முந்தைய பகுதிகள்: பாகம் 1 பாகம் 2
கடைசியாக, மெலிஸாவின் வீட்டிற்கு செல்வதாக சொல்லி சென்றாள் ஸான்றா. மெலிஸாவின் வீட்டிலிருந்த எட்டி ப்யூர் சூட்கேஸை காணவில்லை, ஸாண்டாவின் சடலத்தை சூட்கேஸில் வைத்து குளத்தில் போட்டு விட்டதாக எழுதியிருந்த துண்டு சீட்டை தெருவில் கண்டெடுத்ததாக சொல்லி போலிஸிடம் கொடுக்கிறாள் மெலிஸா, துண்டு சீட்டில் சொன்னபடியே, மெலிஸா வீட்டில் காணாமல் போன சூட்கேஸில் ஸாண்ராவின் சடலம் குளத்தில் கிடைக்கிறது.
சூட்கேஸ் கிடைத்த குளத்திற்கு அருகில் க்ளோவர் ரோட் சர்ச்சில் மெலிஸா டீச்சராக பணியாற்றுகிறாள். சம்பவம் நடந்த நாளில், நேரத்தில், சர்ச்சில் இருந்த மெலிஸாவின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி உள்ளன. இப்படி மீண்டும் மீண்டும் மெலிஸவின் பெயர் ஸான்றாவின் கொலை வழக்கில் சுற்றி சுழண்டு கொண்டிருந்தது.
ஸாண்ராவின் வீடு இருந்த ஆர்ச்சர்ட் எஸ்டேட் மொபைல் ஹோம் பார்க் பகுதியில் வசித்து வந்த அக்கம்பக்கத்தினரிடம் போலிஸ் விசாரித்த பொழுது, டென்வர் என்ற 60 வயது ரிட்டையர்ட் நேவி ஆபிஸரும் அவரது மனைவியும், சம்பவம் நடந்த அன்று மாலை 5:30 யிலிருந்து 6 மணிக்குள் மெலிஸாவை பச்சாட்டி மற்றும் வைட்ஹால் ரோடிற்கு நடுவில் உள்ள குளக்கரையில் பார்த்ததாக சொன்னார்கள். நம்ம ஏரியா புள்ள ஏன் இந்த பக்கம் நிக்குது என அக்கறையோடு விசாரித்த டென்வரிடம், ஒண்ணுக்கு போக ஓரம் கட்டியதாக சொல்லியிருதாள் மெல்லிஸா.
க்ளோவர் சர்ச் கேட்டில் இருந்த CCTV புட்டேஜில், மெலிஸா ஐந்தே காலுக்கு சர்ச்சை விட்டு தனது SUV காரில் வெளியேறி, பின் 6 மணிக்கு சர்ச்சிற்கு வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இடைப்பட்ட முக்கால் மணி நேரத்தில் மெலிஸா பச்சட்டி, மற்றும் வைட் ஹால் ரோடுகளுக்கு இடையில் உள்ள ஸாண்றாவின் சடலம் கிடைத்த குளக்கரையில் ஏதோ செய்து கொண்டு இருந்திருக்கிறாள்.
மலை 3:54 மணிக்கு ஸாண்றா மெலிஸா வீட்டை நோக்கி செல்கிறாள், 4 மணிக்கு மெலிஸா சர்ச்சிற்கு செல்கிறாள். அந்த இடைப்பட்ட 6 நிமிடத்திற்குள்தான் எதுவோ நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்ட FBI புலிகளின், சந்தேக பட்டியலில் மற்றவர்களை மொத்தமாக ஓவர்டேக் செய்து, மெலிஸா முதலிடத்தில் வந்து ஜம்மென்று அமர்ந்து கொண்டாள்.
சர்ச் கிச்சனில் கண்டுபிடிக்கப்பட்ட சிம்ரன் இடுப்பு பூரி கட்டையில் இருந்த ரத்த கறை ஸாண்றாவுடையது என்பது DNA டெஸ்டில் உறுதியானது மேலும், அந்த சிம்ரன் இடுப்பு பூரிக்கட்டையில் இருந்து சில கை ரேகைகளும் கைப்பற்றப்பட்டன. அந்த கை ரேகைகள் மெலிஸாவுடையதா என ஒப்பிட்டு பார்க்க, மெலிஸாவின் கைரேகைகளை பெறுவதற்காக மெலிஸாவின் வீட்டிற்கு சென்ற FBI அதிகாரிகளை வரவேற்றது ஒரு அதிர்ச்சி.
மூன்று பிளேடுகளை முழுதாக விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருந்த மூதேவி மெலிஸாவை, அக்கம்பக்கத்தினர் அள்ளிச் சென்று, பக்கத்திலிருந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தார்கள். ஹாஸ்பிடலுக்கு சென்ற போலிஸிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று பிளேடுகளை முழுசா விழுங்கிய மெலிஸா மீண்டு வர வாய்ப்பில்லை, மேற்கொண்டு அடக்கம் பண்ண ஆகவேண்டிய காரியங்களை கவனிப்போம் என ஹாஸ்பிடலில் டேரா போட்டிருந்த மெலிஸாவின் சொந்தபந்தங்கள் சொன்ன ப்ளாஷ்பேக்குகள் போலிஸை பொடனியில் அடித்து பொரட்டி போட்டது.
1981ம் ஆண்டு பெப்ரவரி 23ம் திகதி, கலிபொர்னியாவின் ஆரஞ்ச் நகரில் பிறந்த மெலிஸா லாலெஸின் தாத்தா க்ளிபர்ட் லாலெஸ் ஒரு சர்ச் பாஸ்டர். சிறுவயதில் சர்ச், ஸ்கூல் என சமத்தாக இருந்த மெலிஸா, டீன் ஏஜ் பருவத்தில் இருந்து கொஞ்சம் கிறுக்கு தனங்களை செய்ய தொடங்கினார், தூக்கத்தில் நடப்பது, திடீர் திடீரென ஏதோ ஏலியன்கள் போல் நடந்து கொள்வது, தனக்கு முன் ஜென்ம ஞாபகங்கள் வருகிறது என சொல்லி மற்றவர்களை பீதியாக்குவது என அவ்வப்போது அந்நியன் அவதாரம் எடுத்த மெலிஸாவை மனநல மருத்தவரிடம் கூட்டி சென்றார்கள் பெற்றோர்கள்.
மெலிஸாவின் மெடிக்கல் ஹிஸ்டிறிய கிண்டி கிளறிய டாக்டர்கள், மெலிஸாவிற்கு மன அழுத்த் பிரச்சினை இருப்பதாக சொல்லி தங்களிடம் இருந்த மருந்து மாத்திரைகளை நல்ல விலைக்கு விற்று அனுப்பி விட்டார்கள். மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாலும் மெலிசாவிடமிருந்து அவ்வப்போது அந்நியன் அவதாரம் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. சரி ஒரு கால் கட்டை போட்டால் எல்லாம் சரியாகி விடும் என முடிவெடுத்த பெற்றோர் 2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 12ம் திகதி, ஜானி ஹக்காபே என்ற அப்பாவி ஒருத்தர் தலையில் மெலிஸாவை கோர்த்து விட்டனர்.
மோகம் 30 நாளை தாண்டி ஆசை 60 நாளுக்குள் நுழைவதற்கு முன்னரே, பார்டர் லைன் பர்ஸனாலிட்டி, பை போலார், ஸைஸோபேர்னியா, தூக்கத்தில் நடக்கும் வியாதி, மற்றும் சைக்காலஜியில் இன்னும் கண்டுபிடிக்கபடாத பல டிஸ்ஸாடர் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்த மெலிஸாவுடன் வாழ்க்கை முழுதும் போராட முடியாது என முடிவெடுத்த கணவர் ஜானி ஹக்காபே, 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விவாகரத்து பெற்றுக் விலகி போய் விட்டார்.
அப்போது மெலிஸா ஐந்து மாத கர்ப்பமாக இருந்தாள். பெண் குழந்தையை பெற்று வளர்த்து வந்த மெலிஸாவிடமிருந்து மகள் கேத்தரினை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட் மூலம் போராடிக் கொண்டிருக்கிறார் ஜானி ஹக்கபே.
கணவன் இல்லாத விதவை, பாவம், பிழைப்புக்கு என்ன செய்வாள், என பரிதாபப்பட்ட பாஸ்டர் தாத்தா கிளிபர்ட் லாலெஸ், தனது க்ளோவர் ரோட் பேப்டிஸ்ட் சர்ச்சில் ஞாயிற்று கிழமைகளில் பிள்ளைகளுக்கு பைபிள் பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் வேலை போட்டுக் கொடுக்க, அந்நியன், ரெமோக்களை அமுக்கி அடிமனதில் வைத்துக் கொண்டு அசட்டு அம்பியாக பைபிள் கிளாஸ் சொல்லிக் கொடுத்து கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அவ்வப்பொழுது மெலிஸாவிடமிருந்து கிளம்பும் அந்நியனால், குழந்தை கேத்தரினுக்க்கு ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் சொந்தபந்தங்களும், கணவர் ஜானி ஹக்கபேயும் 24/7 பதட்டத்திலேயே இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மூதேவி மூன்று பிளேடுகளை பிய்த்து வாய்க்குள் போட்டு விட்டு, ஹாஸ்பிடலில் வந்து ஹாயாக படுத்து கிடக்கிறது என புலம்பி தள்ளினார்கள் மெலிஸாவின் உறவினர்கள்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 4 - வீடியோ