1988 ஏப்ரல் 2, ஈஸ்டருக்கு முதல் நாள், சனிக்கிழமை ஆபிஸ் லீவு என்பதால் காலையிலேயே ரெண்டு பெக் ரெமி மார்ட்டினை உள்ளே இறக்கி விட்டு அந்த பீப் பீஸை எடுத்து வாயில் வைக்க சென்ற மெக்கன்ஸியை டிஸ்டார்ப் செய்தது வீட்டு காலிங் பெல். அவசரமாக பீப்பை தொண்டையில் திணித்துக் கொண்டு கோபத்துடன் ரெண்டு கெட்ட வார்த்தைகளை துப்பி விட்டு, கடுப்புடன் கதவை திறந்தவர் வெலவெலத்து போனார்.
எதிரில், கழுத்தில் நாய் பெல்ட் சுற்றப்பட்டு, உடல் முழுதும் காயங்களுடன் ரத்தம் வடிந்து கொண்டிருக்க, இளைஞன் ஒருவன் நிர்வாணமாக வீட்டு முற்றதில் நின்று கொண்டிருந்தான், பேச முடியாமல் அடைத்து போன தொண்டையுடன் அங்கிள் பொலிஸிற்கு ஒரு போன் பண்ணுங்க ப்ளீஸ் என்றான்.
அடுத்த சில நிமிடங்களில் 4315, சார்லட்டே ஸ்ட்றீட்டில் வந்து நின்றது கன்ஸாஸ் சிட்டி, ஹைதி பார்க் போலிஸ். மெக்கன்ஸியின் தொள தொள பேண்ட் ஷர்ட்டுடன் ரத்தம் வழிய அமர்ந்திருந்த அந்த இளைஞன் பேச தொடங்கினான். என் பெயர் கிரிஸ்டோபர் ப்ரைஸன், 22 வயது. விபச்சாரம் செய்வது என் தொழில் என்றான். தூக்கி வாரிப்போட்டது போலிஸிற்கு. ப்ரைஸன் மேற்கொண்டு தான் மீண்டு வந்த அந்த பயங்கர நரக பயணத்தை சொல்ல தொடங்கினான்.
மார்ச் 29ம் திகதி நள்ளிரவு 1 மணிக்கு, லோக்கல் பாரொன்றிற்கு அருகில் கஸ்டமர்களுக்காக காத்திருந்த ப்ரைஸனை அனுகிணான் 40 வயது ராபார்ட் பெர்டெல்லா, காசு நிறைய தருகிறேன் நைட்டு கம்பெனி குடுக்க முடியுமா என கேட்ட ராபர்ட் பெர்டெல்லாவிடம், ம்ம்ம் ஆகட்டும் என்று பெர்டெல்லாவின் வீட்டிற்கு வந்தான் ப்ரைஸன். வீட்டில் இருவரும் சாவகாசமாக சரக்கடித்து விட்டு, டைம் ஆச்சு நான் கிளம்பனும், சீக்கிரம் வேலையை முடி என திரும்பி நின்று பேண்டை கழட்டிய ப்ரைஸனின் பின் மண் மண்டையில் மடார் என இரும்பு ராடு ஒன்று தாக்க, அப்படியே மயங்கி சரிந்தான் ப்ரைஸன்.
கண் விழித்து பார்த்த போது ப்ரைஸன் நிர்வாணமாக ஒரு கட்டிலில் படுக்க வைத்து கட்டப்பட்டிருந்தான். கைகள் இரண்டும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. கண்கள் பயங்கரமாக எரிய, உடல் முழுதும் இனம் புரியாத வலி, சத்தம் போட முயன்ற ப்ரைஸணின் குரல்வளை வலித்து சத்தம் வெளியில் வர மறுத்தது. கட்டியிருந்த கட்டுகளை அவிழ்க்க ப்ரைஸன் போராடிக் கொண்டிருக்கும் போதே அறைக்குள் நுழைந்தான் ராபர்ட் பெர்டெல்லா அறையின் ஷெல்பில் இருந்து அம்மோனியா ஸ்ப்ரேயை எடுத்து ப்ரைஸனின் கண்களில் அடிக்க, கண் எரிச்சல் தாங்க முடியாமல் ப்ரைஸன் அலறினான், தொண்டை வலியால் சத்தம் அவன் குரல்வளையை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே அடக்கமானது.
ராபர்ட் பெர்டெல்ல - வீட்டில் கைப்பற்றப்பட்ட மண்டை ஓடு
கட்டிலில் கட்டியிருந்த கட்டுகளை லூஸாக்கி ப்ரைஸனை திருப்பி மல்லாக்க போட்டு கட்டிலில் கட்டிய ராபர்ட் பெர்டெல்லா, அதன் பின் செய்தவைகள் இங்கே விளக்க முடியாத கொடூரங்கள். ப்ரைஸனின் ஆசனவாயில் எதை எதையோ செலுத்திய ராபர்ட் பெர்டெல்லா, ப்ரைஸன் வலியால் அலறி துடிப்பதை ரசித்து சிரித்தான். சில மணிநேர சித்ரவதைக்கு பின் ப்ரைஸனை மீண்டும் நேராக படுக்க வைத்து கட்டிய ராபர்ட் பெர்டெல்லா, "நான், நீ, இந்த வீடு மூன்றை தவிர வேறு எதுவும் உன் சிந்தனையில் இருக்க கூடாது." என கூறி குளோர்ப்ரொமைஸின் இன்ஜெக்ஷனை ப்ரைஸனின் கையில் குத்தினான்.
எலக்ட்றிக் ஷாக், போதை இன்ஜெக்ஷன், அம்மோனியா ஸ்ப்ரே, ஸ்க்ரூ ட்றைவர், கொரடு, கட்டிங் ப்ளேயர் மற்றும் இன்ன பிற டைப் டைப்பான டூல்ஸால் கொடுமைகள் என ப்ரைஸனை சித்ரவதை செய்து சிரித்து மகிழ்ந்தான் பெர்டெல்லா. வலிகளை தாங்க முடியாமல் கதறி துடித்த ப்ரைஸனை தனது கேமராவால் அவ்வப்பொழுது போட்டோ எடுத்துக் கொண்டான் பெர்டெல்லா. கொஞ்ச நேரத்தில் உடல் மரத்து போய் மயக்கமானான் ப்ரைஸன். ப்ரைஸனை கட்டியிருக்கும் கட்டுகள் சரியாக இருக்கிறதா என சரி பார்த்த பின் தன்னுடைய செல்ல டூல்ஸ்களை எடுத்து ஷெல்பில் அழகாக அடுக்கி வைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினான் பெர்டெல்லா.
மறுநாள், மாலை மீண்டும் அறைக்கு ஒரு கேரி பேக் பார்சலுடன் வந்தான் பெர்டெல்ல, ஏதும் புது டூல்ஸ் ஐட்டமா இருக்குமோ என பயத்துடன் பார்த்த ப்ரைஸனை மல்லாக்க படுக்க வைத்துகட்டினான். பின் தன் பின் விளையாட்டுகளை ரசித்து ருசித்து முடித்து விட்டு, ப்ரைஸனை நேராக படுக்க வைத்து கட்டி விட்டு, ஷெல்பை திறந்து தன் செல்லகுட்டிகளை வெளியில் எடுத்தான். மீண்டும் வெரைட்டி வெரைட்டியான டார்ச்சர்களால் ப்ரைஸனுடன் விளையாடி மகிழ்ந்தான். வலி தாங்க முடியாத ப்ரைஸன் கத்தினான் கதறினான். அனைத்தையும் காதில் பாயும் தேனாக ரசித்து சுவைத்து மகிழ்ந்தான் பெர்டெல்லா.
நீ பரவாயில்லை, அவர்களை போல் இல்லை. என்றான் பெர்டெல்லா. யார் என வலியுடன் முணகியபடி கேட்ட ப்ரைஸனுக்கு பதில் சொல்லாமல் தன் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் பெர்டெல்லா. கொஞ்ச நேரம் ப்ரைஸனின் கத்தல் கதறல்களை ரசித்து சிரித்து விட்டு. ஷெல்பில் இருந்து ஒரு நாய் பெல்ட்டை எடுத்து ப்ரைஸனின் கழுத்தில் மாட்டி, அதன் மறு முனையை கட்டிலில் கட்டினான். ப்ரைஸனின் கைகளை அவிழ்த்து விட்டு, கொண்டு வந்திருந்த கேரி பேக் பார்சலை பிரித்து ப்ரஸனிடம் கொடுத்தான். உள்ளே ரெண்டு பர்கர் இருந்தது.
வேக வேகமாக அந்த பர்கர்களை பிய்த்து வாய்க்குள் திணித்தான், பர்கர் துண்டுகள் கொடூர வலிகளை கொடுத்துக் கொண்டு ப்ரைஸனின் தொண்டையை கடந்து வயிற்றுக்குள் இறங்கியது.
எனக்கு என்ன தேவை என்பது புரிகிறதா? தினமும் கொஞ்ச நேரம்தான். முழு ஒத்துழைப்பு குடுத்தால் உயிரோடு இருப்பாய் இல்லையென்றால் அவர்களை போல் துண்டு துண்டா வெட்டி டாய்லட் பிட்டில் போட்டு ப்லஷ் பண்ணிடுவேன். என்றான் பெர்டெல்லா. பயத்தில் பர்கர் துண்டு ப்ரைஸனின் தொண்டையை தாண்ட தடுமாறியது. விக்கலுடன் வெலவெலத்து போய் பெர்டெல்லாவை பார்த்தான் ப்ரைஸன்.
பாட்டில் ஒன்றில் தண்ணீர் கொடுத்து விட்டு வெளியேறினான் பெர்டெல்லா. மறுநாள் மார்ச் 1ம் திகதி, பகலில் வெளியில் சென்று விட்டு, இரவு வழக்கம் போல் கிளுகிளு பின் விளையாட்டுகளையும், செல்ல குட்டிகளை வைத்து டார்ச்சர் விளையாட்டுகளையும் முடித்து விட்டு அறையை விட்டு வெளியேற போன பெர்டெல்லாவிடம் ஒரு சிகரெட் கிடைக்குமா என கேட்டான் ப்ரைஸன். தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் கொடுத்து விட்டு வெளியேறினான் பெர்டெல்லா.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2