Monday 23rd of December 2024 - 07:16:50 PM
தோழியை கொன்று பிணத்தை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 1
தோழியை கொன்று பிணத்தை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 1

எத்தனை நாட்கள்தான் பொறுமையாக இருப்பது. பொறுத்தது போதும், இன்றைக்கு பொங்கி தின்று விட வேண்டும் என முடிவெடுத்த இஸ்ஸே சகாவா, போனை எடுத்து ரெனி ஹார்ட்வெல்ட்டின் நம்பரை டயல் செய்தான். இன்று வெள்ளி கிழமை எத்தனை மணிக்கு வருகிறாய் என்றான். வழக்கம் போல் 4 மணிக்கு என்றாள் ரெனி ஹார்ட்வெல்ட். எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு 6 மணிக்கு வர முடியுமா? அப்படியே இங்கேயே டின்னர் சாப்பிட்டு விட்டு செல்லலாம். என்றான் இஸ்ஸே சகாவாவின் திட்டம் தெரியாத அப்பாவி ஹார்ட்வெல்ட் சிரித்துக் கொண்டே சரி என்றாள்.

நாக்கில் எச்சில் ஊற, கள்ள சிரிப்போடு போனை வைத்த இஸ்ஸே சகாவா, பல மாதங்களுக்கு முன் பாரிஸ் லோக்கல் கைத்தடிகளிடம் கொள்ளை காசுக்கு வாங்கிய அந்த பிஸ்டலை எடுத்து பார்த்தான். ஹார்ட்வெல்ட்டின் உயிர் மட்டும்தான் உனக்கு, ரத்தம் சதைகள் எனக்கு என பிஸ்டலிடம் பங்கு விவரங்களை சொன்னவன். ஷெல்பில் அடுக்கி வைத்திருந்த வகை வகையான புது கத்திகளை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான். சதை எலும்புகளை வெட்டும் வேலை மாட்டும்தான் உங்களுக்கு, வறுத்து வாய்க்கு ருசியாக தின்னும் வேலை எனக்கு என கத்திகளின் கடமையை கண்டிப்புடன் சொல்லி விட்டு ஷெல்பை மூடினான்.

6 அடிக்கு 2 இன்ச் தான் குறைவு, குதிரைக்கு குர்தா போட்டது போல் எப்படி இருக்கிறாள் இந்த ஹார்ட்வெல்ட். 25 வயது என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். 16 வயது பால்கோவா மாதிரி இருக்கிறாள். இவளை தின்று விட்டால் போதும், நாமும் உயரமாகி, ஹார்ட்வெல்ட் மாதிரி, தளக் புளக் தக்காளி பழம் போல் தகதகவென மின்னலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் 32 வயது சப்பை மூக்கு ஜப்பான்காரன் இஸ்ஸே சகாவா.

4 அடி 9 இன்ச் உயரம், கோட் சூட் ஷூ சாக்ஸ் கழட்டாமல் வெயிட் போட்டாலும் 35 கிலோ தண்டமாட்டான், சப்பி போட்ட பனங்காய் போல் தலை முடி வைத்திருந்த இஸ்ஸே சகாவா. 1949ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திக்தி, ஜப்பானின் 3வது பெரிய கடற்கரை நகரமான கோபியில், கொள்ளை காசு வைத்திருந்த கோடீஸ்வர குடும்பத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தான்.

அப்பா அகிரா சகாவா, உலக புகழ் பெற்ற குரிட்டா வாட்டர் இண்டஸ்ற்றியின் பிரஸிடெண்டாக இருந்தவர். தாத்தா ஜப்பானின் டப் 5 நியூஸ் பேப்பர்களின் ஒன்றான த அஷாஹி ஷிம்புன் செய்தி தாளில் எடிட்டராக இருந்தர்வர். இப்படிப்பட்ட பாரப்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த பண்ணாடைதான் இஸ்ஸே சகாவா.

குறைப்பிரசவத்தில் பிறந்ததால், பிறந்த போது பெரிய சைஸ் பல்லி போல், தந்தையின் உள்ளங்கைக்குள் அடங்கி போய் விடும் அளவிலேயே  இருந்த சகாவாவை, இருக்கும் சொத்தை வித்து சோறு போட்டாவது  தேத்தி விடலாம் என நினைத்த பெற்றொருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்ன கருமத்தை தின்றும், எத்தனை டாக்டரை பார்த்தும், சகாவாவின் சப்பிப் போட்ட உடம்பில் சதை ஏறுவதாக இல்லை.  

வழக்கமான சைக்கோக்களின் கதை போன்றே, மற்றவர்களின், கிண்டல் கேலிக்கு உண்டான சகாவா, தாழ்வு மனப்பான்மையுடன், தனிமையில் உழன்றான், போரடிக்குது என்று புத்தகங்கள் படிக்க தொடங்கியவன், பெரிய புத்தக புழுவாகவே மாறிப் போனான். உருவத்தால் ஒதுக்கப்பட்ட சகாவாவை புத்தகங்கள் புத்திசாலியாக மாற்றியது.  பார்ப்பதற்கு பல்லி சைசில் இருந்தாலும் சகாவாவின் மூளை மட்டும் மூன்று கிலோ அளவிற்கு வேலை செய்தது. அதனால் படிப்பில் படு சுட்டியாக இருந்தான்.

ஒல்லியாகா, குள்ளமாக அழகில்லாமல் இருப்பதால்தானே இந்த சமூகம் நம்மை சல்லி பயலாக கேவலப்படுத்தி கேலி கிண்டல் செய்கிறது. எப்படியாவது உடம்பை தேத்தி, அழகை ஏத்த வேண்டும். அதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என மூளையை கசக்க தொடங்கினான். சகாவா கசக்கிய கசக்கில் மூளை குழம்பி கொடுர சிந்தனை ஒன்று சிரித்தபடி வெளிப்பட்டது. கும்மென்று இருக்கும் யாரேனும் ஒரு ஐரோப்பிய அழகு தேவைதையை சாப்பிட்டால் அவளின் அழகு மொத்தமும் நாம் உடலில் ஏறிவிடும். பின் நாம் அந்த ஐரோப்பிய அழகி போல் தகதகவென மின்னலாம். நம்மை கேலி கிண்டல் செய்த இந்த சப்பை மூக்கு ஜப்பானியர்களின் முன் திமிராக திரியலாம்.

குறுக்கு குதர்க்க புத்தி சொன்ன அடுத்த நொடியில் இருந்தே நாக்கை சப்புகொட்டியபடி தன் அழகிற்கு அழகு சேர்க்க போகும் அந்த ஐரோப்பிய அழகியை தேட தொடங்கினான் சகாவா.

ஐரோப்பிய அழகு தேவதையை தேடியபடியே பள்ளி படிப்பை பர்ஸ்ட் கிளாஸில் முடித்தவன், டோக்யோவின் வாக்கோ யுனிவர்ஸிட்டியில் இங்லீஷ் லிற்றேச்சரில் மாஸ்டர் டிகிரி முடித்தான். மாஸ்டர் டிகிரி வரை படித்து முடித்தாகிவிட்டது, வயசும் ஏறிக் கொண்டே போகிறது ஆனால் இன்னும் சகாவாவின் வாய்க்கு ருசியாக அவன் அழகை மெருகூட்ட ஒரு ஐரோப்பிய அழகு தேவைதை கிடைக்கவில்லை. இங்கு ஜப்பானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திரியும் ஐரோப்பிய பெண்களில் பாதிபேர் பஞ்சத்தில் அடிபட்டது போல் வத்தலும் தொத்தலுமாக இருக்கிறார்கள். நாம் ஸ்ற்றெயிட்டா ஐரோப்பாவிற்கே போவோம் அப்பொழுதுதான் ஆப்ஷன்ஸ் நிறைய கிடைக்கும் என முடிவு செய்து. 1977ம் ஆண்டு, தன் 28வது வயதில், பிரான்ஸின் புகழ் பெற்ற பாரிஸ் ஸோர்பன்னெ யுனிவர்ஸிட்டியில் பி.ஹெச்.டி பட்ட படிப்பிற்காக சேர்ந்தான்.

பிஸியான பாரிஸ் நகரில் ஒரு வீட்டை வடகைக்கு எடுத்து தனியாக தங்கியவன், தினமும் இரவில் பாரிஸ் தெருக்களில் சுற்றி தேடி திரிந்து கும்மென்று இருக்கும் ஒரு விலைமாதுவை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவான். இன்றைக்கு இவளை பொடிமாஸ் போட்டு விட வேண்டும் என நாக்கில் எச்சில் ஊற துப்பாக்கியை எடுத்த போதெல்லாம், பயத்தில் கைகால்கள் நடுங்க ஊறிய எச்சிலை சத்தமில்லாமல் விழுங்கி விட்டு துப்பாக்கியை தூக்கி ஓரம் போட்டு விடுவான். இப்படி பல ஆயிரம் ப்ராங்குகள் வீணானதுதான் மிச்சம், ஆனால் சகாவாவிற்கு இன்னும் சரியான வேட்டை கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தருணத்தில்தான் ரினே ஹார்ட்வெல்ட்டை சந்தித்தான் சகாவா.  
 
ரினே ஹார்ட்வெல்ட் சகாவாவின் கிளாஸ்மேட். அளவுக்கு மிஞ்சிய அழகுடன் இருந்த அவள் தன்னிடம் இல்லாத புத்திசாலிதனம் சகாவாவிடம் இருப்பதால் அவனுடன் நட்புடன் பழகினால். ஆகா அல்வா துண்டு அதாகவே தட்டில் விழுதே என மனதிற்குள் மகிழ்ந்த சகாவா, மனதிற்குள் ஒரு திட்டத்தோடு, எனக்கு ஜெர்மன் மொழி கற்றுக் கொடு என கேட்க, ஓகே சொன்ன ஹார்ட்வெல்ட், சகாவாவிற்கு ஜெர்மன் மொழி கற்றுக் கொடுபதற்காக வீக் எண்டுகளில் சகாவாவின் வீட்டிற்கு வந்து சென்றாள்.
அப்படியொரு வீக்கெண்ட் வெள்ளிகிழமைதான். 1981ம் ஆண்டு ஜூன் 12ம் திகதி.

இரவு மணி 7. சொன்னபடி, சகாவா வீட்டில் இருந்தாள் ஹார்ட்வெல்ட். ஜெர்மன் கவிதை ஒன்றை மொழி பெயர்த்து சகாவாவிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் ஹார்ட்வெல்ட், கவிதை புத்தகத்தை கையில் பிடித்தபடி, முன்னும் பின்னும் நளினத்தோடு நடைபயின்றபடி சத்தமாக கவிதையை படிக்க, சகாவா சேரில் அமர்ந்தபடி படபடப்போடு ஹார்ட்வெல்ட்டை கவனித்துக் கொண்டிருந்தான். ஜெர்கின் பாக்கெட்டுக்குள் ஒளிந்திருந்த அவன் கைகளில் தவழ்ந்த துப்பாக்கி எந்த நொடி வெடிக்கலாம் என ஏக்கத்தோடு காத்திருந்தது.

- தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் -2 

டிரண்டிங்
மரண படுக்கையில் ஸ்டாலினுக்கு நடந்த கொடூரங்கள். குலாக் தடுப்பு முகாம் 3
வரலாறு / 19 மே 2024
மரண படுக்கையில் ஸ்டாலினுக்கு நடந்த கொடூரங்கள். குலாக் தடுப்பு முகாம் 3

ஜெர்மனிய மக்களின் ஹீரோவாக இரண்டாம் உலகப்போரை தொடங்கி இறுதியில் வில்லனாக வீழ்ந்து போனவர் அடால்ப் ஹிட்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி