Monday 23rd of December 2024 - 03:18:19 PM
ஓடும் ரயிலில் பெண் கற்பழித்து கொலை. கேரளா பயங்கரம் - சௌமியா கொலை வழக்கு 1
ஓடும் ரயிலில் பெண் கற்பழித்து கொலை. கேரளா பயங்கரம் - சௌமியா கொலை வழக்கு 1
எல்லாளன் / 14 மே 2024

பிப்ரவரி 1 2011, இரவு மணி 8.30. எர்ணாகுளம் டூ சொரனூர் செல்லும் பேஸஞ்சர் ரயில் 56608 வல்லத்தோல் நகர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து நின்றது. நடக்கபோகும் பெரும் விபரீதம் அறியாத ற்றெயின் சில நிமிடங்கள் எஞ்சின் அணைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க,  கடைசி லேடிஸ் கம்பார்ட்மெண்டில் இருந்த ஒன்றிரண்டு பெண்களும் இறங்கிக் கொள்ள 23 வயது சௌமியா மட்டும் அந்த கம்பார்ட்மெண்டில் தனியாக அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு வெகு அருகில் அடுத்த சில நிமிடங்களில் கொலை வெறியுடன் காத்திருக்கும் கொடூர மரணம் பற்றி தெரியாமல் செல்போனில் தன் தாயிடம் இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என சொல்லிக் கொண்டிருந்தாள் சௌமியா. சைமியாவின் லேடிஸ் கம்பார்ட்மெண்டிற்கு அடுத்து இருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இருந்த ஒல்லியான கறுத்த இளைஞன் சௌமியாவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

பார்ப்பதற்கு பிச்சைகாரன் போல் இருந்த அவன் கண்களில் கொடூர காம பசி தன் கோர பற்களை நறநறத்துக் கொண்டிருந்தது.
   
சில நிமிடங்களில் ட்ரெயின் வல்லத்தோல் நகர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது, ற்றயின் புறப்படும் விசில் சத்தத்தின் வேகத்தை விட வேகமாக ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இருந்த பிச்சைகார  இளைஞன் சௌமியாவின் லேடிஸ் கம்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தான்.

ற்றெயின் அடுத்த 20 நிமிடத்தில் சொர்னூரை அடையும் வேகத்துடன் விரைந்து கொண்டிருக்க, அந்த இளைஞன் சௌமியாவை நெருங்கினான். அறிமுகம் இல்லாத இளைஞன், பார்ப்பதற்கு சற்று பயமுறுத்தும் தோற்றம், அனைத்தும் ஏதோ நடக்க போகிறது என சௌமியாவின் மனதில் எச்சரிக்கை அலாரம் அடிக்க, உஷாரான சௌமியா லேடிஸ் கம்பார்ட்மெண்டிலிருந்து ஜெனரல் கம்பார்ட்மெண்ட் நோக்கி நடக்க முயன்றாள்.
 
சௌமியா இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவள் மேல் பாய்ந்து தடுத்தான் அந்த இளைஞன், அவனிடமிருந்து தப்பிக்க முயன்ற சௌமியாவின் தலையை பிடித்து கம்பார்ட்மெண்டின் சுவற்றில் வேகமாக கொடூரமாக தொடர்ந்து ஐந்தாறு முறை மோதினான். தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் பீறிட்டு கொட்ட, வலியுடன் தன்னை காப்பாற்ற யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் கத்தி குச்சலிட்ட சௌமியாவின் கதறல் சத்தம் மொத்தமும் வேகமாக விரைந்து கொண்டிருந்த ற்றெயினின் எஞ்சின் சத்தத்திடம் சரண்டர் அடைந்து வெளியில் கேட்காமல் வீணாகிப்போனது.

ஆனால், அருகில் இருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இருந்து சௌமியாவின் போராட்டத்தை கவனித்த டோமி தேவாஸியா என்ற பாதிரியாரும் அப்துல் சுக்கூர் என்ற நபரும் லேடிஸ் கம்பார்ட்மெண்டிற்குள் நுழைந்து சௌமியாவை காப்பாற்றும் துணிச்சலின்றி, ட்ரெயினின் அபாய சங்கிலியை இழுக்கலாமா என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
 
தலையில் இருந்து ரத்தம் வெள்ளமாக பீறிட்டு கொட்ட அந்த கொடூர போதை மிருகத்திடம் போராட முடியாமல் திணறிணாள் சௌமியா, திணறும் சௌமியாவை ஓடிக் கொண்டிருந்த ட்றெயினுக்கு வெளியில் தள்ளிய அந்த இளைஞன் சௌமியாவின் கைப்பையை எடுத்துக் கொண்டு அடுத்த சில நொடிகளில் அவனும் ட்றெயினில் இருந்து வெளியில் குதித்தான்.

ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இருந்து சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த டோமியும், அப்துலும் அபாய சங்கிலியை இழுக்கலாம் என்ற ஆலோசனையை கைவிட்டு, அடுத்த ஸ்டேஷனில் ட்றயின் நின்றவுடன் பார்த்துக் கொள்ளலாம் என தங்கள் இயலாமைக்கு பரிகாரம் தேடிக் கொண்டார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் சரியாக 9 மணிக்கு ட்றெயின் சொர்னூர் ஸ்டேஷனில் நின்றது, ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இருந்து வேகமாக இறங்கிய டோமி தேவாஸியாவும், அப்துல் சுக்கூரும், அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம் விசயத்தை சொல்ல, அங்கிருந்த சில இளைஞர்களும் ரயில்வே ஊழியர்களும் ரயில்வே டிராக் வழியே இருட்டில் தேட தொடங்கினார்கள்.
 
அரைமணி நேர தீவிர தேடலுக்கு பின் சொர்னூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 3 கிலோ மீட்டர்கள் தள்ளி செருத்துருத்தி என்ற இடத்தில் ரயில்வே டிராக்கிற்கு சற்று தள்ளி இருந்த புதரில் ஆல்மோஸ்ட் நிர்வாணமாக கிடந்தாள் சௌமியா.

தலையில் பலத்த காயங்களுடன், ஆடைகள் முழுதும் கிழித்து அகற்றப்பட்டிருக்க, உடல் முழுதும் சிராய்ப்பு காயங்களுடன், ரத்தம் வழிந்து கொண்டிருக்க, உடலின் இடது பக்கம் முற்றிலும் செயலிழந்து மயக்க நிலையில் தன் கடைசி மூச்சுகளுடன் ஈன ஸ்வரத்தில் முணகிக் கொண்டிருந்தாள் சௌமியா.

அவளுக்கு நடந்த கொடூர சித்ரவதைகளை அப்போது அறிந்திருக்காத  ரயில்வே ஊழியர்கள் அவளை அருகிலிருந்த வடக்கன்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க, அங்கு முதலுதவிகள் செய்த டாக்டர்கள் சௌமியாவை திரிசூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தார்கள்.
 
அதேநேரம், மயக்க நிலையில் சௌமியா கண்டுபிடிக்கப்பட்ட செருத்துருத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செலக்காரா வழக்கை விசாரிக்க தொடங்கினார். சம்பவத்தை நேரில் பார்த்த டோமி தேவஸிய சொன்ன சில அடையாளங்களை வைத்து பிச்சைகாரன் போல் தேற்றமளிக்கும் ஒரு கை ஊனமான அந்த குற்றவாளி பற்றிய தகவல்களை கேரளாவின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை முடுக்கினார் செலக்காரா.

மறுநாள் பிப்ரவரி 2ம் திகதி, பாலக்காட் பஸ் ஸ்டாண்டில் சுற்றி திரிந்த ஒரு கை ஊனமான 30 வயது கோவிந்தசாமியை சந்தேகப்பட்டு விசாரித்த போலிஸிடம் கோவிந்தசாமி முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்ல, கொத்தாக கோவிந்த சாமியை ஸ்டேஷனுக்கு பார்சல் செய்து  ஸ்பெஷலாக கவனித்த போலிஸிற்கு டன் கணக்கில் அதிர்ச்சிகளை அள்ளி கொடுத்தான் கோவிந்தசாமி.

சௌமியா கடுமையாக தாக்கப்பட்டு, கொடூர சித்ரவதைகளுடன் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்பதை டாக்டர்கள் ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்கள். 

மிக மோசமான காயங்களுடன் ஐந்து நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிய சௌமியா தனக்கு நடந்த கொடுமைகளுக்கு நியாயம் கேட்க பிப்ரவரி 6ம் திகதி 3 மணிக்கு இறைவனடி சேர்ந்தாள்.
 
அதேசமயம் பிச்சைகாரன் போல் சுற்றி திரிந்த கோவிந்தசாமியின் பாஸ்ட் ஹிஸ்ற்றியை கேட்டு பதறி போயிருந்தார்கள் செந்துருத்தி போலிஸார்.

- தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் 2 - வீடியோ

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
பிணத்துடன் புணர்ந்து பின் அதை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 2
வரலாறு / 12 மே 2024
பிணத்துடன் புணர்ந்து பின் அதை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 2

ஆசை தீர பிணத்துடன் புணர்ந்தவன் பின் அசதி தீர குளித்தான். சாகவாசமாக கிச்சனில் இருந்து கத்திகளை எடுத்த

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி