முந்தைய பகுதி: பாகம் 1
1979ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி, ஜாக்கி டோரிஸ் என்ற 15 வயது சிறுமி, ஜாக்குலின் லேம்ப் என்ற 13 வயது சிறுமி, இருவரும் ஹர்மோஸா பீச் பஸ் ஸ்டாண்டில் தங்கள் பஸ்ஸிற்காக காத்திருந்தனர். அந்த வழியில் வந்த பிட்டேக்கர் மற்றும் நாரிஸின் வேன் அவர்களுக்கு லிப்ட் கொடுப்பதாக சொல்ல, சிறுமிகள் இருவரும் வெகுளிகளாக அதில் ஏறிக் கொண்டனர். பிட்டேக்கர் வேனை ஓட்டிக் கொண்டிருக்க, நாரிஸ் சிறுமிகள் இருவருக்கும் கஞ்சா கலந்த சிகரெட்டை கொடுத்தான், அவர்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, "ச்சும்மா ஒன்றுமில்லை.." என சிகரெட்டை கொடுக்க, சிறுமிகள் விவரம் புரியாமல் அதை வாங்கி புகைக்க தொடங்கினர்.
வேன் 10 நிமிடம் பயணம் செய்து செயிண்ட் கேப்ரியேல் மலைப்பகுதியை நோக்கி செல்ல, சுதாரித்த சிறுமிகள் தாங்கள் வேறு வழியில் செல்ல வேண்டும் என கத்த தொடங்கினர், நாரிஸ் அவர்களை சைலண்டாக இருக்க சொல்லி மிரட்ட, 13 வயது ஜாக்குலின் லேம்ப் வேன் கதவை திறக்க முயன்றாள், அருகில் கிடந்த இரும்பு ராடு ஒன்றை எடுத்து அவள் பின் தலையில் அடித்தான் நாரிஸ், வலி தாங்க முடியாமல் அரை மயக்கத்தில் விழுந்தாள் ஜாக்குலின் லேம்ப். அவளுக்கு விழுந்த அடியில் சிறுமி ஜாக்கி டோரிஸ் சத்தம் போடாமல் விம்மியபடி வேன் சீட்டில் பயத்துடன் ஒடுங்கி அமர்ந்து கொண்டாள்.
நாரிஸ் இர்வரின் கை கால்களையும் டக்ட் டேப்பால் கட்டி வாயில் டேப் வைத்து சுற்றினான். வேன் அவர்களது வழக்கமான சான் காப்ரியேல் மலைப்பகுதியின் தனிமையான இடத்திற்கு வந்து சேர்ந்தது. இரண்டு நாட்கள் இடைவிடாமல் இரண்டு சிறுமிகளையும் அணு அணுவாக சித்ரவதை செய்து அதை புகைப்படம் எடுத்தார்கள் இருவரும். இரவு பகல் என மொத்தமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர்களை சித்ரவதை செய்து அவர்கள் அலறுவதை டேப்பில் பதிவு செய்தார்கள்.
டிஸைன் டிஸைனான ஆய்தங்களால் அடித்து துன்புறுத்துவது, காது, மூக்கு வாய், மற்ற பிற துவாரங்களில் ஐஸ் கட்டிகளை அடைத்து அவர்கள் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கற்பழிப்பது என அந்த சிறிமிகள் சாகும் வரை விடாமல் கொடுமை செய்தனர் பிட்டேக்கர் மற்றும் நாரிஸ்.
ஒரு வழியாக அந்த மிருகங்களின் கொடுமைகளில் இருந்து அந்த பிஞ்சு சிறுமிகளுக்கு மரணம் வழியாக விடுதலை கிடைத்தது. நிர்வாணமாக இறந்து கிடந்த இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் வழக்கம் போல் பாலித்தின் பைகளில் சுற்றி செய்ன் கேப்ரியல் மலை உச்சியில் மிருகங்களுக்கு இரையாக வீசி விட்டு வீடு திரும்பினார்கள் பிட்டேக்கர் மற்றும் நாரிஸ்.
1979ம் ஆண்டு நவம்பர் மாததில் சனி உச்சத்தில் இருந்த நன்னாள் ஒன்றில் தன் பழைய நண்பன் ஜோசப் ஜாக்ஸன் என்பவனை சந்தித்தான் நாரிஸ், இருவரும் வயிறு முட்ட குடித்து விட்டு சாவகாசமாக கஞ்சா இழுத்துக் கொண்டிருந்த நேரத்தில் போதையில் ரொம்ப போரடிக்குதா என்றபடி தானும் பிட்டேக்கரும் சேர்ந்து செய்த வீரதீர சாகசசங்களை ஜோசப் ஜாக்சனிடம் சொல்லி பெருமையாக பீத்திக் கொண்டான் நாரிஸ்.
"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்!" என ஜோசப் ஜாக்சன் கலாய்க்க, இங்கே பார் என அவர்கள் எடுத்த அந்த கொடூர போட்டோக்களை ஜாக்சனிடம் காட்டினான் நாரிஸ், குலை நடுங்கிப் போன ஜோசப் ஜாக்ஸன் தப்பித்தேன் பிழைத்தேன் என நடு ராத்திரியில் விழுந்தடித்து தன் வீட்டிற்கு ஓடி விட்டான்.
மறு நாள் காலையில் பதட்டத்துடன் தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரிடம் விசயத்தை சொல்ல, அவர் போலிஸின் காதுகளில் மேட்டரை போட்டு விட்டார்.
ஆனால் இறந்த பெண்கள் யார்? எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என குழம்பிய போலிஸ், கடந்த ஐந்து மாதங்களில் கலிபோர்னியா மாஹானத்தின் சான் கேப்ரியேல் மலைப்பகுதியை ஒட்டி காணாமல் போனவர்கள் லிஸ்டை எடுத்தார்கள். "ஐந்து பேரை மட்டுமே கொலை செய்தோம் சிலரை ரேப் மட்டும் பண்ணி விட்டு விட்டுவிட்டோம்" என நாரிஸ் சொன்னதை போலிஸிடம் ஞாபகப்படுத்தினான் ஜோசப் ஜாக்ஸன். உடனே போலிஸ் கற்பழிப்பு பற்றி பதிவான கேஸ்களை எடுத்து அந்த பெண்களிடம் நேரில் சென்று பிட்டேக்கர் மற்றும் நாரிஸின் புகை படங்களை காட்டி விசாரிக்க தொடங்கினர்.
ராபின் ரபேக் என்ற பெண் செப்டம்பர் 30ம் திகதி தன்னை இரண்டு பேர் கடத்தி கற்பழித்து விட்டனர் என போலிஸில் புகார் கொடுத்திருந்தார் அவரிடம் போலிஸ் பிட்டேக்கர் மற்றும் நாரிஸின் புகை படங்களை காட்ட அவள் இந்த சைக்கோக்கள்தான் அந்த இரண்டு சைக்கோக்கள் என அடையாளம் காட்ட, அடுத்த நாளே பிட்டேக்கர் மற்றும் நாரிஸ் இருவரும் பார் ஒன்றின் முட்டு சந்தில் நின்று கஞ்சா வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது அலேக்காக தட்டி தூக்கியது போலிஸ்.
1979ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி போலிஸ் ஸ்டேசனில் நடந்த அடையாள அணிவகுப்பில், பிட்டேக்கர் மற்றும் நாரிஸ் இருவரையும் சரியாக அடையாளம் காட்டாமல் சொதப்பி விட்டாள் ராபின் ரபேக். ஆனாலும் போலிஸ் விடாமல் நாரிஸ் மற்றும் பிட்டேக்கர் இருவரையும் கஞ்சா கேஸில் கைது செய்து உள்ளே வைத்து விட்டு, அவர்கள் இருவரின் வீட்டையும் சோதனை செய்தனர்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 3 - வீடியோ