தான் ரஷ்ய மக்களுக்கு செய்வது மாபெரும் கொடூர டார்ச்சர் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். அதனால் தன் உயிருக்கு எந்த நொடியும், ஏதோ ஒரு ரஷ்ய குடிமகனால் ஆபத்து வந்து விடும் என்ற பயத்துடனேயே வாழ்ந்தார். தன் வீடு அலுவலகம் என எங்கும் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடனே நடமாடினார்.
ஸ்டாலினுக்கென்று பிரத்யேகமாக ராணுவ பாதுகாப்பில் வளர்க்கப்பட்ட தானியங்கள் காய்கறிகள் மாமிசங்கள் உணவிற்காக வந்தன. சமைத்த உணவுகளை டாக்டர்கள் பரிசோதித்த பின், ஸ்டாலின் கண் முன் சில வேலையாட்கள் உண்டு சிறிது நேரம் கழித்து, உயிருடன் இருக்கிறார்கள் என உறுதி செய்த பின்னே ஸ்டாலின் சாப்பிட தொடங்குவார்.
ஸ்டாலின் உயிருடன் இருக்கும்பொழுது ஸ்டாலினுக்கு முன் கை கட்டி வாய் மூடி சேவகம் செய்த அத்தனை கம்யூனிச தலைவர்களும் ஸ்டாலின் மேல் செம்ம காண்டில் இருந்தார்கள். உயிருடன் இருந்த போது ஸ்டாலின் தங்களுக்கு செய்த கொடுமைகளுக்கு பலிவாங்க உயிரற்ற ஸ்டாலினுக்கு பல அவமானங்களை செய்து ரஷ்ய கம்யூனிச தலைவர்கள் தங்கள் வெறியை தீர்த்துக் கொண்டார்கள்.
1953ம் ஆண்டு ஸ்டாலின் இறந்த பின்னும் கூட ரஷ்ய மக்களும் அரசியல் தலைவர்களும் ஸ்டாலின் என்ன ரகசிய ஏற்பாடுகளை செய்து வைத்து விட்டு செத்திருப்பார் என்ற பயம் பதட்டத்திலேயே ஸ்டாலினிற்கு செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து மாஸ்கோவில் லெனினின் கல்லறைக்கு அருகில் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் ஸ்டாலினின் உடலை அடக்கம் செய்தனர்.
எட்டு ஆண்டுகள் கழித்து, ஸ்டாலினுக்கு விசுவாசிகளே இல்லை அனைவரும் நம்மை போல உள்ளே காண்டுடன் வெளியே நல்லவனாக நடித்துக்கொண்டிருந்தனர் என தெரிந்துகொண்ட ரஷ்ய அரசியல் தலைவர்கள் ஸ்டாலினின் உடலை தோண்டி எடுத்து க்ரம்ளின் சுவர்களுக்கு வெளியே நெக்ரோபோலிஸ் பொது கல்லறையில் புதைத்து, தங்களின் பூர்வ ஜென்ம பகையை தீர்த்துக் கொண்டது போல் பூரிப்படைந்தார்கள். இப்படி உயிரற்ற ஸ்டாலினின் சடலத்தின் மேலேயே இவ்வளவு கோபம் கொண்டிருந்தார்கள் என்றால் ஸ்டாலின் அவர்களை என்ன பாடு படுத்தியிருப்பார் என யோசித்து பாருங்கள்.
ஸ்டாலினின் கொடூரங்களுக்கு பயந்து வாய் மூடி மௌனமாக வாழ்க்கையை சகித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஸ்டாலின் மேல் செம்ம காண்டுடன் கொதித்துக் கொண்டிருந்தார்கள் ரஷ்ய மக்களும் அரசியல் தலைவர்களும்.
இரண்டாம் உலகப்போரின் போது கூட ரஷ்ய மக்களும் ராணுவத்தினரும் ரஷ்யாவிற்குள் நுழைந்த ஹிட்லரின் நாஜி படைகள் செய்த கொடூர சித்ரவதைகளால் கொதித்து போய் வெகுண்டெழுந்து வீரத்துடன் போரிட்டே ஜெர்மனிய படைகளை தோற்கடித்தார்கள் மற்றபடி ஸ்டாலின் மேல் இருந்த பயத்தினால் அல்ல.
1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருக்காவிட்டால் அடுத்த சில வருடங்களிலேயே ரஷ்ய மக்களே பெரும் புரட்சி செய்து ஸ்டாலினை கழுவேற்றியிருக்கும் சம்பவம் கூட நடந்திருக்கலாம்.
ஜெர்மனிய மக்களின் ஹீரோவாக இரண்டாம் உலகப்போரை தொடங்கி இறுதியில் வில்லனாக வீழ்ந்து போனவர் அடால்ப் ஹிட்லர். அதே சமயம் ரஷ்ய மக்களின் வில்லனாக மிரட்டிக் கொண்டிருந்த ஜோஸப் ஸ்டாலின் இரண்டாம் உலக போரின் வெற்றியால் ஹீரோவாக இமேஜ் மாற்றம் பெற்றார். ஒருவேளை இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் அச்சு நாடுகள் வென்று ஸ்டாலினின் நேச நாடுகள் தோற்றிருந்தால் வரலாற்றில் ஹிட்லர் ஹீரோவாகவும், ஸ்டாலின் வில்லனாகவும் மாறியிருக்கும் மேஜிக்கல் ட்விஸ்ட் கூட நிகழ்ந்திருக்கும்.
லெனின் இறப்பதத்ற்கு முன் கம்யூனிச தலைமை குழுவிடம் சொன்ன வார்த்தைகள். ஸ்டாலினை விட இரக்க குணம், விசுவாசம், அடக்கம், மரியாதை தெரிந்த ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதுதான் ரஷ்யாவிற்கும் கம்யூனிசத்திற்கும் நல்லது.