சிறு வயதில் பெரிய சேட்டைகளை செய்யும் குழந்தைகளை நாம் "பிஞ்சிலே பழுத்தது" என வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆனால் அதுவே ஒரு சோக கதையாக நிகழ்ந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை பெரும் சுமையாக மாற்றிய வரலாறுதான் இது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான் பெரு நாட்டில், டிக்ரபோ என்ற மிக சிறிய கிராமத்தை சேர்ந்தவர் லீனா மெடினா. 1933ம் ஆண்டு, விக்டோரியா லோசியா - திபுரேலோ மெடினா தமபதிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தவர்தான் லீனா மெடினா.
எல்ல குழந்தைகளௌ போலவே மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாடி திரிந்த லீனா மெடினா, இரண்டரை வயதில் என்ன ஏது என்று புரியாமலேயே தனது முதல் மாதவிடாயை எதிர்கொண்டார். இரண்டரை வயதில் மாதவிடாய் என்பது ஒரு ஆச்சர்யமான அதே சமயம் அதிர்ச்சியான் விடயமாக இருந்தாலும், லீனா மெடினாவின் பெற்றோர் இது ஏதும் காயத்தால் ரத்தம் வெளியேறியிருக்கும் என நினைத்து, இதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், அன்றைய காலகட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் லீனா மெடினாவின் குடும்பம் வசித்து வந்தது மிகவும் பின்தங்கிய கிராமம்.
1939-ம் ஆண்டு, அதாவது லீனா மெடினாவின் 5வது வயதில் அவரது வயிறு வீங்க தொடங்கியது. லீனா மெடினாவின் பெற்றோர் வழக்கம் போல் இதை பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கடந்து போக, ஓரிரு மாதங்களில் லீனா மெடினாவின் வயிறு சற்று பெரிதாக வீங்கி நடப்பதற்கே சிரமம் பட தொடங்கினாள் சிறுமி லீனா மெடினா. குழந்தை அன்றாடம் சிரமப்படுவதை பார்த்த பெற்றோருக்கு லேசாக பதட்டம் தொற்றிக் கொண்டது. வயிற்றில் ஏதும் கட்டி வளருகிறதோ என்ற அச்சத்தில் அருகில் இருந்த பிஸ்கோ நகரத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களிடம் லீனா மெடினாவின் வயிற்றை காட்டினார்கள்.
மருத்துவர்களும், வயிற்றில் ஏதும் கட்டி வளருகிறதோ என்ற சந்தேகத்துடனேயே பரிசோதனைகளை செய்தார்கள், ஆனால் கடைசியில் அவர்கள் கண்டுபிடித்த விடயம் அந்த மருத்துவர்கள், லீனா மெடினாவின் பெற்றோர் மட்டுமின்றி எதிர்காலத்தில் ஒட்டு மொத்த உலகத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், ஐந்து வயது சிறுமி லீனா மெடினா ஏழு மாத கர்ப்பமாக இருந்தாள்.
மருத்துவர்கள் இந்த அதிர்ச்சி தகவலை சொன்ன பின்தான் லீனா மெடினாவின் பெற்றோர் தங்கள் தவறை உணர்ந்தார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு லீனா மெடினா இரண்டரை வயதி சந்தித்த மாதவிடாய் பற்றிய நினைவு வர, பதட்டத்துடன் மருத்துவர்களிடம் அந்த விடயத்தை விளக்கினார்கள்.
என்ன ஒரு புத்திசாலித்தனம்? என தலையில் அடித்துக் கொண்ட மருத்துவர்கள். லீனா மெடினாவிடம் மெல்ல விசாரிக்க தொடங்கினார்கள். ஆனால், சிறுமி லீனா மெடினா மெடினாவால் தனக்கு என்ன நடந்தது என்பதை விளக்கமாக சொல்ல முடியவில்லை. காரணம் அந்த பிஞ்சு வயதில் அவளுக்கு எதனால் இப்படியெல்லாம் நடந்தது என்பது புரியவில்லை, தனக்கு நடந்த சம்பவங்களில் எதெல்லாம் இந்த வயிற்று பிரச்சினையுடன் தொடர்புடையது என பகுத்தறியும் வயதில்லை அவளுடைய வயது.
ஆனால், விவகாரம் போலிஸ் ஸ்டேஷன் வரை செல்ல, போலிஸ் டிக்ரபோ கிராமத்தில் லீனா மெடினாவின் அண்டை வீட்டர், உறவினர்கள் என லீனா மெடினா சம்மந்தப்பட்ட அனைவரையும் விசாரித்தார்கள். ஆனால், கடைசி வரை போலிசால் இந்தா மாபெரும் பாதகத்தை செய்தவனை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், சில பல தகவல்கள் மற்றும் ஊகங்கள் அடிப்படையில், லீனா மெடினாவின் தந்தை திபுரேலொ மெடினாவை கைது செய்தனர்.
வெள்ளி கொல்லராக வேலை பார்த்து வந்த தந்தை திபுரேலோ மெடினா, குழந்தை லீனா மெடினாவிற்கு சிறு வயது முதலே பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். அதனாலேயே சிறுமி லீனா மெடினா இரண்டரை வயதிலேயே பருவமடைந்து விட்டாள். விசயம் வெளியில் தெரிந்தால் விவகாரமாகி விடும் என்பதால், தந்தை திபுரேலொ மெடினா தன் மனைவி விக்டோரியாவை மிரட்டி, லீனா மெடினா பருவமடைந்த விசயத்தை வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் அடைத்து விட்டார்.
ஒரு மாபெரும் தவறு செய்து விட்டோம், இனிமேலாவது தவறு செய்யாமல் இருப்போம் என நினைக்காமல், தொடர்ந்து தன் பாலியல் துஷ்பிரயோகங்களால் லீனா மெடினாவை வதைத்துக் கொண்டிருந்திருக்கிறார் திபுரேலோ மெடினா. அதனாலேயே லீனா மெடினா ஐந்து வயதில் கர்ப்பமாகியுள்ளார். ஆரம்பத்தில் லீனா மெடினாவின் கர்ப்பம் பற்றி அறிந்திராத திபுரேலோ, சில மாதங்களில் லீனா மெடினாவின் வயிறு வீங்குவதை பார்த்து சந்தேகம் கொள்ளும் பொழுது, எல்லாம் எல்லை மீறி, திபுரேலோ மெடினாவின் கைகளை மீறி சென்று விட்டது. விட்டால் உயிருக்கு ஏதும் பிரச்சினையாகி, தனக்கு பெரும் பிரச்சினையாகி விடும் என்ற அச்சத்தில், மகள் லீனா மெடினா மற்றும் மனைவி விக்டோரியா இருவரையும் மிரட்டி, நடந்தவற்றை வெளியில் சொல்ல கூடாது என கட்டுப்பாடுகள் விதித்த பின்னே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் திபுரேலோ.
அப்பாவின் மிரட்டலுக்கு பயந்தே மகள் லீனா மெடினா, தனக்கு நடந்தவை பற்றி மருத்துவர்கள் மற்றும் போலிஸிடம் சொல்ல தயங்கினாள் அல்லது பயந்தாள்.
இவ்வளவு விளக்கங்களுடன் திபுரேலோ மெடினாவை கோர்ட்டில் நிறுத்திய போலிஸால், இவை அத்தனையையும் நிரூபிக்கும் போதிய ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, திபுரேலோ குழந்தை லீனா மெடினாவை பாலியல் வண்புனர்வு செய்தார் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு, திபுரேலோ விடுதலை செய்யப்பட்டார்.
இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க. மறுபக்கம், லீனா மெடினாவின் கர்ப்பம் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது வாரம் 1939-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி சிசேரியன் மூலம், குழந்தை லீனா மெடினா ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
அப்பொழுது லீனா மெடினாவின் வயது, 5 வருடம் 7 மாதம் 21 நாட்கள். லீனா மெடினாவிற்கு சிசேரியன் செய்த மருத்துவர்கள், லொஸோடா, பொஸல்லு, மற்றும் கொல்லரேட்டா.
குழந்தை லீனா மெடினாவின் மகனுக்கு சிசேரியன் செய்த மருத்துவர்களே ஜெரர்டோ என பெயரிட்டார்கள். ஜெரார்டோ பிறக்கும் பொழுது 2.7 கிலோ கிராம் எடையில் இருந்தான். மருத்துவர் லொஸோடா ஜெரார்டை தத்தெடுத்துக் கொண்டார், லிமா நகரில் இருந்த தனது கிளினிக்கில் லீனா மெடினாவிற்கு ஒரு வேலையை போட்டுக் கொடுத்து, தாய் மற்றும் மகன் என இரண்டு குழந்தைகளையும் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டார் மருத்துவர் லொஸோடா.
நல்லபடியாக வளர்ந்த ஜெரார்டோ 1979-ம் ஆண்டு தனது 40 வயதில் எலும்பு புற்று நோயால் இறந்து போனார்.
தற்பொழுது 91 வயதாகும் லீனா மெடினா, பெரு நாட்டின் ஒரு மூலையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
முன்கூட்டியே பருவமடைதல்:
குழந்தை பருவம் அல்லது சிறு வயதிலேயே ஒரு நபர் பருவமடைவது என்பது அசாதாரண நிகழ்வு. இதற்கான காரணங்களாக மருத்துவர்கள் குறிப்பிடுவது ஹார்மோன்களின் வளர்ச்சி அல்லது சிறு வயதிலேயே பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது.
8 வயதிட்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மார்பகம் வளர்வது, மாதவிடாய் துவங்குவது, மற்றும் 9 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு மீசை வளர்வது போன்றவை முன்கூட்டிய பருவமடைதலாக கருதப்படுகிறது. இப்படியே முன்கூட்டிய பருவமடிதலை சந்திக்கும் குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சி தடைபட்டு, உயரம் குறைவாகவும், உணர்வுகள் விரைவில் முதிர்ச்சியடைவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கொரனா காலகட்டம், லாக்டவுன் சமயத்தில் உலகில் 500 பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையும், 2000 ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையும் முன் கூட்டியே பருவமடைந்ததாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.