தங்கள் நாட்டு குடிமக்களை 'குடி'மக்களாக மாறாமல் இருக்க வேண்டும் என பல நாட்டு அரசாங்கமும் தங்கள் நாடுகளில் மது புழக்கத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், 'குடி' மனிதனின் அடிப்படை உரிமை, நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன, உன் வாழ்க்கை உன் கையில் என சொல்லி, மதுவை மடை திறந்த வெள்ளம் போல் அனுமதித்து, குடிமக்களை 'குடி'மக்களாக வாழ அனுமதித்துள்ள நாடுகள் பல. அப்படி மதுவை சர்வ சாதாரணமாக அனுமதித்துள்ள நாடுகளில், தங்கள் போதை உரிமையை நிலை நாட்ட அல்லும் பகலும் அயராது குடித்து உலகில் தங்கள் நாட்டை அதிக சர்க்கடிப்பவர்கள் பட்டியலில் டாப் ஸ்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நாடுகளின்.
உலகளவில் அதிக ஆல்கஹால் பயண்படுத்தும் நாடுகளின் பட்டியல் ‘finance.yahoo’ என்ற இணைய தளம் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் டாப் இடங்களை பிடித்துள்ள நாடுகள்.
ஜெர்மனி:
ஹிட்லர், அதன் பின் கால்பந்து, இப்படி உலக பிரபலம் பெற்ற ஜெர்மனி, அதிக சரக்கடிக்கும் நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அமர்ந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக ஒரு ஜெர்மனிய குடிமகன் 12.22 லிட்டர் சரக்கை ஸ்வாஹா செய்கிறார்.
லாட்வியா:
இப்படி ஒரு நாடு இருக்கு என்பதை நமக்கு தெரியப்படுத்தியதே இந்த பட்டியல்தான். லாட்வியா குடிமகன்கள் சராசரியாக ஆண்டிற்கு 13 லிட்டர் மதுவை அருந்தி, தங்கள் நாட்டை பட்டியலில் நான்காவது இடத்தில் தக்க வைத்துள்ளனர்.
செக் குடியரசு:
கம்யூனிச கொள்கைகளுக்கு பேர் போன செக் குடியரசும் இந்த பட்டியலில் இருந்து தப்பவில்லை.செக் குடியரசு குடிமகன்கள் சராசரியாக ஆண்டிற்கு 13.29 லிட்டர் ஆல்கஹாலை அள்ளி பருகி ஆனத்தமடைகிறார்கள். பெரும் குடிகாரர்கள் பட்டியலில் செக் குடியரசு மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜார்ஜியா:
ஆண்டிற்கு சராசரியாக்க தனிநபர் மது அருந்தும் மது 14.33 லிட்டர் என்ற அளவுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஜார்ஜியா.
ருமேனியா:
பலருக்கும் இந்த நாடு பற்றி அதிகம் தெரியாது. ஐரோப்பாவில் உள்ள ருமேனியா நாட்டில் சராசரியாக தனி நபர் ஒருவர் ஆண்டிற்கு 17 லிட்டர் மது அருந்துவதாக புள்ளி விவரம் சொல்கிறது. அதிகம் சரக்கடித்து போதையில் தடுமாறும் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நாடு ருமேனியா.
டாஸ்மாக்கை எப்ப மூடுவ? என அரசை அனுதினமும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நம்ம இந்தியா இந்த பட்டியலில் டாப் 5-ல் வராமல் இருப்பதே பெரும் நிம்மதியாக இருந்தாலும். பட்டியலில் கடைசி இடம் கூட பெற முடியாதபடி டாஸ்மாக்கை மூடினால் பல குடும்பங்கள் பட்டினியில்லாமல் வாழ வழி கிடைக்கும்.