வணக்கம், வந்தனம், நமஸ்காரம். நலம் நலமறிய ஆவல்.
தங்களை கற்பழிக்க நல்ல முரட்டு ஆண்மகனை தேடுவதாக நீங்கள் கொடுத்திருந்த க்ளாஸிபைட் விளம்பரத்தை பார்த்தேன். 25 வயதாகும் நான், உங்கள் விருப்பப்படி உங்களை மிக கொடூரமாக கதற கதற கற்பழித்து, தங்களின் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன். தினம் 4 மணி நேரம் ஜிம்மை நொறுக்கி முறுக்கேறி முத்தி கிடக்கும் என் முரட்டு உடல், பூப் போன்ற உங்கள் பொன் உடலை பிரித்து மேய்ந்து, பொளந்து கட்டி, புல்லரிக்க வைத்து, கட்டுக்கடங்காமல் காம வெறி பிடித்து அலையும் உங்கள் அத்தனை ஆசைகளையும் அடக்கி ஆளும் என நம்புகிறேன்.
தங்களுக்கு இன்பம் தர ஏதுவான நேரம் எது என தெரிவித்தால், நான் என் வெட்டி வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, விரைந்து வந்து உங்களை கதற கதற கற்பழித்து என் பிறவி கடனை பூர்த்தி செய்து பூர்வ புண்ணிய பலனை அடைவேன். மேலும், தங்களுக்கு இன்னும் என்னவெல்லாம் பிடிக்கும் என சொன்னால் நான் வரும்பொழுது அனைத்திற்கும் தயாராக வருவேன். இந்த மெயிலுடம் என் முகத்தையும், அந்தரங்க அய்ட்டத்தையும் புகைப்படங்களாக இணைத்துள்ளேன். ஆவலோடு உங்கள் பதிலுக்காக காத்திருக்கும். தங்கள் உண்மையுள்ள, கீழ்படிந்துள்ள ஸோ அண்ட் ஸோ என முடிந்தது அந்த ஈ மெயில்.
2016ம் ஆண்டு ஜூன் 24ம் திகதி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாஹாணம், அனேஹம் நகர போலிஸ் ஸ்டேஷன். ஈமெயிலை படித்து முடித்த போலிஸ் இன்ஸ்பெக்டர், ஈ மெயில் எழுதியவனை எந்த லிஸ்டில் சேர்ப்பது என தெரியாமல் முழிக்க. கதறி அழுதபடி அன்று காலை நடந்த கொடூரத்தையும் விளக்க தொடங்கினாள் மூன்று மாத கர்ப்பிணி ஏஞ்சலா.
வழக்கம் போல் வீட்டில், காலை வேலைகளில் பிஸியாக இருந்த 32 வயது ஏஞ்சலாவை அழைத்தது காலிங் பெல். கதவை திறந்த ஏஞ்சலாவை அப்படியே அலேக்காக அறைக்குள் தள்ளி கதவை பூட்டினான் அந்த முரட்டு முகமூடி இளைஞன். அவனுக்கு ஏறத்தாழ 25 வயதிருக்கும்.
இரட்டை குழந்தைகளை கருவில் சுமந்து கொண்டிருந்த, மூன்று மாத கர்ப்பிணியான ஏஞ்சலாவால் அந்த முரட்டு முகமூடியை எதிர்க்க முடியவில்லை. ஏஞ்சலாவை கட்டிலில் தள்ளி காட்டு மிராண்டி தனமாக அவள் மேல் பாய்ந்து கற்பழிக்க முயன்றான் அந்த முரட்டு முகமூடி. ஏஞ்சலாவின் ஆடைகளை கழட்ட முயன்ற முகமூடியின் விரல் நகங்கள் அவளின் முகம், கழுத்து, முதுகை பதம் பார்த்து ரத்தத்தை சுவை பார்த்தன. வலியால் துடித்த ஏஞ்சலா, முடிந்தவரை வலிமையை திரட்டி அவனை தள்ளி விட்டு, தன் செல்போனை தேடி எடுத்து போலிஸ் அவசர உதவி எண் 911ற்கு போன் செய்தாள்.
போலிஸிடம் சிக்கினால் சிதைத்தை விடுவார்கள் என்ற அச்சத்தில், சிதறி ஓடி மாயமாய் மறைந்தான் அந்த முரட்டு முகமூடி.
இங்கே பாருங்கள் என தன் முகம், கழுத்து, முதுகு, என அந்த முரட்டு முகமூடியின் நகக் கீறல்களையும், அதனால் வழிந்த ரத்த கறைகளையும் போலிஸிடம் காட்ட தன் டீ ஷர்ட்டை கழட்டிய ஏஞ்சலாவிடம்,. நம்பிட்டோம், நம்பிட்டோம், என பதறி டீ ஷர்ட் ரிமூவலுக்கு ஸ்டே ஆர்டர் போட்டார்கள் போலிஸ்.
காபி ஒன்றை கொடுத்து ஏஞ்சலாவை காம் டௌனாக்கிய போலிஸ், பொறுமையாக முதலில் இருந்து மொத்தமாக சொல் என்றார்கள். இருக்குற பிரச்சினையில காபி ஒரு கேடா என கோபப்பட்ட ஏஞ்சலா தன் பிரச்சினையை கொட்ட தொடங்கினாள்.
32 வயதான ஏஞ்சலா, 44 வயது, இயான் டயஸை, 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தாள். இயான் டயஸ் அமெரிக்க போலிஸ் டிபார்ட்மெண்டில், நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் டெப்டி மார்ஷலாக பணியாற்றி வந்தார். ஏஞ்சலா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வருமானத்திற்கு குறைவில்லாத வசதியான வாழ்க்கை. புதுமண தம்பதிகள் இருவரும் அனேஹம் நகரில் இயான் டயஸிற்கு சொந்தமான வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள்.
மோதிரம் மாற்றிய, முதல் மாதத்திலேயே கர்ப்பமான ஏஞ்சலாவின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்வதாக அவளது வயிற்றை ஸ்கேன் செய்து கிடைத்த ஸோனோகிராம் ரிப்போர்ட்டுகள் சொன்னது. இன்னும் 9 மாதத்தில் வீட்டில் இரட்டை குழந்தைகள் தவழும் என்ற சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்த ஏஞ்சலா, இயான் டயஸ் தம்பதிகளின் சந்தோசத்திற்கு சாவுமணி அடித்தபடி ஏஞலாவின் இன்பாக்ஸை நிரப்பின அடுத்தடுத்து வந்த பல பகீர் ஈ மெயில்கள்.
2016ம் ஆண்டு மே 29ம் திகதி வந்த முதல் ஈமெயிலில்: நாளைக்கு சாகப்போவதை நினைத்தால் உனக்கு பயமாக இருக்கலாம். அனைத்திற்கும் தயாராக இரு. தூங்கி விடாதே. உன் இரட்டை குழந்தைகள் கருவிலேயே கருகி சாவதை நாங்கள் ரசித்து பார்ப்போம். நீ எங்களுக்கு செய்த துரோகங்களுக்கு பலனாக கொடூரமாக மரணத்தை ருசிப்பாய்.
எவனோ க்ரைம் நாவல் படித்து விட்டு போதை தலைக்கேறி கிறுக்குதனமாக பிதற்றுகிறான் என நினைது அந்த ஈ மெயிலை, த்ராஷ் போல்டருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டு, உருப்படியான வேலைகளை பார்க்க தொடங்கினார்கள் ஏஞ்சலா, இயான் டயஸ் தம்பதிகள்.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில், தொடர்ந்து வந்த அந்த இம்சை ஈமெயில்களின் எண்ணிக்கையும், வார்த்தை வீரியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொடூரமான உச்சத்தை எட்டி விட்டன..
தமிமையின் கொடுமையை விரைவில் நீ சுவை பார்ப்பாய். உன்னை பழி வாங்க எனக்கு பல வழிகள் உண்டு, இருந்தாலும், மெல்ல மெல்ல உன்னை கொல்லவே துடிக்குது என் மனது. இனிமேல் இந்த உலகத்தில் உனக்கு பாதுகாப்பான இடம் என்று ஏதும் இல்லை.
நீ அழகாக இருக்கலாம், அதற்காக அவன் உன்னை திருமணம் செய்திருக்கலாம், ஆசிட் ஊற்றி அழகை கரைத்தபின், உன் எலும்புகூட்டை எவன் சீண்டுவான் என்று பார்ப்போம்.
வேறு வேறு பேக் ஐடிகளிலிருந்து ஏஞ்சலாவின் பர்ஸனல் மெயில் ஐடிக்கு வந்திருந்த அந்த மெயில்களில், மேலெ சொன்ன, மிரட்டல் வசனங்கள் மட்டுமின்றி, கொடூரமாக இறந்து கிடக்கும் குழந்தைகள், நிர்வாணமாக கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படும் பெண்களின் புகைப்படங்கள் என ஏகப்பட்ட மிரட்டல் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இது என்ன பிரமாதம், என இதையெல்லாம் விட ஸ்பெஷல் அய்ட்டமாக ஒரு ஈ மெயில் வந்தது ஏஞ்சலாவிற்கு. ஏஞ்சலா லோக்கல் கிளாஸிபைட் வெப்ஸைட்டில் தன்னை கற்பழிக்க முரட்டு ஆண்மகன் ஒருவன் வேண்டும் என கொடுத்த விளம்பரத்தை பார்த்ததாக சொல்லி எப்பொழுது வீட்டிற்கு வந்து ஏஞ்சலாவின் ஏக்கத்தை தீர்க்க முடியும்? என அனுமதி கேட்டு ஏஞ்சலாவின் இன்பாக்ஸிற்கு வந்திருந்தது ஒரு ஈ மெயில்.
வாட்ஸப் வரை வளர்ந்து விட்ட கம்யூனிகேஷன் காலத்தில், ஈ மெயில் மிரட்டல் எல்லாம் ஒரு மேட்டர் இல்லை என, அசால்ட்டாக இருந்த ஏஞ்சலாவின் வீடு தேடி வந்து ஒருவன் கற்பழிக்க முயன்ற பின்னும், மூடிக் கொண்டிருந்தால் கற்பிற்கு கேரண்டி இல்லை என்ற அச்சத்தில் அனஹேம் நகர் போலிஸை அணுகினால் ஏஞ்சலா.
ஏஞ்சலாவின் இ மெயில் இன்பாக்ஸை, இஞ்ச் இஞ்ச்சாக ஆராய்ந்த இன்ஸ்பெக்டர், அத்தனை மெயில்களிலும் ஏகப்பட்ட பைபிள் வசனங்கள் இடப்பெற்றிருந்ததை கவனித்தார்.
ஏஞ்சலாவின் நட்பு, உறவினர் வட்டாரத்தில் பைபிள் அதிகம் படிக்கும் பக்திமான்களில், பைத்தியங்களின் பட்டியலை கேட்டார் இன்ஸ்பெக்டர். ஒரு சிறுக்கி இருக்கா அவள் பெயர் மிச்சல்லே ஹாட்லே என்றாள் ஏஞ்சலா.
30 வயது, மிச்சல்லே ஹாட்லே. ஏஞ்சலாவின் கணவன் இயான் டயாஸின் முன்னாள் காதலி. முழுதாக நனைந்தாயிற்று, இதற்கு மேல் முக்காடு எதற்கு என, தனது பழைய காவிய காதல் கதையை இன்ஸ்பெக்டரிடம் விளக்கமாக சொல்ல தொடங்கினார் இயான் டயஸ்.
2013 ஆகஸ்ட் மாதம் பார்ட்டி ஒன்றில் மிச்சல்லே ஹாட்லேவை பார்த்த இயான் டயஸ். ஹாட்டாக இருக்கிறாளே என காதல் வயப்பட்டு தொலைந்தார். இயான் டயஸின் காதலுக்கு மிச்சல்லேவும் ஓகே சொல்ல, ஆகா ஓஹோ வென ஓடியது இயான் டயஸ் மிச்சல்லே காதல் வண்டி. பப், பார்ட்டி, பன், டேட்டிங் என சுற்றிக் கொண்டிருந்த இயன் டயஸ் மிச்சல்லே ஜோடி எவ்வளவு நாளைக்கு வெளியில் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பது, ஒண்ணுமண்ணா இருந்து உற்சாகம் பெறுவோம் என அனஹேம் நகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, லிவ் இன் டுகெதராக அந்த வீட்டில் விளக்கணைத்து விளையாடினர்.
- தொடரும் -
அடுத்த பாகம்: பாகம் 2