சமீபத்தில், இளம் பெண் ஒருவர் "காச் மூச் கஷ்டம்மெல்லாம் போச்" என்று காட்டுவாசிகள் ஸ்டைலில் கன்னபின்னாவென கத்தி நியுஸிலாந்து பாராளுமன்றத்தை கதற வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ஒரு வித விசித்திர வைபை ஏற்படுத்தியதுடன் யார்டா இந்த புள்ள இந்த கிழி கிழிக்குறா ஒருவேளை நம்மூர்காரியா இருப்பாளோ என ஒரு வித இனம்புரியாத இன்ப பதட்டத்தை நம்மூர் இளைஞர்களுக்கு கொடுத்து விட்டது.
பல இளைஞர்கள் அந்த புள்ளையின் காச் மூச் கலாட்டாவை தங்கள் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் ஸ்டேட்டஸ், ஸ்டோரிகளில் வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன் அந்த பெண்ணை இண்டர்நேஷ்னல் க்ரஷ்ஷாகவே மாற்றி விட்டனர். ஒரே நாளில் உலக பேமஸ் ஆன அந்த இளம் பெண்ணை பார்த்து பிரமிக்கும் பலருக்கும் தெரியாது, மைபி கிளர்க்கின் இன்றைய வைரல் பிரபலத்திற்கு பின் இருக்கும் பெரும் போராட்டமான அரசியல் வாழ்க்கை வரலாறு.
ஆம், சுருக்கமாக மைபி கிளர்க் என்றழைக்கப்படும் 21 வயதேயான ஹன்ன ரவ்டி கரேர்கி மைபி க்ளார்க் என பெயரிலேயே ரவுடி பட்டத்தை வைத்துள்ள மைபி க்ளார்க் நியூஸிலந்து நாட்டின் பூர்வகுடிகளான மயோரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். பெயரிலேயே ரவ்டி இருந்தாலும் மைபி க்ளார்க் 4 பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை டைப் ரவ்டி.
நியூஸிலாந்தின் பூர்வகுடிகளான தன் மயோரி பழங்குடி மக்களை வியாபாரிகளாக வந்த வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்வதில் மைபி கிளார்க் சிறு வயது முதலே அதாவது தன் பள்ளி நாட்களில் இருந்தே எதிர்த்து வந்துள்ளார். அதற்கு காரணம் மைபி கிளார்க்கின் அப்பா போட்டாக்கா மைபி, தாத்தா டைட்மு பைபி, முப்பாட்டன் வை கட்னே என மொத்த குடும்பமும் நியுஸிலாந்து பூர்வகுடிகளான மயோரி பழங்குடி இனத்தின் உரிமைகளுக்காக போராடியவர்கள்.
மயோரி பழங்குடி மக்களே நியூஸிலாந்தின் பூர்வகுடி மக்களாவர். காலனியாதிக்க வெறி ஐரோப்பிய மன்னர்களை ஆட்டிபடைத்த 18ம் நூற்றாண்டில், பல சிற்றரசுகளாக மொத்த நியூஸிலாந்தையும் ஆண்டு வந்த மயோரி மன்னர்களை வீழ்த்தி, 1863ம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் நியூஸிலாந்தை தங்கள் காலனி நாடாக மாற்றினர்.
1945ம் ஆண்டு இரண்டாம் உலக போருக்கு பின்னர், காலனியாதிக்கம் தோல்வியில் முடிந்ததால், ஐரோப்பிய அதிகார வர்க்கம் தங்கள் கொம்பு முளைத்த கிரீடங்களை கழட்டி விட்டு, மூட்டை முடிச்சுகளுடன் சொந்த நாடுகளுக்கு புறப்பட்டனர்.
காலனி நாடுகளை காலி பண்ணி செல்வதற்கு முன், 150 ஆண்டுகளாக காலனி நாடுகளில் குடியேறி வாழ்ந்து அந்தந்த நாடுகளில் நிலையாக வாழ நினைத்த தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, காலனி நாடுகளின் ஆண்ட வர்க்கத்தின் சில கோடாரி கொம்பு தலவர்களை தங்கள் வசம் வளைத்துப்போட்டு, ஐரோப்பிய இனம் வளமாக வாழும்படி சட்டங்களை உருவாக்கி அவர்களிடம் அதிகாரங்களை கொடுத்து விட்டு, காலனி நாடுகளுக்கு பெயரளவிற்கு ஒரு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். அப்படி ஒரு கொடுமையான போங்கு டுபாக்கூர் விடுதலை 1947ம் நவம்பர் 25ம் திகதி நியூஸிலாந்திற்கும் கிடைத்தது.
விடுதலைக்கு பின்னும் சில மயோரி பழங்குடி கோடாரிகொம்பு தலைவர்களின் ஆதரவுடன் வெள்ளையர்கள் நியூஸிலாந்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி, நியூஸிலாந்து பூர்வகுடிகளான மயோரி மக்களுக்கு ஆட்சி அதிகாரங்களில் பங்கு இல்லாமல் உரிமைகள் மறுக்கப்பட்டு கிடைத்தைதை வைத்து கொடுமையான வாழ்க்கை வாழும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.
மைபி க்ளார்க்கின் முப்பாட்டன் வை கட்னே பெரும் அரசியல் போராட்டத்திற்கு பின் நியூஸிலாந்து MP யாகி கவர்னரின் ஆலோசனை குழுவில் இடம் பெற்றவர்.
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும், மைபி க்ளார்க்கின் முப்பாட்டன் காலத்தில் இருந்தே மயோரி பழங்குடி மக்கள் தங்கள் சொந்த நாட்டில் உரிமைகள் ஆட்சி அதிகாரங்கள் மறுக்கப்பட்டு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்துள்ளனர்.
தாத்தா, தந்தை என தன் மொத்த குடும்பமும் போராட்டம் ஆர்ப்பாட்டம் சிறைவாசம் என பெரும் துயரத்துடன் தன் மயோரி பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தங்கள் சொந்த நாட்டிலேயே போராடி வாழ்ந்ததை தன் சிறு வயது முதலே பார்த்து வளர்ந்த மைபி க்ளர்க் பள்ளி படிப்பு முடிந்ததும் தன் 15வது வயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்து விட்டார்.
பொது வாழ்க்கைக்கு வந்ததும் மைபி க்ளார்க் செய்த முதல் சம்பவமே நியுஸிலாந்து மக்களுக்கு பெரும் ஷாக்கை கொடுத்தது. பெரும் கலச்சார நாகரீக வளர்ச்சியுடன், 2000 வருடங்களுக்கு மேலான நீண்ட நெடிய வரலாறு கொண்ட பெரும் மயோரி பழங்குடி இனம் நம்ம ஊர் சாதி பிரிவினை போல், சிறு சிறு குழுக்களாக பிரிந்து வெவ்வேறு அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் ஆதரித்து வந்ததுடன் தங்கள் இன குழுவில் இருந்து யாரேனும் அரசு ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என நினைத்து வாக்களித்து வந்தனர். ஆனால் அனைத்து இன குழுக்களுக்கும் பொதுவாக இருந்தது அவர்களின் பூர்வீக தாய் மொழியான மயோரி மொழி.
மைபி கிளார்க், சரியாக குறிவைத்து, அனைத்து சிறு சிறு இன குழுக்களும் மயோரி பழங்குடி இனம்தான் நாம்தான் நியூஸிலாந்தின் ஓனர்கள். மயோரி மொழியை தாய்மொழியாக கொண்ட நாம் தான் இந்த நாட்டை ஆள வேண்டியவர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக புரிய வைத்தார். அதற்கு ஆயுதமாக மைபி க்ளார்க் எடுத்தது மயோரி பூர்வ குடிகளின் ஆதி முன்னோர்களின் மரமடகா என்ற வானியல், போரியல் உள்ளடங்கிய இயற்கை சார்ந்த வாழ்க்கை பற்றிய தொல்லியல் குறிப்புகளை.
மரமடகா பற்றி இரண்டு வருடங்கள் பெரும் ஆய்வு செய்த மைபி கிளார்க், தன் 17வது வயதில் 2020ம் ஆண்டு மாஹினே என்ற புத்தகத்தை வெளியிட்டார். செழிப்பான இயற்கை வளம் எப்படி மனிதர்களுக்கு உடல், மனம், மற்றும் பாசிட்டிவ் உணர்வுகளை மேம்படுத்துகிறது என்று தெளிவாக விளக்கிய மாஹினே புத்தகம் நியூஸிலாந்து இளைஞர்களிடம் பெரும் வரவேற்பையும் தெளிவையும் கொடுத்ததுடன் பூர்வகுடிகளே நியூஸிலாந்தை ஆட்சி செய்ய வேண்டும் என்ற மைபி கிளார்க்கின் அரசியல் கருத்துகளை ஏற்கவும் துண்டியது.
நாகரீக, பொருளாதார வளர்ச்சியே உலகத்தை உயர்த்தும் என்ற கார்ப்ரேட் பொய் பிரச்சாரங்களில் சிக்கி பொருளாதாரத்திற்கு பின் ஓடி ஓடி தங்களின் நிகழ் கால வாழ்க்கையையும் எதிர்கால சந்ததியின் வளங்களையும் அழித்து சலித்துப்போன பல ஆயிரம் இளைஞர்கள் மைபி கிளார்க்கின் பின் அணி திரண்டனர்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2 - வீடியோ