நியூஸிலாந்தின் புகழ் பெற்ற கிரிகிரிரோ நகரம், நியுஸிலாந்தை ஆக்கிரமித்த ஆங்கிலேய கடற்படை தளபதி ஹாமில்டன் நினைவாக ஹாமில்டன் நகரமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவரின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டிருந்தது. மைபி கிளர்க்கின் தாத்தா டைட்மு மைபி ஹாமில்டன் நகரில் உள்ள ஹாமில்டன் சிலையை அகற்றி நகரத்தின் பெயரை மாற்றி அதன் ஒரிஜினல் மயோரி மொழி பெயரான கிரிகிரிரோ பெயரை வைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்தார்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக 2018ம் ஆண்டு ஹாமில்டன் சிலையின் முகத்தில் சிகப்பு பெயிண்ட் பூசி தன் எதிர்ப்பை தெரிவித்த டைட்மு மைபி கைது செய்யப்பட்டார். 2020ம் ஆண்டு ஹாமில்டன் சிலையை அகற்றும் போராட்டத்தில் ஆக்ரோஷமாக முன்னின்றார் மைபி கிளார்க். போராட்டத்தின் வீரியத்தால் 2020 ஜீன் மாதம் ஹாமில்டன் சிலை அகற்றப்பட்டது. அப்போது மைபி கிளார்க்கின் பின்னால் அணி திரண்ட இளைஞர் படையை பார்த்து பயந்த பல முன்னிலை அரசியல் கட்சியல் மைபி கிளார்க்கை தங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர்.
ஆனால், மைபி கிளர்க், தன் மயோரி பழங்குடி மக்களின் கட்சியான டா பட்டி மயோரி கட்சியின் சார்பில் போட்டிட முடிவு செய்தார். தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் மைபி கிளர்க்கின் வீடு பலமுறை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. சில அடையாளம் தெரியாத நபர்கள் மைபி கிளர்க்கை மிரட்ட தொடங்கினார்கள்.
மைபி கிளர்க் கொடுத்த புகார்களை விசாரித்த போலிஸ், அனைத்தும் அடையாளம் தெரியாத நபர்களின் வேலை என சொன்னதிலிருந்தே அவை அனைத்தும் ஆளும் தேசிய கட்சியின் சதிதான் என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொண்டனர். பல மிரட்டல் அச்சுறுத்தல்களை தாண்டி, டா பட்டி மயோரி கட்சி சார்பில் போட்டியிட்டார் மைபி கிளர்க்.
மைபி கிளர்க் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஆளும் தொழிலாளர் கட்சியின் பெரும் தலைவர், நியூஸிலாந்தின் வெளியுறவு துறை அமைச்சரான நாணய மஹுட்டா. நாணய மஹீட்டா மயோரி பழங்குடி அரச வம்சத்தை சேர்ந்தவர். இவரது மைத்துனர் மன்னர் துஹிட்டியா தான் தற்போதைய மயோரி பழங்குடி இன மக்களின் அதிகாரபூர்வ மன்னராவார். மன்னர் வம்சம், ஆளும் கட்சி, வெளியுறவு துறை அமைச்சர் என்ற பெரும் பதவி இவை அனைத்தும் கொண்ட நாணய மஹிட்டாவை எதிர்க்கும் மைபி கிளர்க் டெபாஸிட் வாங்குவார என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால் நியூஸிலாந்து மக்கள் மாற்றி யோசித்தார்கள். மாற்றத்தை விரும்பினார்கள். 181 வருட நியுஸிலாந்தின் தேர்தல் அரசியலில் இரண்டாவது இளம் வயது எம்பியாக மைபி கிளர்க் வெற்றி பெற்றார். இவருக்கு முன் 1853ம் வருடம் நியூஸிலாந்தின் முதல் பாராளுமன்ற தேர்தலில் தனது 20 வயது 7 மாதத்தில் எம்பியாக வெற்றி பெற்ற ஜேம்ஸ் ஸ்டுவர்ட்க்கு பின் 181 வருடங்களுக்கு கழித்து தன் 21 வயதில் இளம் எம்பியாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் மைபி கிளர்க்.
இளம் தலைமுறையினரே தான் நாட்டின் எதிர்காலம் என்பதை அழுத்தமாக சொல்லிவரும் மைபி கிளார்க், தேர்தலில் வாக்களிக்கும் வயது வரம்பை 16 வயதாக குறைத்து இளம் வாக்காளர்கள் தேர்தல் அரசியலில் பங்கு பெரும் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார். மைபி கிளர்க்கின் இந்த கருத்திற்கு நியூஸிலாந்து இளம் தலைமுறையினரிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
மயோரி பழங்குடி மக்களின் மயோரி மொழியின் பாதுகாவலராக தன்னை சொல்லிக் கொள்ளும் மைபி க்ளார்க். நம்ம ஊர் செந்தமிழன் சீமான் போன்றே இயற்கை வளமே இப்பூவுலகில் உயிரினங்கள் வளமோடு வாழ வழிவகை செய்யும் என அழுத்தமான கருத்தை முன் வைக்கிறார், மேலும், செந்தமிழன் சீமான் போன்றே இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்ற மனித நேயம் தாண்டிய உயிர்மை நேய அரசியலை முன் வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
உரிமை மறுப்பு, அடக்குமுறை, அரசியல் நெருக்கடிகளை தாண்டி பெரும் போராட்டத்திற்கு பின் எம்பியாக வெற்றி பெற்ற மைபி கிளர்க் 200 வருடங்களாக தனது மயோரி பழங்குடி மக்களின் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த கோபத்தைதான் மயோரி பழங்குடி மக்களின் பாரம்பரிய பாடல் மூலம் தனது முதல் பாராளுமன்ற உரையின்போது வெளிப்படுத்தினார்.
மயோரி கப ஹாக்கா என அழைக்க்ப்படும் அந்த பாடலுக்கு போர் குரல் என்று அர்த்தம். ஆதி காலத்தில் மயோரி பழங்குடி மக்கள் போருக்கு செல்லும் தங்கள் படை வீரர்களுக்கு உற்சகமூட்டும் வகையில் மைபி கிளார்க் பாராளுமன்றத்தில் செய்த நடன அசைவுகளுடன் மயோரி ஹக்காவை பாடி, வெற்றி பெற்று வருமாறு வாழ்த்தி அனுப்புவார்கள்.
அரசியல் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி எந்த பாராளுமன்றம் மூலம் மயோரி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதே பாரளுமன்றத்தில் மயோரி பழங்குடி மக்களின் தேசிய கீதமாக அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ள மயோரி ஹக்காவை பாடி, ஒட்டு மொத்த உலகத்திற்கும் மயோரி மக்களின் குரல் சத்தமாக கேட்கும்படி செய்து விட்டார் மைபி கிளார்க்.
வித்தியாசமான விஷயங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவை பிரபலம் அடையும் முன்னரே தனது திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகபடுத்தி விடும் உலக நாயகன் கமல் தனது பம்மல் கே சம்மந்தம் திரைப்படத்தில் சகலகலா வல்லவனே பாடலில் மயோரி ஹக்கா பாடலின் பாரம்பரிய நடன அசைவுகளை பயன்படுத்தியிருப்பார்.
முழு நேர அரசியல்வாதியாக தங்கள் நியுஸிலாந்து நாட்டை மீட்டு தன் மயோரி மக்களின் ஆட்சி அதிகாரத்திற்குல் கொண்டு வர வேண்டுமென முழு மூச்சுடன் போராடி வரும் மைபி கிளர்க் அரசியல் பணி மட்டுமின்றி பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம், தோட்டக்கலை என இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பது என பயிற்சி கொடுத்து வருகிறார்.
2023ம் ஆண்டு பிரபல நியூஸிலாந்து வாரியர்ஸ் ரக்பி அணிக்கு மயோரி பழங்குடி மக்களின் போர் தந்திரங்கள் பற்றிய மரமடகா பயிற்சிகளை சொல்லி கொடுத்துள்ளார் மைபி கிளார்க்.
தனது முதல் பாராளுமன்ற உரையில் மயோரி ஹக்காவை பாடி நியூஸிலாந்து மக்களை மயிர்கூச்செரிய வைத்ததுடன், ஆளும் தேசிய கட்சியை நோக்கி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்து அதிர்ச்சியளித்துள்ளார் மைபி க்ளார்க்.
நியூஸிலாந்து நாட்டின் நீர்வளம், நிலவளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து எதிர்கால சந்ததிகள் வாழ தகுதயற்ற நாடாக நியூஸிலாந்தை மாற்றி விட்ட ஆளும் தேசிய கட்சியை நியூஸிலாந்து இளைஞர்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என முழக்கமிட்டுள்ள 21 வயது மைபி கிளார்க்கை நியுஸிலாந்து இளைஞர்கள் பிரதமராக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என இப்பொழுதே ஆருடம் சொல்ல தொடங்கி விட்டார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.