Monday 23rd of December 2024 - 06:23:50 PM
மக்களை உயிருடன் வதைத்த ஸ்டாலினின் கொடூர சர்வாதிகாரம் - குலாக் தடுப்பு முகாம் 2
மக்களை உயிருடன் வதைத்த ஸ்டாலினின் கொடூர சர்வாதிகாரம் - குலாக் தடுப்பு முகாம் 2
எல்லாளன் / 15 மே 2024

முந்தைய பகுதி: பாகம் - 1

தத்துவ ஞானி பவல் ப்ளோரன்ஸ்கி, ராணுவ தளபதி ஸ்டீபன் கரனின் முதல், கடைகோடி ரஷ்ய பிரஜை வரை ஸ்டாலினை எதிர்த்து கருத்து சொன்னவர்கள் மட்டுமின்றி ஸ்டாலின் முன் தைரியமாக மூச்சு விட்டாலும் அவர்களுக்கு குலாக் தடுப்பு முகாம் தண்டனைதான்.

குலாக் தடுப்பு முகாம்களில் உள்ள கைதிகளுக்கு ஒரே வேலைதான். ஆம் ஒரே வேலை வேலை வேலை என 24/7 வேலை செய்து கொண்டே இருந்தார்கள். சுரங்கம் வெட்டுவது, ரயில் பெட்டி செய்வது, பண்ணை வேலை, பனிமலைகளை குடையும் வேலை, தங்கம் வெட்டும் வேலை, பாலம் கட்டும் வேலை, தொழிற்சாலைகளில் வேலை என நின்றால், நடந்தால், ஓடினால், படுத்தால், என தங்கள் காலைகடன்களை கூட வேலைகளை செய்துகொண்டே செய்து முடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கஷ்டமாயிருக்கு என பீல் பண்ணியவர்களை தனியே அழைத்து கொஞ்ச நேரம் கொடுமை செய்து விட்டு, போரடித்தவுடன் சத்தமில்லாமக் சுட்டு கொன்று புதைத்து விடுவார்கள்.

அப்படி புதைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்று இரண்டல்ல பல லட்சங்கள். ஸ்டாலினுக்கு பின் ரஷ்ய அதிபரான குருஷேவுக்கு ரஷ்யாவின் உளவு பிரிவு கேஜிபி அதிகாரிகள் எழுதிய கடிதம் ஒன்றில். 1935 ஜனவரி முதல் 1941 ஜீன் மாதம் வரை அதிபர் ஸ்டாலினி உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்ட ரஷ்ய மக்களின் எண்ணிக்கை 70 லட்சம். என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது.

இப்படி தன் சொந்த நாட்டு மக்களையே கொத்து கொத்தாக கொலை செய்ய ஸ்டாலினுக்குள் இருந்த ஸ்டாடிஸ்ட் மனநிலையே காரணம் என பல வரலாற்று ஆய்வாளர்கள் பின்வறுமாறு குறிப்பிடுகிறார்கள்.

குலாக் தடுப்பு முகாமில் வேலை செய்யும் ரஷ்யர்கள்

ஸ்டாலினின் தந்தை பெஸாரியன் ஜுஹாஸ்விலி ஷூ தைக்கும் தொழிலாளி. வேலை செய்த இடத்தில் ஏற்படும் மன உளைச்சல்களால், மாலையில் வீட்டிற்கு புல் போதையில் வரும் பெஸாரியன் தன் மகன் ஸ்டாலினை போட்டு பொளந்து கட்டியுள்ளார். செய்யாத தவறுக்கெல்லாம் தந்தையிடம் நித்தம் மரண அடி வாங்கி வளர்ந்த ஸ்டாலினின் மனதில் சிறு வயதிலேயே ஸாடிஸ்ட் குணம் குடியேறி விட்டது. ஸ்டாலின் வளர வளர அவரின் சாடிஸ்ட் குணமும் செடியாகி மரமாகி, அவர் ரஷ்ய அதிபரானபோது பெரும் கிளைகளுடன் விழுதுகள் விட்டு ஸ்டாலினின் மனம் முழுதும் ஸாடிஸ்ட் எண்ணங்களால் நிரம்பி கிடந்தது.

குலாக் தடுப்பு முகாம்களில் ராணுவ வீரர்கள் கைதிகளை சித்ரவதை செய்யப்படுவதை எதிரில் சேர் போட்டு அமர்ந்து ரசித்து பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தார் ஸ்டாலின். சில நேரங்களில் அவன் கையை உடை, விரல்களை நசுக்கு, பல்லை உடை, நாக்கை புடுங்கு என ராணுவ வீரர்களுக்கு சித்ரவதை டிப்ஸ் கொடுத்து தன் ஸாடிஸ்ட் சைக்கோதனத்தின் உச்சம் காட்டி மிரட்டியுள்ளார்.

ஸ்டாலினின் சர்வாதிகாரத்தின் உச்சத்திற்கு சம்பிளாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் ஒன்று. பொதுகூட்டங்களில் ஸ்டாலின் பேசி முடித்ததும் உணர்ச்சி மிகுதியில் கூட்டத்தினர் கைதட்ட தொடங்குவர். கூட்டத்தினரின் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் கைதட்டல் மேலும் பலமாகி நீடிக்கும். இப்படியே கூட்டத்தினரின் உணர்ச்சி நொடிக்கு நொடி அதிகரிக்க அதிகரிக்க கைதட்டல் சத்தம் விண்ணை பிளக்க தொடங்கும். பொதுகூட்ட மேடைக்கு பின் இருந்து மணி ஒலிக்கும் வரை கூட்டத்தின் கைதட்டல் விண்ணை பிளக்க வேண்டும். மணி ஒலிக்கும் முன் யார் கை தட்டுவதை நிறுத்துகிறார்களோ அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கைதட்டியபடி கூட்டத்தினரை கவனித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினின் ரகசிய படைகளால் அடுத்த அரை மணிநேரத்தில் குலாக் தடுப்பு முகாம்களுக்கு பார்சல் செய்யப்படுவார்கள்.

குலாக் தடுப்பு முகாம்களுக்கு பயந்தே தொடர்ந்து 11 நிமிடங்கள் உணர்ச்சி பெருக்குடன் ரஷ்ய மக்கள் ஸ்டாலினுக்காக கைதட்டிய விசித்திர வரலாற்று சம்பவம் கூட உண்டு.

ஸ்டாலினின் கொடூர குணங்களால் அவரது மனைவி நடேஷ்டா, மகள் ஸ்வெட்லேனா கூட ஸ்டாலினை வெறுத்தார்கள். ஸ்டாலின் ரஷ்ய மக்களை போலவே தன் மனைவியையும் நேசித்தார், ஆம் ரஷ்ய மக்களை எப்படி புழுவாக நினைத்தாரோ அப்படியே தன் மனைவியையும் மதித்தார். குறைந்த பட்சம் தன்னை ஒரு உயிருள்ள உணர்வுள்ள பெண்ணாக மதிக்காத ஸ்டாலினுடன் வாழ்ந்த வாழ்க்கையை வெறுத்தார் நடேஷ்டா.

குலாக் தடுப்பு முகாம் படுக்கையறை

1932ம் வருடம் நவம்பர் 8ம் திகதி கிரிம்லின் மாளிகையில், பல ரஷ்ய அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் கலந்துகொண்ட டின்னர் விருந்தில், அனைவரின் முன்னிலையிலும் ஸ்டாலினின் கள்ள காதல்கள் குறித்து நடேஷ்டாவிற்கும் ஸ்டாலினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அனைவர் முன்னிலையிலும் நடேஷ்டாவை மிக மோசமாக திட்டி விட்டார் ஸ்டாலின். மனமுடைந்து பார்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய் நடேஷ்டா, மறுநாள் காலை தனது அறையில், தன் கைதுப்பாக்கியால் தனது இதயத்தில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"அம்மா இறந்த பின், அப்பாவிடம் இருந்த கடுகளவு மனித தன்மையும் காணாமல் போய் விட்டது!" என குறிப்பிடுகிறார் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லேனா.

- தொடரும் -

கதைகளின் தேவதை

இறுதி பகுதி: பாகம் 3 - வீடியோ

டிரண்டிங்
காணாமல் போன 323 வகை கொடிய வைரஸ்கள்.  அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளார்கள்
மருத்துவம் / 19 டிசம்பர் 2024
காணாமல் போன 323 வகை கொடிய வைரஸ்கள். அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளார்கள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தில் ஆய்வகம் ஒன்றில் குப்பிகளில் இருந்த சுமார் 323 கொடிய வைரஸ

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி