கதை சுருக்கம்: 1930ம் ஆண்டுகளில். பிரிட்டிஷ் இந்தியாவில். ஜாதிய அடக்கு முறையிலிருந்து மீள பிரிட்டிஷ் படையில் இணையும் ஈசா (தனுஷ்), தன் சொந்த இந்திய நாட்டின் மக்களை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் ராணுவத்தில் இருந்து விலகி, புரட்சி படையில் இணைந்து தன் கிராம மக்களின் விடுதலைக்காக போரட தொடங்குகிறார்.
பிரிட்டிஷ் இந்தியாவில். 1930-ம் ஆண்டுகளில், ஜாதிய அடக்கு முறைகள் உச்சகட்டத்தில் இருந்த கிராமம் ஒன்றில் வாழும் அனலீசன் என்கிற ஈசா (தனுஷ்) உயர் குடிகளாக சொல்லிக் கொள்ளும் மற்ற ஜாதியினரை போன்றே தனக்கும் உரிமைகள் மற்றும் மரியாதை கிடைக்க வேண்டுமென்று நினைக்குறான்.
உள்ளூரில் அதற்கு வாய்ப்பிலை என முடிவு செய்து, பிரிட்டிஷ் இந்திய நாணுவத்தில் சேர்ந்தால் தனக்கு ஜாதிய இழிவுகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என நம்புகிறான். ஆனால், ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வரும் ஈசா-வின் அண்ணன் செங்கோலன் (ஷிவ் ராஜ்குமார்) ஈசாவின் ஆசையை எதிர்க்கிறான்.
மன்னர் ராஜாதிபதியின்(ஜெயபிரகாஷ்) மருமகளான வேல்மதியை (ப்ரியங்கா மோகன்) ஈசா காதலிக்கிறான். ஆனால் வேல்மதிக்கு இன்னொருவர் மேல் காதல் இருப்பதை அறிந்து அவளை மறந்து விடுகிறான். காதல் தோல்விக்கு பின் ராணுவத்தில் சேரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறான். அண்ணன் சென்கோலனின் எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும் ஈசா 'கேப்டன் மில்லர்' என்று அழைக்கப்படுகிறான்.
மில்லர் மற்றும் அவனது நண்பர்கள் ரஃபிக் (சந்தீப் கிஷன்), செம்பட்டா ஆகியோரை புரட்சியில் ஈடுபடும் இந்திய பொது மக்கள் பலரை சுட்டு கொலை செய்ய உத்தரவிடுகிறான் பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் புல்லர் (மார்க் பெனிங்டன்). வேறு வழியில்லாமல் அந்த மக்களை சுட்டு கொன்ற பின் அந்த மக்களின் சடலங்களை அப்ப்புறப்படுத்தும் பொழுது செம்பட்டா, தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களையே சுட்டு கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொள்கிறான்.
நண்பனின் மரணத்திற்கு பழிவாங்க ஜெனரல் புல்லரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயல்கிறான் மில்லர். மில்லரின் தற்கொலை முயற்சியை தடுத்து அவனை காப்பாற்றும் நண்பன் ரஃபிக், மில்லரை அவனது கிராமத்திற்கு திருப்பி அனுப்புகிறான்.
தன் சொந்த கிராமத்திற்கு திரும்பும் மில்லர், தனது அண்ணன் செங்கோலன் மற்றும் கிராமத்தினர் பலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் படைகளை படுகொலை செய்யப்பட்டு விட்டதை அறிகிறான். தங்கள் துயரங்களுக்கு காரணமான பிரிட்டிஷ் படையில் பணியாற்றிய மில்லரை கிராம மக்கள் திட்டி ஊரை விட்டு வெளியேற்றுகிறார்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு போராடி வரும் புரட்சியாளர்களுக்கு உதவி செய்கிறான் மில்லர். மில்லரின் உதவியால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதலை நிகழுத்துகிறார்கள் புரட்சி படையினர். தங்களுக்கு உதவிய மில்லரை தங்கள் புரட்சி படையில் இணைத்து கொள்கிறார்கள். புரட்சி படையில் இணையும் மில்லர் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராட தொடங்குகிறான்.
ஒரு தாக்குதலில் குண்டடி படும் மில்லருக்கு சிகிச்சையளிக்கிறாள் வேல்மதி. அந்த சமயத்தில் வேல்மதியின் கணவனும் பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டு விட்டதை அறிந்து கொள்கிறான் மில்லர். தனது கணவனின் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் கவர்னரின் மகன் ரிலேயை (அலெக்ஸ் ஓநெல்) கொலை செய்யும்படி மில்லரை கேட்டுக் கொள்கிறாள் வேல்மதி.
மன்னர் ராஜாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 600 ஆண்டுகள் பழமையான் விலைமதிப்பற்ற ரத்தினம் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் பிரிட்டிஷ் அரசு, ராஜாதிபதியின் மந்திரி கனகசபையின்(காளி வெங்கட்) உதவியுடன் அந்த ரத்தினம் சிவன் கோவிலின் அடியில் இருப்பதை அறிந்து கொண்டு அதை கைப்பற்ற போராடுகிறது. அந்த ரத்தினத்தை கைப்பற்ற முயற்சி செய்யும் பிரிட்டிஷ் படைகளை வழி நடத்துகிறான் ரிலே. ரிலே-யிடமிருந்து அந்த ரத்தின கல்லை மீட்க தனது புரட்சி படையுடன் சேர்ந்து போராடுகிறான் மில்லர்.
அந்த ரத்தினக்கல்லை கைப்பற்ற முயற்சி செய்யும் ராஜாதிபதி, தனது மகன் ஜெயவர்தனை (ஜான் கொக்கன்) அனுப்பி மில்லரும் அவனது புரட்சி படையும் ரத்தினக்கல்லை கைப்பற்றியவுடன், மில்லரையும் புரட்சி படையையும் கொலை செய்து விட்டு ரத்தினக் கல்லை தன்னிடம் கொண்டு வர உத்தரவிடுகிறான்.
ராஜாதிபதியின் சதியை அறிந்து கொள்ளும் மில்லர் ஜெயவர்தனை கொலை செய்கிறான். வேல்மதியும் சில புரட்சி படை வீரர்களும் மக்களுடன் சேர்ந்து மன்னன் ராஜாதிபதியை கொலை செய்து கிராமத்தை மீட்கிறார்கள்.
ரிலே-யை கொலை செய்யும் மில்லர் அந்த ரத்தின கல்லை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு அந்த ரத்தினக் கல்லுடன் இலங்கைக்கு தப்பி செல்கிறான். மில்லரையும் ரத்தினக் கல்லையும் தஙகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவனது கிராம மக்களை சித்ரவதை செய்கின்றனர் ஜெனரல் ஆண்ட்ரு வான்டி (எட்வர்ட் சோனன்பிளிக்) தலைமையிலான பிரிட்டிஷ் படைகள். மக்களின் துன்பத்தை அறியும் மில்லர் தந்து கிராமத்திற்கு திரும்பி ஜெனரல் ஆண்ட்ரு வாண்டி மற்றும் அவனது படைகளை விரட்டியடிக்கிறான்.மில்லரிடம் சரணடையும் இந்திய பிரிட்டிஷ் வீரர்கள், ஆண்ட்ரு வாண்டி வீரநல்லூரில் இருந்து 700 படைவீரர்களை திரட்டிக் கொண்டு மீண்டும் போருக்கு வருவான் என்கிறார்கள். ஜெனரல் ஆண்ட்ரு வாண்டியை எதிர்க்க மில்லர் தனது படையை வலுப்படுத்த முயற்சி செய்கிறான்.
இறந்து போனதாக சொல்லப்பட்ட மில்லரின் அண்ணன் செங்கோலன் அந்தமான் தீவில் இயங்கி வரும் புரட்சி படையில் தலைமறைவாக இருப்பதை அறிந்து கொள்கிறான் மில்லர். மில்லரின் நண்பன் ரஃபிக் மற்றும் அண்ணன் செங்கோலனின் உதவியுடன் பிரிட்டிஷ் படைகளை வென்று தங்கள் ஊர் கோயிலில் ரத்தினக்கல்லை மீண்டும் வைக்கிறான் மில்லர்.
600 ஆண்டுகளாக ராஜாதிபதி வம்சத்தின் தடையால் கோயிலுக்குள் நுழைய முடியாமல் இருந்த கிராம மக்கள் மில்லரின் முயற்சியால் கொவிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள்.
ராஜாதிபதியின் மகள் சகுந்தலா(அதிதி பாலன்) தனது தந்தை மற்றும் அண்ணனின் மரணத்திற்கு வேல்மதிதான் காரணம் என்பதை மந்திரி கனகசபை மூலம் அறிந்து கொள்கிறாள். வேல்மதியையும் அவளுக்கு துணையாக இருக்கும் மில்லர், ரஃபிக், செங்கோலன் மற்றும் புரட்சியாளர்களையும் பழி வாங்க புறப்படுகிறாள் சகுந்தலா.