Monday 23rd of December 2024 - 03:10:03 PM
ரஷ்ய மக்களை உயிருடன் வதைத்த ஸ்டாலினின் கொடூரங்கள்: குலாக் தடுப்பு முகாம் - 1
ரஷ்ய மக்களை உயிருடன் வதைத்த ஸ்டாலினின் கொடூரங்கள்:  குலாக் தடுப்பு முகாம் - 1

1953 மார்ச் 5ம் திகதி. இரவு நெருங்கி விட்டது, ஆனாலும் காலையில் இருந்தே ஜோசப் ஸ்டாலின் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. வேலையாட்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் அறைக்கதவை நெருங்கவே பயந்தனர். ஐயாவுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான், அந்த இடத்திலேயே மரணம் அல்லது அணு அணுவாய் மரணம் அணுகும் வரை சிறையில் சித்ரவதை. இரண்டையும் விரும்பாத அந்த வேலையாட்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஸ்டாலின் ஐயாவின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பர், பாதுகாப்பு அதிகாரி, ராஜ விசுவாசி ப்பெரியாவின் வருகைக்காக காத்திருந்தனர். இறுதியில்  ப்பெரியா வந்து கதைவை உடைத்து அறைக்குள் நுழைய, மற்ற அனைவரும் அவரை பின் தொடர்ந்து உள்ளே சென்றனர்.

உள்ளே. ஹெவியான ஸ்ற்றோக்கினால் வாய் பேச முடியாமல், கை கால்கள் பக்கவாட்டில் இழுத்தபடி, கட்டிலுக்கு கீழே கோணல் மானலாக விழுந்து கிடந்தார் ஜோசப் ஸ்டாலின்.

காலனியாதிக்கத்தை காலாவதியாக்கி, உலக வரைபடத்தை ஒட்டு  மொத்தமாக மாற்றி, இன்று பல நாடுகளும் தங்களை இறையாண்மையுள்ள சுதந்திர நாடுகள் என மார் தட்டிக் கொள்ள காரணமாக இருந்த இரண்டாம் உலகப்போரின் ஹீரோ, ரஷ்ய மக்களின் விடிவெள்ளி ஜோசப் ஸ்டாலின் பக்கவாதத்தால் சுய நினைவின்றி, கை கால்கள் இழுத்துக் கொள்ள, பேச்சு மூச்சில்லாமல் எந்த விநாடியும் சாகலாம் என்ற நிலையில் மரணத்திடம் போராட முடியாமல் சரண்டர் ஆகியிருந்தார்.

ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லேனா, கம்யூனிஸ்ட் கட்சியில் ஸ்டாலினுக்கு பின் தலைவரான குருஷேவ் இருவரை தவிர மற்ற அனைவரையும் வெளியில் அனுப்பிய ப்பெரியா தன் ராஜ விசுவாசத்திற்குரிய ரஷ்ய அதிபர் ஸ்டாலினை பார்த்து தூ என துப்பினார்.

பின் நடந்தவற்றை ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லேனாவும் குருஷேவும் பின்வறுமாறு விளக்குகின்றனர்.

சோலி முடிந்தது, இனி அவ்வளவுதான் என மரணத்தின் முன் மண்டியிட்டு கண்மூடி கிடந்த ஸ்டாலினை நெருங்கிய ப்பெரியா ரஷ்யாவின் ஆகச்சிறந்த கெட்ட வார்த்தைகளால் அடுக்கடுக்காக அதிபர் ஸ்டாலினை அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். ஸாடலின் மட்டும் சுயநினைவோடு இருந்திருந்தால், ப்பெரியாவின் கெட்ட வார்த்தைகளின் வீரியத்தால் அதிர்ச்சியிலேயே இறந்திருப்பார். அப்படி இருந்தது ப்பெரியாவின் அர்ச்சனைகள்.

ஸ்வெட்லேனாவும், குருஷேவும் அதிர்ச்சியுடன் ப்பெரியாவை பார்த்துக் கொண்டிருக்க, ப்பெரியாவி அர்ச்சனைகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருந்தன. திடீரென சுயநினைவிற்கு வந்த ஸ்டாலின் கண் விழித்து ப்பெரியாவை பார்த்தார்.

அப்பவளவுதான். சப்தநாடியும் அடங்கி ஒடுங்கி போன ப்பெரியா ஸ்டாலின் காலடியில் அமர்ந்தார், கண்ணீர் மல்க ஸ்டாலினின் கைகளை பிடித்து தன் கண்களின் ஒற்றி முத்தமிட்டார். கடவுளை நோக்கிய ரஷ்ய மக்களின் வேண்டுதல் வீண் போகவில்லை, மீட்பர் மீண்டு விட்டார் என மகிழ்ச்சி பொங்க ஸ்வெட்லா மற்றும் குருஷேவை பார்த்து சொன்னார். தன் கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல முயன்ற ஸ்டாலினின் உயிர் சட்டென பிரிந்து மரணத்தை தழுவினார். விருட்டென ஸ்டாலினி காலடியில் இருந்து எழுந்த ப்பெரியா, ஸ்டாலின் உயிர் பிரிந்ததை உறுதி செய்து கொண்டு, ஸ்டாலின் முகத்தை பார்த்து தூ என காறி துப்பினார்.

அவ்வளவுதான், ரஷ்ய மக்கள் 30 வருடங்களாக தொழில் புரட்சி என்ற பெயரில் தங்களை ஆலையிலிட்ட கரும்பாக கசக்கி பிழிந்த ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் வைத்திருந்த மரியாதை.

 மனித புதை குழி. April 30, 1943. கட்யென் - ரஷ்யா.

ஜார் மன்னர்களின் கொடுமைகளில் இருந்து மீண்டு, லெனின் ஆட்சியில் எழுச்சி பெற்ற ரஷ்யா, ஸ்டாலின் ஆட்சியில் அசுர வளர்ச்சி பெற்றது ஆயினும் ரஷ்ய மக்கள் ஸ்டாலினை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மை காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு முன் மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்ற ஸ்டாலினின் சர்வாதிகார போக்கு. தொழில் புரட்சி அதன் மூலம் ரஷ்யாவின் வளர்ச்சி இதை தவிர ஸ்டாலின் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அப்படி சிந்தித்தவர்கள் உயிருடன் இருந்தார்கள் என்றால், அவர்கள் ஸ்டாலினின் குலாக் தடுப்பு முகாம்களின் ரகசிய சிறை அறைகளில் கொடும் சித்ரவதைகளுடன் செத்திருக்கலாமே என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டே மரணத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

யார் மேலாவது ஸ்டாலின் கொஞ்சமாக கோபபட்டால் உடனடியாக அவர்களை கொன்று விடுவார், கோபம் சற்று அதிகமாக இருந்தால் அவர்களை ஆசீர்வதித்து குலாக் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி விடுவார்.
 
குலாக் தடுப்பு முகாம்கள், ஸ்டாலினின் ஸ்பெஷல் கண்டுபிடிப்பு. கும்பிபாகம், மிருகினஜம்போ, கபாம்குபீம் தண்டனைகளை விட கொடுமையான டைப் டைப்பாக பல வெரைட்டியான தண்டனைகளுடன் இயங்கி வந்தது  குலாக் தடுப்பு முகாம்கள்.

- தொடரும் - 

கதைகளின் தேவதை

அடுத்த பகுதி: பாகம் 2

டிரண்டிங்
51 விலை மாதுக்களின் படுகொலைகள். போலிஸை குழப்பும் சீரியல் கில்லர்.
க்ரைம் / 05 மே 2024
51 விலை மாதுக்களின் படுகொலைகள். போலிஸை குழப்பும் சீரியல் கில்லர்.

2001ம் ஆண்டு முதல் கடந்த 23 ஆண்டுகளில் குறைந்தது 50 பெண்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து புதைக்கப்பட

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
மனைவியை மருமகனுக்கு தாரைவார்த்த மாமனார்.
பொதுவானவை / 01 மே 2024
மனைவியை மருமகனுக்கு தாரைவார்த்த மாமனார்.

சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தர

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி