முந்தைய பகுதி: பாகம் 1
பதட்டமான போலிஸ் இந்த துண்டு சீட்டு எங்கு கிடைத்தது என மெலிஸாவிடம் கேட்க, தனது வீட்டு வாசலில் கிடந்ததாக சொன்னாள் மெலிஸா.
துண்டு சீட்டை நம்பி, பச்சாட்டி மற்றும் வயிட் ஹால் ரோடுகளுக்கு இடையில் இருந்த குளத்தை சல்லடை போட்டு சலித்தார்கள் போலிஸ். குளத்திலிருந்த குப்பைகள் மொத்தமும் வெளியில் வந்ததுதான் மிச்சம், ஸாண்ராவின் சடலமோ, சூட்கேஸோ குளத்தில் எங்கும் இல்லை. குழம்பி போன போலிஸ் வேறு வழியில்லாமல் அமெரிக்காவின் பெரியண்ணன் FBI யின் உதவியை கோரியது.
களத்தில் இறங்கியது FBI. பெரியண்ணனே பீல்டில் இறந்திய பின், சிண்டு சில்லறைகளுக்கு என்ன வேலை, ஹெலிஹாப்டர்கள், மோப்ப நாய்கள், குதிரை படை, ஒட்டக படை, கலிபோர்னியா ஹை வே பேற்றோல், லோக்கல் போலிஸ், என பிரஸிண்டெண்ட் ஒபாமா உட்பட ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஸான்றாவையும் அந்த சூட்கேஸையும் தேடத்தொடங்கினார்கள். ஸாண்றா பற்றி ஏதாவது துப்பு கொடுத்தால் 22,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது.
அடுத்த நொடியில் இருந்து கலிபோர்னியா போலிஸ் கன்றோல் ரூமிற்கு துப்பு மேல் துப்பு கொடுத்து துப்பி நிரப்பி விட்டார்கள் அமெரிக்கர்கள். அங்கே ஒரு சூட்கேஸ் மிதக்குது, இங்கே ஒரு பார்சல் கிடக்குது என 1500க்கு மேல் வந்த துப்புகளை நம்பி, அந்த இடங்களுக்கு சென்று தோண்டி தூர்வாறிய FBI ஏஜெண்டுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, அமெரிக்க போலிஸ் தேடினார்க்ள, தேடினார்கள், தேடினார்கள், தேடிக் கொண்டே இருந்தார்கள்.
பத்து நாட்கள் பறந்தோடி விட்டது ஆனால், சூட்கேஸோ, ஸான்றாவின் பாடியோ, அல்லது அது சம்மந்தமான ஒரு உருப்படியான தகவலோ போலிஸிற்கு கிடைக்கவில்லை.
என்ன செய்யலாம் என அமெரிக்க அரசாங்கமே தவித்துக் கொண்டிருந்தபோதுதான், வைட் ஹால் ரோடு குளத்தில் கிடைத்த சூட்கேஸ் பற்றிய தகவல் போலிஸிற்கு வந்தது. 1500 துப்புகளில் இதுவும் ஒன்று என அலுப்புடன் அங்கு சென்ற போலிஸை வரவேற்றது அந்த எட்டி ப்யூர் சூட்கேஸில் அடைக்கப்பட்ட ஸான்றாவின் சடலம்.
பரபரப்பான போலிஸ், பார்மலிட்டிஸை படபடவென முடித்து பாடியை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பினார்கள்.
ஸாண்றாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், அவளுக்கு அல்புரோசலம் என்ற தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஸாண்றா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த தடயங்களும், கடின ஆயுதத்தால் கொடுரமாக தாக்கி, கயிற்றால் சுருக்கு போட்டு கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை புரட்டியெடுத்து அலசி ஆராய்ந்த FBI புலிகள், கிடைத்த தடயங்கள், அடையாளங்களை வைத்து, ஸான்றாவை சிதைத்தவன் 25 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட, ஒரு காம கொடூரன், அல்லது சிறுவர்களை வைத்து ப்ளூ பிலிம் எடுத்து பிழைக்கும் பிக்காலி பயலாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர்.
லோக்கல் கைகளில், காம கொடூர ப்ளூ பிலிம் பிக்காலி பயல்களை பில்டர் பண்ணி, பிடித்து ஒரு FBI டீம் பின்னி பெடலெடுத்து விசாரித்துக் கொண்டிருக்க, இன்னொரு டீம், சூட்கேஸ் கிடைத்த குளத்தை ஒட்டியிருந்த க்ளோவர் ரோட் பேப்டிஸ்ட் சர்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சல்லடை போட்டு சலித்தார்கள்.
சர்ச்சின் கிச்சனுக்கு அருகில் ரத்த கறை படிந்த பூரி கட்டை ஒன்றை கைப்பற்றினார்கள். அதன் கைப்பிடி யாரையோ தாக்கியதால் வளைந்து நெளிந்து சிம்ரன் இடுப்பு போல் இருந்தது.
சர்ச்சிற்கு வெளியில் இருந்த CCTV கேமரா புட்டேஜ்களை பர்வையிட்டார்கள் போலிஸார். சம்பவம் நடந்த மார்ச் 27ம் திகதி நாலே கால் மணிக்கு மெல்லிஸாவின் SUV கார் சர்ச்சிற்குள் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து ஐந்தே காலுக்கு மெல்லிஸாவின் கார் சர்ச்சை விட்டு வெளியேறியது, மீண்டும் முக்கால் மணி நேரம் கழித்து 6 மணிக்கு சர்ச்சிற்குள் நுழைந்த மெலிஸாவின் கார் பின் 7 மணிக்கு சர்ச்சை விட்டு வெளியேறியது.
மெலிஸா க்ளோவர் ரோட் பேப்டிஸ்ட் சர்ச்சில்தான் சண்டே பைபிள் கிளாஸ் டீச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தாள்.
ரத்த கறை படிந்த சிம்ரன் இடுப்பு பூரிகட்டையை பாரன்ஸிக் ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, மற்ற தடயங்கள், தகவல்களை வைத்து யார் அந்த பிக்காலி என பிடறியை பிய்த்து கொண்டு வெறி கொண்ட வேங்கையாய் அவனை தேடினார்கள் FBI ஏஜெண்டுகள்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 3