Monday 23rd of December 2024 - 07:50:45 PM
ரியல் 'வேட்டையாடு விளையாடு' சைக்கோ நண்பர்கள். பிட்டேக்கர் - நாரிஸ் 1
ரியல் 'வேட்டையாடு விளையாடு' சைக்கோ நண்பர்கள். பிட்டேக்கர் - நாரிஸ் 1
எல்லாளன் / 15 மே 2024

1979ம் ஆண்டு. ஜூன், 24ம் திகதி. இரவு, 8 மணி. லின் ஸைபர் என்ற, 16 வயது பெண், சர்ச்சில் பிரேயர் முடித்துவிட்டு, தன் வீட்டிற்கு, திரும்பி சென்று கொண்டிருந்தாள்.

ரெட்டாண்டோ பீச்சை, கடந்து செல்லும்பொழுது, அங்கு, ஆம்னி கார் டைப்பில் இருந்த, GMG வெண்டுரா வேன் ஒன்றில், அமர்ந்து, பேசிக்கொண்டிருந்த, 30 வயது நாரிஸ், மற்றும், 38 வயது பிட்டேக்கர், இருவரின், கண்ணில் பட்டாள். அவர்கள், கையில் இருந்த, கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டை காட்டி, வேண்டுமா? என கேட்டபடி, பின்னால் செல்ல, பயத்துடன், வேகமாக நடக்க தொடங்கினாள் லின் ஸைபர்.

இருவரும், முழு போதையில் இருந்தனர். பிட்டேக்கர், வேனை ஓட்டிக் கொண்டு, லின் ஸைபர் அருகில் வந்து, எங்கே போக வேண்டும்? நாங்கள் ட்ராப் செய்கிறோம். என, பேச்சுக் கொடுக்க. லின் ஸைபர் வேண்டாம். என, சொல்ல திரும்பிய, அடுத்த கணம். பின்னால் அமர்ந்திருந்த நாரிஸ், அவளை பிடித்து, வேனுக்குள் இழுத்து, கதவை சாத்தினான்.

லின் ஸைபர் அலற தொடங்க, வேனை ஓட்டிக் கொண்டே, பிட்டேக்கர் ரேடியோவில், பாட்டு சத்தத்தை அதிகரித்தான். பின்னால், லின் ஸைபரை பிடித்திருந்த நாரிஸ், கையில் வைத்திருந்த டக்ட் டேப்பால், அவளின் வாயை கட்டி விட்டு, கை கால்களை கட்டத் தொடங்கினான். லின் ஸைபர், எவ்வளவு முயன்றும், அவளால் தப்பிக்க முடியவில்லை. உள்ளே, லின் ஸைபர் துடி துடித்துக் கொண்டிருக்க, வேன், அலறும் பாட்டு சத்தத்துடன், வேகமாக, கேப்ரியல் மலை தொடரின் தனிமையான பகுதி ஒன்றிற்கு சென்றது.

காட்டின், நடுப்பகுதிக்கு வந்து வேன், அமைதியாக நிற்க. வேனுக்குள் சுத்தியல், கொரடு, ரம்பம், வயர்கள், ஸ்குரு ட்ரைவர், என பெரும் ஆயுதக் கிடங்கே இருந்தது. வேனில் இருந்து இறங்கிய பிட்டேக்கர், காட்டிற்குள் சின்ன வாக்கிங் ஒன்று செல்ல, பின்னால் இருந்த நாரிஸ், கதறிக் கொண்டிருந்த லின் ஸைபரை கற்பழித்தான். ஒரு மணி நேரம், அவனது வெறியை தீர்த்த பின், அவன் இறங்கிக் வாக்கிங் செல்ல, பிட்டேக்கர் வேனிற்குள் ஏறி வெறித்தனத்துடன் லின் ஸைபரை கற்பழித்தான்.
 
வாக்கிங் சென்ற நாரிஸ் திரும்பி வர, பிட்டேக்கர் இரண்டாவது முறை வாக்கிங் சென்றான். இந்த முறை, அரை குறை மயக்கத்தில், முணகிக் கொண்டு கிடந்த லின் ஸைபர், கெஞ்சலாக, வெறி பிடித்து இயங்கிக் கொண்டிருந்த நாரிஸிடம், கேட்டாள். நீங்கள் என்னை கொலை செய்ய போகிறீர்களா? சற்று நிதானித்த பின், நாரிஸ், இல்லை. என்றான். அப்படி கொலை செய்யும் எண்ணம் இருந்தால், அதற்கு முன், ஒரே ஒரு நிமிடம் மட்டும், எனக்கு ப்ரேயர் செய்ய டைம் கொடுங்கள், என, ஈனஸ்வரத்தில் முணகினாள். நாரிஸ், தொடர்ந்து, பேச்சு கொடுக்காமல், தன் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான்.

நாரிஸ், பிட்டேக்கர், இருவரும், மாறி மாறி, இரண்டு முறை, வாக்கிங் சென்று முடித்திருந்தனர். அரைகுறை உயிருடன், வேனிற்குள், லின் ஸைபர் முணகிக் கொண்டிருந்தாள். கையில், புகையும் கஞ்சாவுடன், அமர்ந்து, நாரிஸ், பிட்டேக்கர், இருவரும், தீவிர ஆலோசனையில் இருந்தனர். லின் ஸைபரை விட்டு விடலாமா அல்லது கொலை செய்யலாமா? சில நிமிடங்கள் காரசார விவாதத்திற்கு பின், ஒரு முடிவிற்கு வந்தவர்களாய், வேனிற்குள் ஏறினார்கள்.

நாரிஸ், லின் ஸைபரின் முகத்தில் வெறித்தனமாக கைகளால் குத்த தொடங்கினான். தொடர்ந்து, ஒரு நிமிடம் குத்தியவன், அவளது கண்கள் வெளியில் வந்து விட்டதை பார்த்து பயத்தில் வேனை விட்டு இறங்கி வாந்தி எடுக்க தொடங்கினான். இருந்த, கொஞ்ச நஞ்ச உயிருடன் லின் ஸைபர் என்னை ப்ரேயர் செய்ய விடுங்கள் என முணகிக் கொண்டிருந்தாள். அருகில் வந்த பிட்டேக்கர் கையில் வைத்திருந்த கேபிள் ஒன்றை லின் ஸைபரின் கழுத்தில் இறுக்கி கட்டிங் ப்ளேயர் ஒன்றால் மேலும் எவ்வளாவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாக நெறிக்க தொடங்கினான். மெல்ல லின் ஸைபரின் உயிர் கடைசி வரை ப்ரேயர் செய்யாமலேயே அடங்கி போனது.

ஒரு ப்ளாஸ்டிக் பையில் லின் ஸைபரின் சடலத்தை சுற்றி பேக் செய்து, செயிண்ட் கேப்ரியல் மலையின் காட்டு பகுதியில் மிருகங்கள் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என வீசிய நாரிஸ் மற்றும் பிட்டேக்கர் இருவரும் வேனை எடுத்துக் கொண்டு தங்கள் அடுத்த இரையை தேடி புறப்பட்டனர்.

1979ம் ஆண்டு நமவ்ம்பர் 20ம் திகதி. கலிபோர்னிய போலிசால் கைது செய்யப்பட்ட பின் பிட்டேக்கர் மற்றும் நாரிஸ் இருவரும் கொடுத்த வாக்குமூலம்தான் மேலே சொன்ன அனைத்தும்.

1979ம் ஆண்டு ஜீன் 24ம் திகதி முதல் அக்டோபர் 31ம் திகதி வரை இடைப்பட்ட நான்கு மாத காலத்தில் மொத்தம் ஐந்து இளம் பெண்களை கொடூரமாக அணு அணுவாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார்கள் பிடேக்கர் மற்றும் நாரிஸ் இருவரும். கொலை என்றால் ச்சும்மா ஜஸ்ட் லைக் தட் அடித்து துன்புறித்தியெல்லாம் இல்லை, கொலை செய்வதற்கென தனி செட்டப்புடன் ஒரு ஆம்னி டைப் GMG வெண்டுரா வகை வேன், உள்ளே ப்ரிட்ஜ், ப்ரிட்ஜ் நிறைய சரக்கு, பெரிய பெட், அதற்கு அருகில் ஒரு பெரிய டூல் பாக்ஸ், அந்த டூல் பாக்ஸிற்குள், எலக்ட்ரிகல் ரம்பம், திருப்புளி, சுத்தியல், கொரடு, வித விதமான வயர்கள், இரும்பு ராடுகள், டிசைன் டிசைனாக கத்திகள், பிளேடுகள் என ஏதோ மிகப்பெரிய இஞ்சினியர்கள் போல் பெரிய ஆயுதக் கிடங்கையே அந்த வேனிற்குள் செட்டப் செய்து வைத்திருந்தனர். 

அவர்கள் கொடுத்த இன்னொரு கொலை பற்றிய வாக்குமூலம் போலிஸாரையே குலை நடுங்க வைத்தது.

 - தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் 2

டிரண்டிங்
ஆபாச வீடியோ. மோடி மௌனம் காப்பது ஏன்? ப்ரியங்கா காந்தி கேள்வி
அரசியல் / 29 ஏப்ரல் 2024
ஆபாச வீடியோ. மோடி மௌனம் காப்பது ஏன்? ப்ரியங்கா காந்தி கேள்வி

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவ

பூமியின் கடைசி நாடு எது தெரியுமா? இங்கு 23 மணி நேரமும் பகல் தான்.
உலகம் / 13 நவம்பர் 2024
பூமியின் கடைசி நாடு எது தெரியுமா? இங்கு 23 மணி நேரமும் பகல் தான்.

ஹேவர்ஃபெஸ்ட் நகரில், சூரியன் 40 நிமிடங்கள் மட்டுமே மறைகிறது. எனவே, இது நள்ளிரவில் சூரியன் உதிக்கும்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
கப்பலில் கணவன், கட்டிலில் மனைவி. கன்னாபின்னா கள்ள காதல்கள். டயானே டௌன் 3
பொதுவானவை / 21 மே 2024
கப்பலில் கணவன், கட்டிலில் மனைவி. கன்னாபின்னா கள்ள காதல்கள். டயானே டௌன் 3

நேவியில் பணிபுரிந்த ஸ்டீவ் மாதக்கணக்கில் கடலில் கிடக்க, டயனே தன் பால்ய பலான ஆண் நண்பர்களுடன் கட்டிலி

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி