சௌமியாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த திரிசூர் மெடிக்கல் காலேஜ், பாரன்ஸிக் மெடிஸின் தலைமை மருத்துவர் டாக்டர் ஷெர்லி வாசு, தன் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டவை. தலையில் ஆக்ரோஷமாக தாக்கப்பட்ட சௌமியாவின் மூளை பாதிக்கப்பட்டு செயழிழந்து விட்டது. ட்ரெயினில் இருந்து விழுந்ததால் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளது. கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது சௌமியா கற்பழிக்கப்பட்டுள்ளார்.
பிச்சைகாரன் போல் கேரளாவில் சுற்றித்திரிந்த விருந்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி மேல், சதுரங்க வேட்டை காந்தி மகான் போல், சார்லி தாமஸ் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. சேலம், ஈரோடு, பழனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தமிழ்நாட்டில் தாலுக்காவிற்கு ஒரு வழக்கை வாங்கியிருந்தான் சார்லி தாமஸ் என்ற கோவிந்த சாமி. அத்தனையும் திருட்டு, வழிபறி கொள்ளை வழக்குகள்.
பல வழக்குகளில் சில ஆண்டு மாதங்கள் தண்டனை பெற்று, தண்டனையை அனுபவித்து முடித்து வெளியில் வந்ததும் மீண்டும் தன் கைவரிசையை காட்டி, இரவு பகல் பாராது ஓயாமல் உழைத்து வந்துள்ளான் கோவிந்தசாமி.
தமிழ்நாட்டு போலிஸின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் கொஞ்ச நாட்களாக கேரளா பக்கம் கரை ஒதுங்கிய கோவிந்தசாமி, கௌசல்யாவிற்கு மாபெரும் கொடுமையை செய்து இப்பொழுது போலிஸிடம் வசமாக சிக்கிவிட்டான்.
ஒரு சிறிய ஹொம் இண்டீரியர் கடையில் மாதம் ஆறாயிரம் சம்பளத்தில், வேலை பார்த்து வந்த கௌசல்யாவிற்கு தந்தை இல்லை, தாய் வீட்டு வேலைகள் செய்து கிடைத்த சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். கேரளாவின் கடைக்கோடி ஏழைப்பெண்ணுக்கு நடந்த கொடுமை மொத்த கேரளாவையும் உலுக்கி எடுக்க, இயல்பிலேயே கம்யூனிச ரத்தம் ஊறிய கேரளா சேட்டன்கள் தங்கள் கட்சி ஆட்சியில் இப்படியொரு கொடுமையா என கொதித்தெழுந்து விட்டார்கள்.
குற்றவாளி கோவிந்தசாமிக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டுமென ஒட்டு மொத்த கேரள மக்களும் குரல் கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு கோவிந்தசாமி கொடுக்க போகும் அதிரடி ட்விஸ்ட்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.
கேரள மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்த கோவிந்தசாமியின் வழக்கு த்ரிசூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ரவிந்திர பாபுவல் விசாரிக்கப்பட்டது. பிச்சைகாரன் போல் சுற்றி திரிந்த திருடு, வழிபறி கேஸ்களில் சிறைக்கு சென்ற கோவிந்த சாமிக்காக மும்பையில் இருந்து பல லட்சங்கள் பீஸ் வாங்கும் B.A அளூர் என்ற பிரபல வழக்கறிஞர் ஆஜரானார். கோவிந்தசாமியின் முதல் ட்விஸ்ட்டே கேரள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ரயில் கம்பார்ட்மெண்டில் வைத்து சௌமியாவை தாக்கி வெளியே தள்ளி விட்ட கோவிந்தசாமி, ரயிலில் இருந்து குதித்து அரை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சௌமியாவை அருகில் இருந்த புதருக்கு இழுத்து சென்று, கற்பழித்து கொலை செய்தான் என தங்கள் தரப்பு வாதங்களையும், கோவிந்த சாமி சௌமியாவை கற்பழித்ததற்கு ஆதாரங்களாக அவனது DNA ரிப்போர்ட் மற்றும் சௌமியாவின் உடல் மற்றும் ஆடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கோவிந்தசாமியின் DNA ரிப்போர்ட்டையும் நீதிபதி ரவீந்த்ர பாபுவிடம் ஒப்படைத்தனர் போலிஸ்.
போலிஸின் வாதத்தையும் வலுவான ஆதாரங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி 2011ம் வருடம் நவம்பர் 4ம் திகதி, கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மனதிற்குள் மர்மமாக சிரித்துக் கொண்டே கொடூரன் கோவிந்தசாமி கேரளா உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தான்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திர நாயர், கேமல் பாஷா இருவரும் தங்கள் 359 பக்க தீர்ப்பில், கோவிந்தசாமியின் மரண தண்டனைய உறுதி செய்தனர். இது எதிர்பார்த்துதான் என்பது போல் கோவிந்தசாமியும் அவனது அட்வகேட் ஆளூரும் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனார்கள். எங்கோ போனாலும் உனக்கு தூக்கு உறுதி என கோவிந்தசாமியை பார்த்து கொந்தளித்த கேரளா மக்களுக்கு அப்போது தெரியாது கோவிந்தசாமி இந்தியாவின் பிரபல நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கே தண்ணி காட்ட போறான் என்பது.
கோவிந்தசாமியின் மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ப்ரஃபுல்லா சந்திர பாண்ட், உதய் லலித் அடங்கிய பெஞ்ச், கௌசல்யாவை கோவிந்தசாமி கற்பழித்தான் என்ற வாதத்தையும் ஆதாரங்களையும் ஏற்றுக் கொண்டது, ஆனால் கௌசல்யாவை கோவிந்தசாமி தாக்கியதால்தான் கௌசல்யா இறந்தாள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும் சௌமியா தானாகவே ரயிலில் இருந்து குதித்திருக்கலாம், அதனால் ஏற்பட்ட காயங்களால் கூட கௌசல்யா இறந்திருக்கலாம், எனவே கோவிந்த சாமி தாக்கியதால்தான் கௌசல்யா இறந்தாள் என்ற வாதத்தில் சந்தேகம் உள்ளது, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட அந்த அப்பாவி கோவிந்தசாமிக்கு வழங்கி கோவிந்தசாமியின் மரண தண்டனையை ரத்து செய்து, கற்பழிப்பிற்காக கோவிந்தசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் விதித்து அதிர்ச்சி தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் கேரள மக்கள் பெரும் கோபமடைந்தனர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேஜ கட்ஜு உச்ச நீதிமன்றம் பெரும் தவறான தீர்ப்பு வழங்கி விட்டது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மார்கண்டேய கட்ஜு விரும்பினால் உச்ச நீதிமன்றத்திற்கு நேரில் வந்து தனது வாதங்களை முன் வைக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அழைப்பை ஏற்று 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி சுப்ரீம் கோர்ட் பெஞ்சின் முன் ஆஜராகி தன் வாதங்களை முன் வைத்தார், அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்ட நீதிபதிகள், மார்கண்டேய கட்ஜுவின் வாதங்கள் நீதிபதிகளை விமர்சிப்பதாகவே உள்ளன, தீர்ப்பை பற்றி ஒரு விளக்கமும் இல்லை என கூறி மார்கண்டேய கட்ஜு மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்கள். எதற்கு வேலியில் போறதை தூக்கி என, 2017 ஜனவரி 6ம் திகதி மார்கண்டேஜ கட்ஜு மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
திருட்டு, வழிபறி, கொள்ளையடித்து பிச்சைகாரன் போல் சுற்றி திரிந்த கோவிந்தசாமி பல லட்சம் செலவு செய்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று தன் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியது எப்படி? இந்த கேள்விதான் இன்றுவரை கேரள மக்களை தூங்கவிடாமல் குழப்பி கொல்கிறது.
கோவிதசாமியின் வழக்கறிஞர் ஆளுரிடம் கேட்டால், மும்பை பன்வேல் பகுதியை சேர்ந்த ஒரு கொள்ளை கும்பல் தன்னிடம் கோவிந்தசாமியின் வழக்கில் ஆஜராக சொல்லி தனக்கு பல லட்சங்கள் பீஸாக கொடுத்ததாக கூறுகிறார்.
அதே சமயம், 2007ம் ஆண்டு கோவிந்தசாமி 'ஆகாச பறவைகள்' என்ற கிறிஸ்தவ மிஷனரியில் சேர்ந்து கொண்டான். அதனால் தனது பெயரை சார்லி தாமஸ் என மாற்றிக் கொண்டான். அந்த 'ஆகாச பறவைகள்' கிறிஸ்தவ சபைதான் கோவிந்தசாமிக்காக லட்சங்களில் செலவு செய்து அவனை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறது. என சில கேரள பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டன. பல லட்சங்கள் செலவு செய்து காப்பாற்றுமளவிற்கு கோவிந்தசாமி 'ஆகாச பறைவுக்கு' ஏன் தேவைப்படுகிறான் என்ற கேள்வியும் கேரள மக்களை போட்டு வாட்டி வதைத்து வருகிறது.
கன்னூர் மத்திய சிறையில், செல் நம்பர் 10ல் தண்டனையை அனுபவித்து வந்த, அனைத்திற்கும் பதில் தெரிந்த கோவிந்த சாமி என்கிற சார்லி தாமஸிற்கு 2022 அக்டோபர் மாதத்துடன் சிறைத்தண்டனை முடிந்து விட்டது. ஆனால் அவன் சிறையில் இருந்து வெளியில் வந்து விட்டானா? வழக்கம் போல் தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு தாலுக்காவில் மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறானா அல்லது தன் மர்ம தொடர்புகளை பயன்படுத்தி பாரினுக்கு ஏதும் சேவை செய்ய சென்று விட்டானா? என எந்த விவரங்களும் வெளி உலகத்திற்கு தெரியாத மர்மங்களாக அப்பாவி கௌசல்யாவின் சடலத்துடனும், அவளது மரணத்திற்கு கிடைக்காத நீதியுடனும் சேர்ந்து அமைதியாக புதைந்து கிடக்கின்றன.