Monday 23rd of December 2024 - 07:50:18 PM
தாவூத் இப்ராஹிம் மரணம்! தடுமாறும் உலக உளவு படைகள் - தாவூத் இப்ராஹிம் மரணம் 2
தாவூத் இப்ராஹிம் மரணம்! தடுமாறும் உலக உளவு படைகள் - தாவூத் இப்ராஹிம் மரணம் 2
எல்லாளன் / 18 மே 2024

முந்தைய பகுதி: பாகம் 1

1986ம் ஆண்டு, ஷார்ஜாவில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ஒன்றிற்கு முன், இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரஸிங் ரூமிற்கு சென்றார் தாவுத். உடன் ஹிந்தி நடிகர் மெஹ்மத் இருந்துள்ளார்.

இந்திய வீரர்கள் அந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்றால், அனைத்து வீரர்களுக்கும் டெயோட்டா கொரல்லோ கார் பரிசளிப்பதாக தாவுத் கூறியுள்ளார். ஆனால், அப்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து விட்டு ட்ரஸிங் ரூமிற்கு வந்த கேப்டன் கபில்தேவ், ட்ரஸிங் ரூமில் அறிமுகம் இல்லாத நபர்கள் இருப்பதை பார்த்து கோபமடைந்து, யார் என்று தெரியாமலேயே தாவுத்தை அங்கிருந்து வெளியேறுமாறு சத்தமிட்டுள்ளார்.
 
இந்திய வீரர்கள் யாருக்கும் தாவுத்தை அடையாளம் தெரியவில்லை. ஆனால், துலிப் வெங்சர்காருக்கு மட்டும் அது தாவுத் இப்ராஹிம் என்பது தெரியும். சம்பவம் நடந்த காலகட்டத்தில் இந்த விஷயம் வெளியில் தெரியவில்லை, ஆனால் 99ம் ஆண்டு, கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்சில் அசாருதீன், ஜடேஜா ஆகியோர் சிக்கியபொழுது, தாவுத் இப்ராஹிம் மேட்ச் பிக்ஸிங் தொடர்புகளும் மீடியாவில் வெளிவரத் தொடங்கின.

2006ம் ஆண்டு, தாவுத்தி மகள் மஹருக் இப்ராஹிமிற்கும், பாகிஸ்தானின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ஜாவிட் மியாண்டடின் மகன் ஜினைத் மியாண்டிற்கும் நடந்த திருமணம், தாவுத் இப்ராஹிம்மின் கிரிக்கெட் தொடர்புகளை பொதுவெளியில் வெளிச்சமிட்டு காட்டியது.

2010ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்ட உலகின் டாப் டென் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்ஸ் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்த தாவுத்தின் தந்தை மும்பை போலிஸில் ஒரு ஹெட்கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் என்பதுதான் இங்கு ட்விஸ்ட்.

1955ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி மஹாராஷ்ட்ராவின், ரத்னகிரியில் ஹெட்கான்ஸ்டபிள் இப்ராஹிம் ஹாஸ்கர் மற்றும் அமீனா தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் தாவுத்.
 
அஹமத் செய்லர் பள்ளியில் படித்த தாவுத், அவரது சிறுசிறு திருட்டு, அடிதடி, ரவுடித்தனத்தால் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளி செல்ல வேண்டிய தொல்லையில் இருந்து விடுபட்ட தாவூத், லோக்கல் தாதாவான பாஷு தாதா என்பவரிடம் அடியாளாக சேர்ந்து, கூலிப்படை வேலைகளை செய்ய தொடங்கினார்.
 
கொடுக்கப்பட்ட அஸைண்மெண்டுகளை அச்சு பிசகாமல் செய்து நன்கு தொழில் கற்றுக் கொண்ட தாவுத், 1978ம் ஆண்டில் 23வது வயதில் தனது அண்ணன் ஷபிர் இப்ராஹிமுடன் சேந்து தனியாக தொழில் செய்ய தொடங்கினார். வழக்கமான கேங்ஸ்டர் கதைகளை போலவே, புதிதாக முளைத்த தாவுத் டீமை, பழம் தின்று கொட்டை போட்ட 'பதான் கேங்' என்ற லோக்கல் கேங் அழிக்க நினைத்தது, அதில் தவுத்தின் அண்ணன் ஷபீர் கொலை செய்யப்படுகிறார்.


 
அண்ணனின் கொலைக்கு பின் லோக்கல் அடிதடிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, போதை பொருள் கடத்தல் பக்கம் தன் கவனத்தை திருப்பி, அப்படியே தங்க கடத்தல், ஆயுத கடத்தல் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேரிய தாவுத், டி கம்பெனியை தொடங்கி, கொஞ்சம் பெரிய அளவில் பிராடுதனங்களை புரபஷனலாக செய்ய தொடங்கினார்.
 
1986ம் ஆண்டு தன் தொழில் போட்டியாளரான சமத் கான் என்ற கூலிப்படை அடியாளை கொலை செய்த வழக்கில் மும்பை போலிஸ் தாவுத் இப்ராஹிமை கைது செய்ய முயன்றனர். தங்க கடத்தல் மூலம் தனக்கிருந்த துபாய் பழக்கவழக்கங்களை வைத்து துபாய்க்கு தப்பிச்சென்ற தாவுத், அங்கிருந்தபடியே தனது தளபதி சோட்டா ராஜன் மூலம் மும்பையில் தனது அசைன்மெண்டுகளை செய்து முடித்து பணம் சம்பாதிக்க தொடங்கினார்.

1990ம் ஆண்டில் தாவுத்தின் டி கம்பெனிக்காக உலகம் முழுதும் சுமார் ஐயாயிரம் பேர் வேலை செய்தார்கள். அவர்கள் மூலம், மாதம் குறைந்தது ஒரு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது டி கம்பெனி.

குவைத்தில் குந்திக்கொண்டு, ஐரோப்பா, ஆசிய நாடுகள் முழுதும் தனது டி கம்பெனியை விரிவு படுத்திய தாவுத்திற்கு வளைகுடா நாடுகளில் வளர்ந்து வந்த அல் குவைதா, தாலிபன், லக்ஷர் இ தொய்பா, போன்ற தீவிரவாத இயக்க தலைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆசிய, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு போதை பொருட்கள், ஆயுதங்கள் கடத்துவதை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இந்தியாவில் குறிப்பாக மும்பையில் தனது டி கம்பெனியை மிக வழுவாக காலூன்ற வைத்திருந்தார் தாவுத்.

மும்பை நிழல் உலகின் மொத்த அசைவும் குவைத்தில் இருந்த தாவுத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல், சில படுகொலைகள் என பல கிரிமினல் கேஸ்களின் முக்கிய குற்றவாளியாக  மும்பை போலிஸால் தேடப்பட்டு வந்த தாவுத், 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பால். இந்திய உளவுத்துறை, அமெரிக்க CIA, இண்டர்போல் என ஒட்டு மொத்த உலக உளவு நிறுவனங்களாலும் தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக பரிணாம வளர்ச்சியடைந்தார்.

1993ம் ஆண்டு மார்ச் 12ம் திகதி, மதியம் 1:30 மணிக்கு மும்பை ஸ்டாக் எம்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் முதல் கார் பாம் வெடித்தது. அதனை தொடர்ந்து மாலை 3 நாப்பதிற்கு பாஸ்போர்ட் ஆபிஸில் கடைசியாக வெடித்த குண்டு வரை மொத்தம் 12 குண்டு வெடிப்புகள் சம்பவங்கள் மூன்று மணி நேரத்திற்குள் மும்பை நகரம் முழுதும் பரவலாக நிகழ்ந்து இந்தியாவை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது.

257 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 1400 பேர் காயமடைந்த மும்பை தொடர்  குண்டு  வெடிப்பு சம்பவத்தின் மாஸ்டர் மைண்ட்டாக தாவுத் இப்ராஹிமே செயல்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின.

இந்திய அரசு எப்படியும் தாவுத்தை பிடித்து விட வேண்டும் என முடிவு செய்தது. தாவுத்தின் தலைக்கு அமெரிக்காவின் CIA 25 மில்லியன் டாலர் விலை குறித்தது. இண்டர் போல் தாவுத்தை மோஸ்ட் வாண்டட் கிரிமினலாக அறிவித்து தேட தொடங்கியது. ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றியபடி தாவுத் தனது டி கம்பெனி மூலம் நாச வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

தாவுத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இங்கிலாந்து மட்டுமின்றி, இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தாவுத்திற்கு பல மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பரவி கிடக்கின்றன.

கொலம்பிய நாட்டை சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபருக்கு அடுத்து பெரும் கோடிஸ்வர கிரிமினலாக தாவுத்தை குறிப்பிடுகிறது போர்ப்ஸ் பத்திரிக்கை.

உலகம் முழுதும் தீவிரமாக தேடப்பட்டு வருவதால், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு ரகசியமாக நிழல் உலக வாழ்க்கை வாழ்ந்து வரும் தாவுத், பாகிஸ்தான் கராச்சி நகரில் விஷம் வைத்து கொல்லப்பட்டு விட்டதாக தகவல் பரவியதுதான், உலக உளவு அமைப்புகளை உஷார்படுத்தி மீண்டும் பரபரப்பாக தாவுத்தை பற்றி விசாரிக்க வைத்தது.

ஆனால், தாவுத்தின் மரண செய்தி உறுதிப்படுத்த முடியாத ஒரு வதந்தியாக மாறி விட்டதால், மீண்டும் உலக உளவு பருந்துகள், தாவுத்தை கொத்தி தூக்க பாகிஸ்தான் பக்கம் வட்டமிட தொடங்கியுள்ளன.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
தெருவில் நடமாடிய மக்களை வாளால் தாக்கிய நபர் கைது. போலீஸ் உட்பட 5 பேர் காயம்.
உலகம் / 30 ஏப்ரல் 2024
தெருவில் நடமாடிய மக்களை வாளால் தாக்கிய நபர் கைது. போலீஸ் உட்பட 5 பேர் காயம்.

லண்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டி வந்

மனைவியை மருமகனுக்கு தாரைவார்த்த மாமனார்.
பொதுவானவை / 01 மே 2024
மனைவியை மருமகனுக்கு தாரைவார்த்த மாமனார்.

சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தர

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி