முந்தைய பகுதி: பாகம் 1.
மொத்தம் 918 பேர் ஜோன்ஸ் டவுனில் குடியிருந்தார்கள், விவசாயம் செய்கிறேன் என்ற பெயரில் மக்களை ஜிம் ஜோன்ஸ் கொடுமைகள் செய்வதாக வெளி உலத்திற்கு தகவல்கள் வர தொடங்கின. 1978ம் ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி, பீப்பிள்ஸ் டெம்பிள் அமைப்பினர் ஜோன்ஸ்டவுனில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகின்றனர் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
அமெரிக்க அதிபர் ஜான் கொன்னடி படுகொலை வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் மார்க் லேனை தனது வழக்கறிஞராக நியமித்தான் ஜிம் ஜோன்ஸ், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம், 1978ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லியோ ரேயன் ஜோன்ஸ்டவுனில் என்ன நடக்கிறது என நேரடியாக பார்வையிட சென்றார் அவருடன் NBC செய்தி நிறுவன நிரூபர்கள், கேமராமேன், மற்றும் சில பத்திரிகை நிரூபர்கள் சென்றிருந்தனர்.
லியோ ரேயன் குழுவிற்கு சிறந்த வரவேற்பு கொடுத்த உபசரித்தனர் ஜோன்ஸ் டவுனில் இருந்த ஜிம் ஜோன்ஸின் ஆட்கள், விருந்து நடந்து கொண்டிருக்கும் பொழுதே வெரோன் கோஸ்னி என்பவர் NBC ரிப்போர்ட்டர் டான் ஹாறிஸிடம் ரகசியமாக ஒரு கடிதத்தை கொடுத்தார் அதில் தன்னையும், மோனிகா பேக்பி என்ற பெண்ணையும் ஜோன்ஸ் டவுனில் இருந்து மீட்டு செல்லும்படி எழுதியிருந்தார். வெரோன் கோஸ்னி கடிதம் கொடுத்ததை கவனித்து விட்ட சிறுவன் ஒருவன் அதை மற்ற ஜோன்ஸ்டவுன் மக்களிடம் சொல்ல அவர்கள் உஷாரானார்கள்.
இரவு ஒரு வித பயத்துடனேயே அங்கு தங்கியிருந்தனர் லியோ ரேயன் குழுவினர் மறுநாள் காலை அதாவது 1978-ம் ஆண்டு நவம்பர் 18-ம் திகதி காலையில் ஜோன்ஸ் டவுனில் இருந்து புறப்படுவதாக சொல்லி விட்டு கிளம்பினர், அவர்களுடன் ஜோன்ஸ் டவுனில் வசித்து வந்த 15 பேர் தங்களையும் அழைத்து செல்லும்படி கதறத் தொடங்கினர். அங்கிருந்த ஜிம் ஜோன்ஸ் மற்றும் அவனது அடியாட்கள் அவர்களை அனுப்ப மறுக்க அங்கு கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
மாலைவரை நீண்ட பெரும் போராட்டங்களுக்கு பின், லியோ ரேயன் திரும்பி செல்லாவிட்டால் அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை மிக கொடூரமானதாக இருக்கும் என புரிந்து கொண்ட ஜிம் ஜோன்ஸ் அவர்கள் அங்கிருந்து புறப்பட அனுமதியளித்தான்.
ஜோன்ஸ் டவுனில் இருந்து இரண்டு ட்ராக்டர்களில் அருகில் இருந்த சிறிய ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் விமானத்தை நோக்கி புறப்பட்டனர் லியோ ரேயன் குழுவினர் மற்றும் 15 பீப்பிள்ஸ் டெம்பிள் உறுப்பினர்கள். சரியாக விமானத்திற்கு 30 மீட்டர்கள் அருகில் வந்து விட்ட ரேயன் குழுவினரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர் ஜிம் ஜோன்ஸின் பாது காவலர்கள். ரெட் பிரிகேட் என ஜிம் ஜோன்ஸால் பெயரிடப்பட்டிருந்த அந்த காவலர்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகள் லியே ரேயன் மற்றும் ரிப்போர்ட்டர்களின் உயிர்களை குடித்தத்து.
துப்பாக்கி சூட்டை சில விநாடிகள் படம் பிடித்த NBC கேமரா மேன் பாப் ப்ரவுன் அடுத்த சில விநாடிகளில் துப்பாக்கி சூட்டில் பலியானார். விமானத்தின் பைலட், கோ பைலட், ஜோன்ஸ் டவுனிலிருந்து வந்திருந்த மோனிகா பேக்பி ஆகியோர் சிறு காயங்களுடன் அருகில் இருந்த ஜார்ஜ்டவுன் என்ற கிராமத்திற்கு தப்பி சென்றனர்.
விமானத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஜோன்ஸ்டவுனில் பதட்டம் நிலவியது, வீட்டிற்குள் இருந்த அனைவரையும் உடனே வெளியில் மைதானத்தில் கூடுமாறு உத்தரவிட்டனர் ஜிம் ஜோன்ஸ் மற்றும் அவனது மனைவி பால்ட்வின். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சயனைடுகளை குளிர் பானங்களில் கலந்து கொண்டிருந்தனர் ஜிம் ஜோன்ஸின் விசுவாசிகள்.
இதற்கு மேல் அமெரிக்க அரசு நம்மை சும்மா விடாது, அவர்கள் கையில் சிக்கி சித்த்ரவதிக்கு ஆளாகி சாவதை விட நாம் அனைவரும் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து இந்த உலகத்தில் ஒரு வரலாறை எழுதுவோம். இது ஒரு புரட்சிகரமான முடிவு, என சொல்லி அனைவரையும் சயனைட் கலந்த குளிர்பானத்தை அருந்த வைத்தான், மொத்தம் 918 பேர் அதில் 304 பேர் குழந்தைகள். தனது மனைவி உட்பட அனைவரும் இறந்ததை உறுதி செய்த பின் தனது சேரில் அமர்ந்தபடி தனது கை துப்பாக்கியால் தன் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டான் ஜிம் ஜோன்ஸ்.
ஜோன்ஸ் டவுனில் ஜிம் ஜோன்ஸ்
இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தை தொடங்குவதற்கு முன் தனது முக்கியமான விசுவாசிகள் டிம் கார்ட்டர், அவனது சகோதரன் மைக், மற்றும் புரோகேஸ் என்ற மூவரையும் அழைத்து 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் கயானா நாட்டு பணம் கொண்ட பைகளையும் ரஷ்ய தூதரகத்திடம் கொடுக்க சொல்லி மூன்று கடிதங்களையும் கொடுத்து அனுப்பினான் ஜிம் ஜோன்ஸ்.
கடிதத்தில், இந்த பணம் பீப்[பிள்ஸ் டெம்பிள் மக்களால் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடை, என எழுதப்பட்டிருந்தது, இந்த பணத்துடன் தப்பி விட நினைத்த டிம் கார்ட்டர் மற்றும் அவனது சகோதரன் மைக் இருவருக்கும், ஜோன்ஸ்டவுனில் எதோ நடக்க போகிறது என்பது மட்டுமே தெரிந்திருந்தது, ஆனால் தனது மகனும் மனைவியும் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் டிம் கார்ட்டருக்கு பைத்தியம் ப்டித்து விட்டது அவனது சகோதரன் மைக்கும் அதே போல் மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியம் ஆனான்.
ஜோன்ஸ் டவுனில் இருந்த க்ரோவர் டேவிஸ் என்ற 79 வயது தாத்தா காது கேட்காதவ்ர், ஜிம் ஜோன்ஸ் அனைவரையும் மைதானத்திற்கு வர சொல்லி ஸ்பீக்கரில் சொன்னது கேட்காமல் பின் தாமதமாக செல்லும் பொழுது சாக்கடையில் விழுந்து மயக்கமானார் பின் அதிகாலை மீட்பு படையினர் வந்து உயிருடன் மீட்டனர், அதே போல் ஹயஸிந்த் த்ராஷ் என்ற 76 வயது பெண்மணி தன் படுக்கைக்கு கீழ் ஒளிந்து கொண்டு வெளியில் வராமல் இருந்தார், மீட்பு படியினர் வந்து அவரை உயிருடன் மீட்டனர்.
தன் தற்கொலைக்கு முன் பீப்பிள்ஸ் டெம்பிள் தலைமை ஆபீஸிற்கு ரேடியோவில் தகவல் சொன்ன ஜிம் ஜோன்ஸ் அங்கிருந்தவர்களையும் தற்கொலை செய்து கொள்ள உத்தரவிட அங்கிருந்த ஜிம் ஜோன்ஸின் வளார்ப்பு பிள்ளைகளான லீ, ஆக்னஸ் அவளது கணவன் போரஸ்ட், மற்றும் அவளது 4 குழந்தைகள், என அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
தலைவன் ஜிம் ஜோன்ஸின் கட்டளையை பின்பற்றி மொத்தமாக 928 பேர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்தான் அமெரிக்க வரலாற்றில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு 2996 பேர் இறப்பதற்கு முன் ஒரே நேரத்தில் அதிக மக்கள் இறந்த கோர சம்பவமாக வரலாறில் பதிவு செய்யப்பட்டுள்ளது.