Monday 23rd of December 2024 - 07:18:21 PM
100 சிறுவர்களை கற்பழித்து கொன்று ஆசிட்டில் கரைத்த கொடூரன் - ஜாவித் இக்பால் மொஹல் 1
100 சிறுவர்களை கற்பழித்து கொன்று ஆசிட்டில் கரைத்த கொடூரன் - ஜாவித் இக்பால் மொஹல் 1
எல்லாளன் / 10 மே 2024

அந்த இளைஞனின் உடலில் கொஞ்சம் உயிர் மிச்சமிருந்தது. மறுநாள் காலை கோர்ட்டில் நீதிபதிகளிடம் தண்டனை வாங்கி கொடுப்பதற்காக அந்த கொஞ்ச உயிரை போலிஸ் மிச்சம் வைத்திருந்தார்கள். மிச்ச மீதி உயிருடன் முணகியபடி மறுநாள் காலை தனக்கு கிடைக்க போகும் தண்டனை என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் உடலை உறுத்திக் கொண்டிருந்த வலிகளை மறந்து மரண பயத்துடன் மறுநாள் காலை விடியலுக்காக போலிஸ் ஸ்டேஷனின் இருட்டு செல்லுக்குள் துடித்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

1990ம் ஆண்டு பாக்கிஸ்தான் பக்ரீத்தை கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த ஜூலை மாதத்தின் ஒரு காலை. லாகூரின் ராவி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள ஷாத்பாக் நகர போலிஸ் அந்த இளைஞனை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

வீட்டை விட்டு ஓடி வந்து சாலையில் படுத்திருந்த மன்சூர் என்ற 12 வயது சிறுவனை கற்பழித்து விட்டான் என்ற குற்றசாட்டை கேட்ட நீதிபதி, கோபத்துடன் அந்த இளைஞனை முறைத்தார். ஐயா பொய் சொல்றாங்க எனக்கு ஒன்றும் தெரியாது என மறுத்த அந்த இளைஞனின் மன்றாட்டை மதிக்காத நீதிபதி. 6 மாதம் கடும்காவல் என சொல்லி, சுத்தியலை மடாரென மேஜையில் தட்டினார்.

9 வருடங்கள் ஓடிப்போனது. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம், லாகூர் போலிஸிற்கு சனி உச்சத்தில் இருந்த ஒரு நன்னாளில், லாகூர் போலிஸ் ஹெட்குவார்டர்ஸிற்கு வந்தது அந்த கடிதம். வழக்கம் போல் கமிஷ்னருக்கு ஒரு வணக்கத்தை போட்டு விட்டு தொடர்ந்த கடிதத்தில், என் பெயர் ஜாவித் இக்பால் முகல். வயது 38. ஷாத்பாக் நகரில் உள்ள எனது பங்களாவில் வசித்து வருகிறேன், என பயோ டேட்டா விவரங்களை கொடுத்த கடிதம் தொடர்ந்து பல பயங்கர பய டேட்டாக்களை கொடுக்க தொடங்கியது.

நான் எடுத்த ரெஷொலுஷன் படி, 6லிருந்து 16 வயதுக்குட்பட்ட, 100 சிறுவர்களை கொலை செய்து முடித்து விட்டேன். என் கடமை முடிந்தது. இனி உங்களுக்கு ஒரு கடமை பாக்கியிருக்கிறது. அந்த 100 சிறுவர்களும் யார் என்று அடையாளம் கண்டு பிடித்து அவர்களின் தாய்மாரிடம் தகவல் சொல்ல வேண்டும். ஆம், அடையாளம் கண்டுபிடித்து. புரிகிறதா? அடையாளம் கண்டு பிடிப்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டமாயிருக்கும்.

ஏனென்றால் எனது சம்பவங்கள் அப்படி. கொலை என்றால் ச்சும்மா கடமைக்கு கழுத்தறுத்து கணக்கை முடிக்கும் ரகம் அல்ல நான். ஹன்ரட் பர்ஷண்ட் அக்மார்க் ப்ரபஷனல் சாடிஸ்ட் சைக்கோ போல் 100 சிறுவர்களையும் கர்ண கொடூரமாக கற்பழித்து, சித்ரவதைகளால் சிதைத்து சின்னா பின்னமாக்கி கொலை செய்தேன். பிணங்களை ஹைற்றோகுளோரிக் ஆசிட்டில் கரைத்து அந்த கரைசலை அருகில் உள்ள ராவி ஆற்றில் கலந்து விட்டேன். 

ஆசிட்டில் ஒழுங்காக கரையாத சில சதை பிண்டங்கள் ஆற்றங்கரையில் இன்னும் கிடக்க வாய்ப்புண்டு. உங்களுக்கு காட்டுவதற்காக கொஞ்சம் சதைகளை ஷாத்பாக் நகரில் உள்ள என் பங்களாவில் பாதுகாத்து வைத்துளேன். அவை அங்கு உங்கள் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. நீங்கள் அங்கே செல்லும் பட்சத்தில் அவற்றை கண்டு களிக்கலாம். விரைந்து சென்று உங்கள் விசாரணை வலையை விரியுங்கள். உங்களுக்காக கண்ணீருடன் 100 லாகூர் தாய்மார்கள் தவிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன்? எதற்கு? எதனால்? இந்த கொலைகள்? விளக்கம் வேண்டுமென்றால் லாகூர் ஷாத்பாத் நகர போலிஸ் ரெக்கார்டுகளை புரட்டி பாருங்கள். ஆம், உங்களுக்கு தெரியாது. வேண்டுமானால் உங்கள் சீனியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 1990ம் ஆண்டு இதே லாகூர் ஷாத்பாத் நகர போலிஸ், வீட்டை விட்டு ஓடி வந்து தெருவோரம் வசித்து வந்த 12 வயது சிறுவன் ஒருவனை 29 வயது இளைஞன் கற்பழித்து விட்டான் என பொய்யாக குற்றம் சாட்டி, போலிஸ் ஸ்டேஷனில் வைத்து பொளந்து கட்டிய பின், சிறையில் அடைத்து சித்ரவதை செய்தார்கள்.

சிறையின் இருட்டு அறைக்குள் தன் வாழ்க்கை முடிந்து விட்டது என குமுறி அழுது நரக வேதனையை அனுபவித்த தன் மகனின் நிலையை, காண சகிக்காமல் நித்தம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த, அவனது 50 வயது தாய் ஹார்ட் அட்டாக்கால் இறந்து போனாள். அன்று நான் எனக்கே ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன், இறந்த அந்த அப்பாவி தாயின் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டியது லாகூர் போலிஸ் டிபார்ட்பெண்ட். ஆனால் அவர்கள் சொல்லவில்லை, எனவே அந்த தாய் கண்ணீர் விட்டு துடித்து அழுதது போல் இந்த லாகூர் போலிஸின் பாதுகாப்பில் உள்ள 100 தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறி அழ வேண்டும். அந்த 100 தாய்மார்களுக்கும் லாகூர் போலிஸ் டிபார்ட்மெண்ட் பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்க வேண்டும் அதை நான் ரகசியமாக ரசித்து மகிழ வேண்டும்.

எனது கடமை, குறிக்கோள் நோக்கம் அனைத்தையும்  தங்கு தடையின்றி இனிதே நிறைவேற்றி விட்டேன். இனி எனக்கு இந்த உலகில் ஏதும் இல்லை. என்னால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறுவர்களின் உடல்கள் கலந்த ராவி ஆற்றிலேயே என்னுடைய உடலும் கரைந்து கலக்க வேண்டும் என விரும்புகிறேன், எனவே இந்த கடிதம் தங்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் பொழுது எனது உடல் ராவி ஆற்றில் மிதந்து கொண்டிருக்கும். 

1990ம் ஆண்டு லாகூர் போலிஸால் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் சித்ரவதை அனுபவித்து தன் தாயின் பரிதாப மரணத்திற்கு பின் விடுதலையான 29 வயது இளைஞன் ஜாவித் இக்பால் முகல் என்கிற நாந்தான் என முடிந்தது அந்த கடிதம்.

முகம் முழுதும் வேர்த்துக் கொட்ட வெலவெலத்து போனர்கள் போலிஸார். பொல்லாத வேலைக்கு போறோம், இதில் போலிஸை வேறு குற்றம்சாட்டியுள்ளான், கடிதத்தில் உள்ளது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மொத்த பாகிஸ்தானும் பற்றி எரியும் வாய்ப்புண்டு என பதறிய போலிஸார் எதற்கும்  துணைக்கு இருக்கட்டும் என கொஞ்சம் ரிப்போர்ட்டர்களையும் உடன் அழைத்து கொண்டு ஜாவித் இக்பால், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அவனது ஷாத்பாத் நகர பங்களாவிற்கு படையெடுத்தனர்.

உயிருடன் யாரும் துணைக்கு இல்லாத அநாதையாக, உள்ளே 100 சிறுவர்களின் ஆன்மாக்களுடனும் சில அங்கங்களுடனும் போலிஸை புன்முறுவலுடன் வரவேற்றது 3 பெட்ரூம்கள் கொண்ட அந்த படுகொலை பங்களா.

உள்ளே காத்திருக்கும் திகில் பற்றி அப்பொழுது அறிந்திராத போலிஸ், பங்களாவிற்குள் நுழைந்தனர்.

- தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் 2

டிரண்டிங்
படுக்கையில் இறந்த படி 30 வருடம். பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற நபர்கள்
மர்மங்கள் / 08 நவம்பர் 2024
படுக்கையில் இறந்த படி 30 வருடம். பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற நபர்கள்

டோக்கியோவின் வயதான மனிதர் என்று பட்டியலிடப்பட்ட சோகென் கட்டோவை அவரது 111 வது பிறந்தநாளில் வாழ்த்துவத

ஐந்தாவது முறையாக அதிபரானார் புதின். எதிர் கட்சிகளே இல்லாமல் செய்த ரஷ்ய மக்கள்.
அரசியல் / 07 மே 2024
ஐந்தாவது முறையாக அதிபரானார் புதின். எதிர் கட்சிகளே இல்லாமல் செய்த ரஷ்ய மக்கள்.

புதினை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலாய் ஹர்டினோவ் 4.37 சதவீத வாக்குகளையே

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
சினிமா / 13 மே 2024
"மது அடிமை" நடிகை ஊர்வசியின் கருப்பு பக்கங்கள்.

"சாஞ்சாட்டம்", "மறுபுறம்",  "ஸ்நேகசகரம்", "வெங்களம்", "உட்சவமேளம்" என பல ஹிட் திரைப்படங்களில் இணைந்த

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி