கதை சுருக்கம்: ஹாப்பி மேரிட் லைஃப் (Happy Married Life), கோல்டன் ரூல் (Golden Rule), தக்காளி சட்னி (Thakkali Chutney), ஃபேம் கேம் (Fame Game) நான்கு குறும்படங்களின் தொகுப்பு ஹாட் ஸ்பாட் திரைப்படம்.
இயக்குநர்: Vignesh Karthick
ஒளிப்பதிவு: Gokul Benoy
இசை: Satish Raghunathan Vaan
படத்தொகுப்பு: U Muthayan
நடிகர்கள்: Kalaiyarasan, Sofia Sandy, Ammu Abhirami, Janani, Gouri G. Kishan, Subash, Adithya Bhaskar,
கலக்கப் போவது யாரு சீசன் 3, கிங்ஸ் ஆஃப் காமெடி சீசன் 1, காமெடி ஜோடிஸ், சூர்ய வணக்கம், கலாட்டா குடும்பம், அது இது எது? என சின்னத்திரையில் காமெடியனாகவும் VJ-வாகவும் தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விக்னேஷ் கார்த்திக்.
"ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல?" திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த விக்னேஷ் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் "ஹாட் ஸ்பாட்".
ரசிக்க வைக்கும் ட்ரைலரால் ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த "ஹாட் ஸ்பாட்" திரைப்படம் 2024 மார்ச் 29-ம் திகதி வெளியானது.
ட்ரைலர் அளவிற்கு திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. விமர்சகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது "ஹாட் ஸ்பாட்" தமிழ் திரைப்படம்.