சில மணி நேர சோதனைகளில் வண்டை வண்டையாக வந்து விழுந்தது இருவரின் வண்டவாளங்களும். அவர்கள் அந்த பெண்களை கொடுமை செய்த போது எடுத்த புகைப்படங்கள், அவர்கள் அலறுவதை பதிவு செய்த டேப் ரெக்கார்டர் மற்றும் ஆடியோ கேஸட்டுகள், இருவரின் GMG வெண்டுரா வேனில் இருந்த டிஸைன் டிஸைனான ரத்த கறை படிந்த ஆயுதங்கள் என நாரிஸ், மற்றும் பிட்டேக்கர் இருவரின் கொடூர கொலைகளுக்கும் மௌன சாட்சிகள் கிடைத்து விட்டன.
எல்லா கிரிமினல்கள் போலவும் முதலில் தாங்கள் செய்த கொலைகளை மறைத்த நாரிஸ் மற்றும் பிட்டேக்கர் இருவரின் முகத்திலும் போலிஸ் அவர்கள் வீட்டில் கைப்பற்றிய போட்டோக்கள் மற்றும் ஆடியோ கேஸட்டுகளை வீசியது.
பயத்தில் நவதுவாரங்களையும் மூடிக் கொண்டு நானில்லை இவன்தான் என இருவரும் மாறி மாறி குற்றம் சாட்ட, ஆடியோ கேஸட்டில் பதிவகியிருந்த குரல்களை வைத்து நாரிஸ் மிக கொடூரமான சைக்கோ என்றும் பிட்டேக்கர் அதை விட மிக மிக மிக கொடூரமான சைக்கோ என்பதும் போலிஸிற்கும் ஜட்ஜ் ஐயா ஸ்டீபன் க்கே-க்கும் தெளிவாக புரிந்தது.
நாரிஸிற்கு ஆயுள் தண்டனையும், பிட்டேக்கருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சான் குவண்டின் சிறையில் இருந்த முதல் மூதேவி பிட்டேக்கர் தன் 79வது வயதில் கொரனா சீனாவில் பிறந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி இறந்து போனான். கலிபோர்னியா சிறையில் இருந்த இரண்டாவது மூதேவி நாரிஸ் தனது 72வது வயதில் கொரனா அமெரிக்காவிற்கு அறிமுகமான 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி இறந்து போனான்.
பிட்டேக்கர் மற்றும் நாரிஸின் கேஸை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் க்கே, இரவு நேரங்களில் தான் தூங்கும் பொழுது அவர்கள் இருவரும் சொன்ன வாக்குமூலங்கள் தன்னை தூங்கவிடாமல் பயமுறுத்துவதாகவும், அமெரிக்காவில் பதிவான சைக்கோ கொலைகாரர்களின் கேஸில் மிக கொடூரமான சைக்கோக்கள் இவர்கள்தான் என சொல்லியுள்ளார்.
இவர்கள் கேஸை விசாரித்த தலமை விசாரணை அதிகாரி பவுல் பைனும் தனது 39வது வயதில் தற்கொலை செய்து கொண்டார், தனது 10 பக்க தற்கொலை கடிதத்தில் பிட்டேக்கர் மற்றும் நாரிஸின் கொலைகள் தன்னை பயமுறுத்துவதாகவும், அவர்கள் சிறையில் இருந்து விடுதலையடுந்து விடுவார்கள் என தான் பயப்படுவதாகவும் எழுதியிருந்தார்.
பிட்டேக்கர் மற்றும் நாரிஸ் இருவரும் தாங்கள் துன்புறுத்தி கொலைகள் செய்த பெண்களின் அலறல் சத்தங்களை பதிவு செய்து வைத்திருந்த ஆடியோ கேஸட்டுகள் இன்று அமெரிக்க புலனாய்வு கல்லூரியில் மாணவர்களுக்கு கொடூரமான கொலைகள் எப்படி நடக்கும் என்பதை விளக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவர்களால் கொலை செய்யப்பட்ட ஐந்து இளம்பெண்களின் சடலங்களும் இன்றுவரை கண்டு பிடிக்கப்படாமல், செயிண்ட் கேப்ரியேல் மலைத் தொடர்களில் மண்ணோடு மண்ணாக மௌனித்து கிடக்கின்றன.