷிகாவின் சடலத்தை வெளியில் கொண்டு வந்தனர். பின் அன்ஷுவின் வீட்டிற்கு தீ வைத்தனர் அன்ஷிகாவின் குடும்பத்தினர்.
வீட்டின் அடித்தளத்தில் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவி வீட்டை சூழ்ந்து கொண்டது. அன்ஷுவின் சகோதரிஷிவானி, அவரது பெற்றோர்கள், மற்றும் அத்தை ஆகியோர் வீட்டிற்குள் தீயில் மாட்டிக் கொண்டனர். இரண்டாவது மாடியில் இருந்த கண்ணாடி ஜன்னல்களை உடைத்து அதன் வழியாக அருகில் இருந்த ஷிவானியின் மாமா வீட்டிற்கு சென்று விட்டனர் ஷிவானியும் அவரது அத்தையும். ஆனால், ஷிவானியின் பெற்றோர் (தந்தை ராஜேந்திர கேசர்வானி மற்றும் தாய் ஷோபா தேவி) அவர்களது வீட்டில் தீயில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரமாக போராடி தீயை அணைத்தனை. அதிகாலை மூன்று மணியளவில் தீயை அணைத்த பின் வீட்டிற்குள் நுழைந்த தீயணைப்பு படையினர் தீயில் மாட்டி இறந்து கருகியிருந்த ஷிவானியின் வயதான பெற்றோரின் (தந்தை ராஜேந்திர கேசர்வானி மற்றும் தாய் ஷோபா தேவி)சடலங்களை கைப்பற்றினர்.
பெற்றோரை இழந்து தனிமையில் வாடும் ஷிவானி கொடுத்த புகாரின் அடிப்படையில், அன்ஷிகாவின் தந்தை மாமா மற்றும் அவர்களது மகன்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 50 பேர் பற்றி போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அன்ஷிகாவை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்து விட்டனர் என்று அன்ஷிகாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று தலைமறைவான அன்ஷு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வெளியில் வந்தால் அன்ஷிகாவின் குடும்பத்தினர் அவரை கொலை செய்து விடுவார்கள் என அன்ஷுவின் சகோதரி ஷிவானி அச்சப்படுகிறார்.
அதேசமயம், அன்ஷிகாவின் குடும்பத்திபர் மிகவும் நல்லவர்கள். அவர்கள் யாருக்கும் தீங்கு செய்பவர்கள் அல்ல என அவர்களது அண்டை வீட்டார் மற்றும் உள்ளூர்வாசிகள் தகவல் சொல்லுகின்றனர்.