கதை சுருக்கம்: சாதாரண குடும்பத்தை சேர்ந்த கலை திரைத் துறையில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறான். சினிமா துறையில் ஸ்டில் போட்டோகிராபராக வேலை பார்த்து வரும் கலையின் தந்தை பாண்டியன் அவனுக்கு ஆதரவாக இருக்கிறார். கலையின் ஸ்டார் கனவு நனவானதா?
'ப்யார் ப்ரேமம் காதல்' திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் எலனுடன் இணைந்து 'பிக்பாஸ்' புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக 2019-ம் அறிவிக்கப்பட்டு பின் இன்னொரு 'பிக்பாஸ்' பிரபலம் கவின் ஹரிஷ் கல்யாணுக்கு பதிலாக கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம்.
2023-ம் அண்டு ஜூன் 1-ம் திகதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2024-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் திகதி மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
2024-ம் ஆண்டு மே 10-ம் திகதி வெளியான 'ஸ்டார் திரைப்படம் தொடக்கத்தில் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றாலும், அடுத்தடுத்த நாட்களில் கலவையான விமர்சனங்களை பெறத் தொடங்கியது.