2009 ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி, அதிகாலை, பச்சாட்டி மற்றும் வைட் ஹால் ரோடுகளுக்கு இடைப்பட்ட, விவசாய நிலத்தில் இருந்த, அந்த குளத்தின் நடுவில் மிதந்து கொண்டிருந்தது ஒரு சூட்கேஸ். சூட்கேஸில் இருந்து பரவிய அழுகிய பிண வாடை அக்கம் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த ஈக்களை தன்னை நோக்கி இழுக்க, எப்படி திறந்து உள்ளே நுழைவது என தெரியாமல், சூட்கேஸை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தன ஈக்கள்.
கடந்த பத்து நாட்களாக பதறிப் போய் இன்று என்ன நடக்குமோ என்ற பீதியில் விடிந்து கொண்டிருந்த அமெரிக்காவின் FBI முதல் கடைநிலை போலிஸ் நாய் வரை ஒட்டு மொத்த உள்நாட்டு படைகளும் வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் ஸாண்ராவின் சடலம் உள்ளே இருப்பது தெரியாமல், சுற்றி பறந்து கொண்டிருந்த ஈக்களை துரத்தி விட்டு, சூட்கேஸை எடுத்து திறந்து பார்த்த அந்த விவசாயியின் முகத்தில் ஈயாடவில்லை.
சரியாக பத்து நாட்களுக்கு முன், மார்ச் 27ம் திகதி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாஹாணம், ட்றேஸி நகர, ஆர்ச்சர்ட் எஸ்டேட் மொபைல் ஹோம் பார்க் பகுதியில் வசித்து வந்த, மெல்வில்லே ஜக்கோப்ஸன் எலிமிண்ட்றி ஸ்கூலிலில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயது ஸான்றா பள்ளி முடிந்து, 3 மணிக்கு வீடு திரும்பினாள். வழக்கம் போல் ஸ்னாக்ஸ், டோரிமான், சிஞ்சான் என கொஞ்ச நேரம் பொழுது போக்கியவள், பக்கத்து வீட்டு ஆண்ட்டி மெலிஸா வீட்டிற்கு தன் தோழி மெலிஸாவின் மகள் கேத்தரின்னுடன் விளையாட செல்வதாக தாய் மரியா சாவேஸிடம் சொல்லி விட்டு புறப்பட்டாள். போனவள் போனதுதான் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.
வரட்டும், வெளக்குமாறு பிய்ய வெளுக்கிறேன் என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த மரியாவிற்கு நேரம் ஆக ஆக கோபம் பதட்டமாக மாறத் தொடங்கியதும், மகளை தேடத் தொடங்கினாள். மெல்லிஸா வீட்டில் விசாரித்ததில் அப்பொழுதுதான் சர்ச்சில் இருந்து திரும்பியிருந்த மெல்லிஸா 4 மணிக்கு தான் சர்ச்சிற்கு செல்லும் வரை ஸாண்றா அங்கே வரவில்லை என்றாள், மெல்லிஸாவின் 5 வயது மகள் கேத்தரினை கேட்டால், இல்லை தான் ஸான்றாவை ஸ்கூலில் பார்த்ததோடு சரி என்றாள்.
ஸான்றா மாயமான விசயம், அவர்கள் குடியிருந்த ஆர்ச்சர்ட் எஸ்டேட் மொபைல் ஹோம் பார்க் பகுதி முழுவதும் பரவ, பதட்டத்தில் பலரும், பொழுது போக்க சிலரும் என, அக்கம்பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து ஸாண்றாவை தேட தொடங்கினார்கள். வழக்கம் போல் அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என சொல்லி தாய் மரியாவின் பிபியை எகிற வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து, முதலில் போலிஸிற்கு போன் பண்ணுவோம் என பொறுப்பு பருப்பாக பேசினான் ஒருவன்.
சரியாக, மாலை 7.53 மணிக்கு கன்றோல் ரூம் மூலம் தகவல் பெற்ற ட்றேஸி நகர போலிஸ், அடுத்த பத்தாவது நிமிடம் ஆர்ச்சர்ட் எஸ்டேட் மொபைல் ஹோம் பார்க்கிற்கு வந்து விட்டார்கள். விவரங்களை விளக்கமாக கேட்ட போலிஸ், முதலில் ஸாண்ரா வீட்டிற்கு வெளியில் தெருவில் இருந்த CCTV கேமரா புட்ட்டேஜை பார்வையிட்டார்கள்.
ஸாண்ட்ரா கேண்டுவின் தாய் மற்றும் அக்கா
சரியாக மாலை 3:54 மணிக்கு ஸான்றா ஸ்கிப்பிங் கயிறு விளையாடியபடி மெலிஸா வீடு இருக்கும் திசையில் செல்ல்லும் காட்சிகள் CCTV புட்டேஜில் பதிவாகியிருந்தன. அதன் பின் ஸாண்ட்றாவின் நடமாட்டம் எந்த கேமராவிலும் பதிவாகவில்லை.
மெலிஸாவிடம் விசாரிக்க, நானே என் வீட்டில் இருந்த எட்டி ப்யூர் சூட்கேஸ் ஒன்றை காணவில்லை என்ற கவலையில் தேடிக் கொண்டிருக்கிறேன் என போலிஸிடம் புலம்பியவள், தான் 4 மணிக்கு சர்ச்சிற்கு செல்லும் வரை ஸான்றா தன் வீட்டிற்கு வரவில்லை என்றாள். மெலிஸாவின் மகள் ஸான்றாவின் தோழி 6 வயது கேத்தரினும் தான் ஸ்கூலில் ஸான்றாவை பார்த்ததோடு சரி, அம்மா மெல்லிஸா சர்ச்சிற்கு சென்ற பின் தான் தனியாகதான் வீட்டில் இருந்ததாகவும் ஸாண்றா அங்கு வரவில்லை என்றும் தன் மழலை மொழியில் வாக்குமூலம் கொடுத்தாள்.
மெல்லிஸா சொன்னது போலவே, அவள் 4 மணிக்கு அவளது SUV காரில் சர்ச்சிற்கு செல்லும் காட்சிகள் CCTV கேமராவில் பதிவாகியிருந்தன.
மண்டையை சொறிந்த போலிஸ், வழக்கம் போல் வழக்கு பதிவு செய்து, சந்தேக பட்டியலை தயாரித்து தங்கள் விசாரணை வலையை விரித்தார்கள்.
முதலில் ஸாண்றாவின் அப்பா, மரியாவின் முன்னாள் கணவர் டேனியல் கேண்டுவை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார்கள் போலிஸ். ஏதோ பர்சனல் பிரச்சினையால் மரியாவின் மேல் காண்டில் இருந்த டேனியல் கேண்டு, மரியாவை விவாகரத்து செய்து பல வருடங்கள் ஆகி விட்டது. மகள் ஸான்றாவிற்கு ஸ்கூல் பீஸ் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருந்த மரியா மேல் இருந்த காண்டில் டேனியல் கேண்டு ஸாண்றாவை ஏதும் செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டனர் போலிஸ்.
நானே புது பொண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் சோறு போடுவதற்கு நாய் பேயாக வேலை பார்த்து அலைந்து கொண்டிருக்கிறேன். இதில் ஸாண்றாவை பற்றி சிந்திக்க கூட நேரமில்லை என தன்னிலை விளக்கம் கொடுத்தார் டேனியல் கேண்டு. மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் கேண்டு அவரது ஆபிஸில்தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட போலிஸ், டேனியல் கேண்டுவின் செல்போன் கால் ஹிஸ்ற்றியை ஆய்வு செய்த பின் கேண்டுவின் பெயரை சந்தேக பட்டியலில் இருந்து கேன்சல் செய்தார்கள்.
அடுத்ததாக 65 வயது ஹென்றி என்ற கிழவனை கிண்டி கிழங்கெடுத்தது காவல்துறை.
இரண்டு வருடங்களுக்கு முன், லோக்கல் நீச்சல் குளம் ஒன்றில் 6 வயது ஸாண்ரா நீச்சல் பழகிக் கொண்டிருக்கும் பொழுது, நைஸாக அருகில் சென்ற பெருசு, ஸான்றாவிற்கு ஸ்வீட்டாக ஒரு முத்தம் கொடுத்து அட்ராசிட்டி செய்துள்ளது. அலறி ஓடிய ஸான்றாவின் சத்தம் கேட்டு திரண்ட கூட்டம், பெருசின் பொடனியை பொளந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள். அந்த அவமானத்தை மனதில் வைத்து பெருசு ஏதும் பெருசா செஞ்சிருக்க போவுது என்ற பயத்தில் போலிஸ் பெரிஸை போலிஸ் ஸ்டேஷனில் வைத்து பொளந்தார்கள். பாடி பஞ்சரான பெருசு, நடுங்கியபடி "பேத்தி மாதிரி நினைத்துதான் முத்தம் கொடுத்தேன், அந்த அவமான சம்பவத்தை அப்பொழுதே மறந்துவிட்டேன்." என ஊரில் உள்ள அத்தனை குலசாமி மேலும் சத்தியம் செய்ய. இதற்கு மேல் விசாரித்தால், பெரிசின் பாடி தாங்காது என முடிவு செய்த போலிஸ் பெரிஸை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
அடுத்து யாரு என போலிஸ் சந்தேக பட்டியலை கையில் எடுக்க, துண்டை காணோம் துணியை காணோம் ரேஞ்சில் ஒரு துண்டு சீட்டுடன் போலிஸ் ஸ்டேஷனுக்குள் புயலாய் புகுந்தாள் மெலிஸா. ரொம்ப பதறாத என கோல்ட் வாட்டரை கொடுத்து அவளை கூலாக்கி விட்டு, கொண்டுவந்திருந்த துண்டு சீட்டை வாங்கி படித்தார்கள் போலிஸ்.
துண்டு சீட்டில், ஸான்றாவின் சடலம் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு, பச்சாட்டி மற்றும் வயிட் ஹால் ரோடுகளுக்கு இடையில் உள்ள குளத்தில் போடப்பட்டுள்ளது. என எழுதபட்டிருந்தது.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2