கதை சுருக்கம்: கேரளாவில் இருந்து பெங்களூருக்கு ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் படிக்க செல்லும் அஜு, பிபி மற்றும் ஷாந்தன் என்ற மூன்று மாணவர்களுக்கு சீனியர் மாணவர்களுடம் மோதல் ஏற்படுகிறது. லோக்கல் தாதா ரங்காவிடம் உதவி கேட்டு செல்கிறார்கள் அஜு, பிபி மற்றும் ஷாந்தன்.
2024-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் திகதி வெளியான 'ஆவேஷம்' திரைப்படம் கேரளா மட்டுமின்றி, பகத் பாசிலின் ஆவேச நடிப்பிற்காக இந்தியா முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக, பகத் பாசிலுக்கு பெரும் ரசிகர் பட்டளம் உள்ள தமிழ் நாட்டில்.
வழக்கம் போல் பகத் பாசிலின் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்து பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.
விரிவான கதை:
கேரளாவை சேர்ந்த அஜு (ஹிப்ஸ்டர்), பிபி (மிதுன் ஜெய்ஷங்கர்), மற்றும் ஷாந்தன் (ரோஷன் ஷானவாஸ்) மூன்று பேரும் ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் படிக்க பெங்களூரு செல்கின்றனர். BK ஹாஸ்டல் என்ற விடுதியில் தங்கி கல்லூரி செல்கின்றனர் மூவரும்.
ஜாலியாக சுற்றி திரியும் மூன்று பேரும் எதிர்பாராத சூழ்நிலையில் கல்லூரி சீனியர் குட்டி (மிதுட்டி) என்பவனுடம் மோதல் ஏற்படுகிறது. ஜினியர்கள் தன்னை சீண்டிவிட்ட ஈகோவால் குட்டி தனது நண்பர்கள் துணையுடன் அஜு, பிபி, மற்றும் ஷாந்தன் மூன்று பேரையும் தன்னுடைய இடத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கொடூரமாக தாக்கி விடுகிறான்.
அடி வாங்கிய அவமானத்தில் துடிக்கும் அஜு, குட்டி டீமை பழி வாங்க பொங்களூரு லோக்கல் பார்களில் சென்று ரவுடிகள் யாராவது இருக்கிறார்களா என தேடுகிறான்.
கர்நாடகாவில் செட்டிலான மலையாள தாதாவான ரங்காவின் (ஃபகத் பாசில்) நட்பை பெறுகிறார்கள் அஜு அண்ட் கோ. எப்பொழுதும் முழு வெள்ளை ட்ரஸில், உடல் முழுதும் நகைகளுடன், மிகவும் இரக்க குணம் கொண்ட தாதா ரங்காவை பயன்படுத்தி தங்கள் எதிரி குட்டியை பழிவாங்க முடிவு செய்கிறார்கள் அஜு அண்ட் கோ.
குட்டியையும் அவனது கூட்டாளிகளையும் தாதா ரங்கா அடித்து துவம்சம் செய்ய, அஜு அண்ட் கோ தாதா ரங்கா டீமுடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார்கள்.
தாதா ரங்காவுடனான பழக்கம் அஜு அண்ட் கோ-வின் படிப்பை பாதிக்க, கல்லூரி தேர்வில் பெயிலாகிறார்கள் அஜு அண்ட் கோ. இதனால், கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டு, தேர்வில் பாஸாக கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
அஜு அண்ட் கோ எப்படியும் பாஸாகி விட வேண்டும் என படிக்க தொடங்க, தாதா ரங்காவின் முன்னாள் பாஸ் ரெட்டியால் (மன்சூர் அலி கான்) கடத்தப்படுகிறார்கள் அஜு அண்ட் கோ.
ரங்காவை கொலை செய்ய அஜு அண்ட் கோ-வின் உதவியை கேட்கிறான் ரெட்டி. ஆனால் அங்கிருந்து தப்பிக்கும் அஜு அண்ட் கோ, ரங்காவிடம் சென்று ரெட்டி பற்றி தெரிவிக்கிறார்கள். மேலும் தாங்கள் குட்டியை பழிவாங்கவே ரங்காவிடம் நட்புடன் பழகியதாக சொல்கிறார்கள்.
ரெட்டி கேங்கை தனியாக சென்று வீழ்த்தும் ரங்கா, தான் அஜு அண்ட் கோ-வுடன் நெருங்கி பழக காரணம்: தன்னிடம் பழகிய எல்லோரும் எதையாவது எதிர்பார்த்தே பழகுவார்கள். ஆனால், அஜு அண்ட் கோ தன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் பழகியது என தான் நினைத்ததேயாகும். என சொல்கிறான்.
அஜு அண்ட் கோ தங்கள் செயலுக்காக மனம் வருந்துகிறார்கள். கல்லூரி தேர்வில் ஷாந்தன் மட்டும் பாஸாக, அஜு மற்றும் பிபி இருவரும் ஒவ்வொரு பாடங்களில் பெயிலாகி, இஞ்சினியரிங் முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
முழு கருப்பு உடையில் தோன்றும் அஜு மற்றும் பிபி இருவரையும் தேர்வில் பெயிலானதற்காக கல்லூரிக்கு வெளியில் நிற்க வைத்து விளையாட்டாக தண்டனை கொடுக்கிறான் தாதா ரங்கா.