பங்களாவின் சுவர் முழுதும் ஆங்காங்கே மாடர்ன் ஆர்ட் போல் மனித ரத்த கறைகள் கோலம் போட்டிருந்தன. இரும்பு செயின், சுத்தியல், ரம்பம், கோடாலி, என கொடூர ஆயுதங்கள் காய்ந்த ரத்த கறைகளுடன் ஹாயாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இரண்டு பேரல்களில், தளும்ப தளும்ப 200 லிட்டர் ஹைற்றோகுளோரிக் ஆஸிட் அடுத்தது யார் என்ற ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தன. உள்ளே அரைகுறையாக ஆஸிட்டில் கரைந்தது போக மீதி மிச்சமாக மிதந்து கொண்டிருந்தன பல சிறுவர்களின் சதை பிண்டங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கொலை செய்யப்பட்ட 100 சிறுவர்களின் புகைப்படங்களுடன் ஜவித் இக்பால், அவர்களை எங்கு, எந்த தேதியில் பிடித்தான் என்ற விவரங்கள் ஒழுங்காக பைல் செய்யப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அடுத்து பல மதங்களுக்கு இரை கிடைத்துவிட்ட வெறியில் பிரஸ் பீப்பிள் பங்களாவை வளைத்து வளைத்து போட்டோக்கள் எடுத்துத்தள்ள, சரிதான், சைத்தான் சைக்கிள்ல வந்துருச்சு என போலிஸார் ஜாவித் இக்பாலின் கொலை பைலை கையில் பிடித்தபடி தலையை பிய்த்துக் கொண்டிருந்தனர்.
கடைசியில் கடிதத்தில் ஜாவித் இக்பால் எழுதியிருந்தவை உண்மைதான் என்பதை உறுதிபடுத்திக் கொண்ட போலிஸ், கடிதத்தில் சொன்னபடி அந்த பைத்தியத்தின் பாடி ராவி ஆற்றில் மிதக்கிறதா என பார்க்க, ஒரு போலிஸ் டீம் அங்கு ஓடினார்கள். அதே சமயத்தில் கமிஷ்னர் ஸாட் அசீஸ் தலைமையில், இன்னொரு போலிஸ் டீம் அந்த பங்களாவிற்கு அருகில் வசித்தவர்களிடம் விசாரணை வலையை வீசினார்கள். வலையில் கொத்தாக சிக்கியது ஜாவித் இக்பாலின் இன்றைய தேதி வரையிலான மொத்த STD யும்.
1961ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கட்டம் சரியில்லாத ஏதோ ஒரு தரித்திர நாளில் பிறந்த்திருந்தான் ஜாவித் இக்பால் முஹல். அப்பா முகமது அலி முஹல் ஓரளவிற்கு வசதியான ஸ்டீல் பிஸினஸ்மேன். இக்பால் முகலுடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர்.
1978ம் ஆண்டு கவர்மெண்ட் இஸ்லாமிக் காலேஜில் இண்டர்மீடியட் ஸ்டூடண்டாக படித்த ஜாவித் இக்பால், அப்பொழுதே சொந்தமாக ஸ்டீல் ரீகாஸ்டிங் பிஸ்னஸை தொடங்கி சம்பாதிக்க ஆரம்பித்தான். பிஸ்னஸ் நன்றாக பிக் அப் ஆனதும், அப்பா முகமது அலி அவனுக்காக வாங்கி போட்டிருந்த ஷாத்பாக் பங்களாவிற்கு குடி வந்தவன். கூடவே சில அல்லறை சில்லறைகளையும் தங்க வைத்திருந்தான்.
அந்த அல்லறை சில்லறைகளில் அதி முக்கியமான அராத்துகள். 19 வயது ஸபார் அகமத், 17 வயது சஜீத் அஹமத், 15 வயது முஹம்மத் நதீம், 14 வயது மம்மத் சபீர்.
அதே நேரம் ஜாவித் இக்பாலின் பாடியை தேடி ராவி நதிக்கு சென்ற போலிஸ், உண்மையாகவே பெரிய பெரிய வலைகளை விசி ராவி நதியின் அடி ஆழம் வரை அலசி எடுத்து விட்டார்கள். ராவி நதியில் இருந்த கடைசி தவளை முட்டை கூட வெளியில் வந்து விட்டது, ஆனால் ம்கும் கடைசி வரை அவர்களுக்கு ஜாவித் இக்பாலின் பாடி கிடைக்கவில்லை.
பொய் சொல்லிட்டான் போல என புலம்பிய போலிஸ், ஷாத்பாக்கிலிருந்து 200 கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்த சொஹாவா என்ற டவுனில் பதுங்கியிருந்த ஜாவித் இக்பாலின் அல்லக்கைகள் நான்கு பேரையும் கொத்தாக கொத்தி தூக்கி, ஸாட் அசீஸ் தலமையிலான போலிஸ் டீமிடம் ஒப்படைக்க, அவர்கள் அந்த நான்கு சில்வண்டுகளையும் ஸ்டேஷனில் வைத்து சிறப்பாக கவனித்தும் ஜாவித் இக்பால் எங்கே சென்றான் என்ற கேள்விக்கு அவர்களிடமும் பதில் இல்லை.
போலிஸின் ஸாப்ட் அப்ப்ரோச்சை தாக்கு பிடிக்க முடியாத ஸபார் அஹமத் போலிஸ் ஸ்டேஷன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், போலிஸ் பொளந்து கட்டியதால்தான் ஸபார் அகமத் இறந்தான் என தலையை சொறிந்தது. வழக்கம் போல் அப்பாவி போலிஸார் அய்யய்யோ அபத்தம் அபத்தம், அது ஒரு விபத்து விபத்து என சொல்லி அப்பீட் ஆனார்கள்.
மிச்சம் மூன்று பேரையும் மொத்தி எடுத்தும் போலிஸால் ஜாவித் இக்பால் எங்கு இருக்கிறான் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், ஜாவித் இக்பால் கடிதத்தில் சொல்லாத பல விசயங்களை அந்த மூன்று மூதேவிகளால் போலிஸிற்கு தெரியவந்தன.
அடங்காமல் அடாவடி செய்து தறுதலைகளாய் சுற்றி திரிந்த நான்கு பேரையும் அவர்கள் வீட்டிலிருந்து துரத்தி விட, தெருவில் தங்கி சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்களை, தத்தெடுத்து ஓஸி சோறு போட்டு வளர்த்து வந்துள்ளான் ஜாவித் இக்பால், கைமாறாக தெருவில் சுற்றி திரியும் சிறுவர்களை சாப்பாடு தருகிறோம், என சொல்லி இக்பாலின் பங்களாவிற்கு கூட்டி வருவது நான்கு பேரின் தலையாய கடமை. பல நேரங்களில் ஜாவித் இக்பாலின் கொலை விருந்திலும் தங்கள் பங்களிப்பை பங்கமின்றி செய்த்துள்ளார்கள் நான்கு பேரும்.
சிறுவர்களை கவந்திழுப்பதற்காக ஒரு வீடியோ கேம் செண்டரை நடத்தி வந்துள்ளான் ஜாவித் இக்பால், அங்கு வீடியோ கேம் விளையாட வந்த பல சிறுவர்களை இலவசமாக வீடியொ கேம் விளையாட வைத்து தன் சித்து சில்மிஷ வேலைகளை அவர்களிடமும் காட்டியுள்ளான். ஜாவித் தங்களை என்ன செய்கிறான் என தெரியாமலேயே அந்த பிஞ்சு சிறுவர்கள் அடிக்கடி இலவசமாக வீடியோ கேம் விளையாட ஜாவித் இக்பாலின் ப்ளே ஸ்டேஷனுக்கு வந்து சென்றுள்ளார்கள்.
இப்படி பல புது புது ஐட்டங்களாக ஜாவித்தின் சித்து சில்மிஷ விளையாட்டுகள் வெளிவந்தாலும், அவன் எங்கு ஒளிந்திருக்கிறான் என்ற விவரம் மட்டும் போலிசிற்கு கிடைக்கவே இல்லை. போலிசும் பாகிஸ்தான் முழுதும் சல்லடை போட்டு துளாவி விட்டது ஆனால் எந்த பலனும் இல்லை, கடைசியில் 1999ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி லாகூரில் உள்ள டெய்லி ஜங் என்ற பாகிஸ்தானின் பிரபல உருது நியூஸ் பேப்பரின் அலுவலகத்தில் கையை தூக்கியபடி சரண்டர் என சரணடந்தான் ஜாவித் இக்பால். போலிஸ் என்னை ரகசியமாக பிடித்து கொலை செய்து விடுவார்கள், எனவேதான் மீடியா மூலம் சரணடைகிறேன் என விளக்கமெல்லாம் கொடுத்தான்.
உன் விளக்க வெங்காயததை குப்பையில் போடு என, பொடனியில் ரெண்டு போட்டு இக்பாலை கைது செய்த போலிஸ், விசாரணை என்ற பெயரில் சில நாட்கள் வகையாக கவனித்த பின் இக்பாலை லாகூர் நீதி மன்றத்தில் நீதிபதி அல்லா பக்ஸ் முன் ஆஜர் படுத்தினார்கள்.
இஸ்லாமிய ஷிரியா வழிகாட்டுதல்களை ஸ்ற்றிக்டாக பாலோ பண்ணும் ஜட்ஜ் அல்லா பக்ஸ், 2000ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி, ஜாவித் இக்பாலால் கொலை செய்யப்பட்ட 100 சிறுவர்களின் பெற்றோர் முன்னிலையில், ஜாவித் இக்பாலுக்கு 100 முறை கத்தியால் குத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். அவனது உடல் 100 துண்டுகளாக வெட்டப்பட்டு ஹைற்றோ குளோரிக் ஆசிட்டில் கரைக்கப்பட வேண்டும் என்று ரொம்பவவும் ஸாப்டான ஒரு தண்டனையை ஜாவித் இக்பாலுக்கு வழங்கினார்.
அய்யயோ மனித உரிமை கமிஷனில் மெம்பரான பாகிஸ்தானில் இப்படி தண்டனைகள்வழங்கப்பட்டால் ஐநா சபை கொந்தளித்து பாகிஸ்தானை தாளித்து தள்ளி விடும் அதனால், இந்த தண்டனையை நிறைவேற்ற முடியாது என பாகிஸ்தானின் உள் விவகாரதுறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதர் கத்தி கூச்சலிட. ஜாவித் இக்பாலின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
ஜாவித்தின் சித்து சில்மிஷ விளையாட்டுகளில் அவனுக்கு ஒத்தாசை உதவியாக இருந்த 15 வயது முஹமத் நதீமிற்கு 182 வருட சிறை தண்டனையும், 13 வயது மம்மத் ஷபீருக்கு 63 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
லாஹூர் கோட் லாக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஜாவித் இக்பாலும் அவன் பங்காளி சஜீத் அஹமதும். 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி, அவரவர் செல்களில் தங்கள் பெட்ஷீட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இப்படிதான் போலிஸ் பாகிஸ்தான் பிரஸிடமும் மக்களிடமும் சொன்னார்கள், ஆனால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இறப்பதற்கு முன் ஜாவித் இக்பாலும், சஜீத் அஹமதும் சிறப்பான முறையில் செங்கல் செங்கலாக பொளக்கப்பட்டார்கள் என சொல்லி பாகிஸ்தான் போலிஸின் பாவத்தை வாங்கி கட்டிக் கொண்டது.
ராவி ஆற்றில் தான் கலந்த சிறுவர்களின் உடலோடு சங்கமிக்க நினைத்த ஜாவித் இக்பாலின் உடல், அங்கும் அவன் ஆவியாக சுற்றி அந்த சிறுவர்களை ஏதும் செய்து விடுவானோ என்ற அச்சத்தில், லாகூர் போலிஸால், அநாதை பொணமாக லாஹூர் கோட் லாக்பத் சிறையில் அடக்கம் செய்யப்பட்டது.