Monday 23rd of December 2024 - 03:41:14 PM
'மேட்டர்' ஆசையில், 'கில்மா' தொழிலுக்கு போன இளைஞர்களுக்கு நடந்த கொடூரம். ராபர்ட் பெர்டெல்லா 3
'மேட்டர்' ஆசையில், 'கில்மா' தொழிலுக்கு போன இளைஞர்களுக்கு நடந்த கொடூரம். ராபர்ட் பெர்டெல்லா 3
எல்லாளன் / 21 மே 2024

முந்தைய பகுதிகள்: பாகம் 1        பாகம் 2

ஓரின சேர்க்கை நண்பர்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த  பெர்டெல்லாவை சிகரெட், மது, போதை பொருட்கள் பழக்கமும் தொற்றிக் கொண்டன. கல்லூரி படிக்கும் பொழுது   மெத்தாபெட்டமைன், LSD, கஞ்சா கேட்டமைன் போன்ற போதை பொருட்கள் வைத்திருந்ததாக இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டான். 

ஒருமுறை கல்லூரி ஹாஸ்டலில் வாத்து ஒன்றை கொடூரமாக கொன்று சமைத்தான் என்பதற்காக கல்லூரி நிர்வாகம் பெர்டெல்லாவை சஸ்பெண்ட் செய்ய, போங்கடா நீங்களும் உங்க காலேஜும் என கோபப்பட்ட பெர்டெல்லா அன்றிலிருந்து கல்லூரி செல்வதை நிறுத்தி விட்டு சமையல் கற்றுக் கொள்ள தொடங்கினான்.

தனது வெளிநாட்டு பேனா நண்பர்கள் மூலம் சில அரிய வகை கலை பொருட்கள் பெர்டெல்லாவிற்கு கிடைக்க, அவற்றை வைத்து ஒரு கலை பொருட்கள் கடையை திறந்து பார்ட் டைமாக கடையில் இருந்தவன் மெயின் வேலையாக கன்ஸாஸ் நகரின் பெரிய ஹோட்டல்களில் சமையல்காரனாக வேலை பார்த்தான். 

கோழி, ஆடு, மாடுகளை கொன்று அவற்றை துண்டு துண்டாக வெட்டுவது பெர்டெல்லாவிற்கு அளப்பறிய ஆனந்தத்தை கொடுத்தது அதனாலேயே அவன் சமையல்காரன் வேலையை சந்தோஷமாக செய்தான்.

கலை பொருட்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க, 4315 சார்லட்டே ஸ்ட்றீட் வீட்டை விலைக்கு வாங்கி அங்கு தனியாக குடியேறினான். வேறு நகரங்களில் இருந்து கன்ஸாஸ் நகருக்கு வேலை தேடி வரும் இளைஞர்களை வாடகை இல்லாமல் இலவசமாக தன் வீட்டில் தங்க வைத்து தன் சித்து வேலைகளை அவர்களிடம் காட்டி வந்தான் பெர்டெல்லா. பெர்டெல்லாவின் விளையாட்டுகளை விரும்பாதவர்கள் விட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள். விரும்பி பெர்டெல்லாவை அனுமதித்தவர்களை ஆசை தீரும் வரை அனுபவித்து விட்டு போரடித்தவுடன் போங்கடா ராஸ்கல்ஸ் வெளியே என துரத்தி விட்டான்.

கலை பொருட்கள் கடையில் நல்ல வருமானமும், வீட்டில் தங்குவதற்கு அடிக்கடி புது புது இளைஞர்களும் வந்ததால் பெர்டெல்லாவால் தன் சமையல் வேலையை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. எனவே முழு நேரமுத்தையும் கலை பொருட்கள் விற்பதற்கும் தன் வீட்டில் தங்கும் இளைஞர்களை கவனித்துக் கொள்வதற்கும் ஒதுக்கினான்.

கலை பொருட்கள் பிஸ்னஸ் மூலம் பழக்கமான பால் ஹோவல் என்பவரின் 19 வயது மகன் ஜெர்ரி ஹோவல் மேல் பெர்டெல்லாவிற்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. ஜெர்ரி ஹோவல்லை அடிக்கடி தன் வீட்டிற்கு வறுமாறு அழைத்த பெர்டெல்லாவின் மேட்டரை அரசல் புரசலாக தெரிந்து வைத்திருந்த ஜெர்ரி ஹோவல், பெர்டெல்லாவின் அழைப்பை தட்டி கழித்து வந்தான், அத்துடன் நிற்காமல் தன் நண்பர்களிடம் விசயத்தை சொல்ல அவர்கள் பெர்டெல்லாவை சந்திக்கும் போதெல்லாம் தங்களுக்குள் கிசுகிசுத்து கிண்டலடித்தது பெர்டெல்லாவின் கோபத்தை கிளறி விட்டதுடன் ஜெர்ரி ஹோவல் மேல் பெர்டெல்லாவிற்கு இருந்த காதலை காண்டாக மாற்றி விட்டது.

1984ம் ஆண்டு ஜூலை 5ம் திகதி, தன்னை மெர்ரியம் என்ற இடத்தில் இறக்கி விடும்படி பெர்டெல்லாவின் காரில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றான் ஜெர்ரி ஹோவல்.

காரில் சகஜமாக பேசி ஜெர்ரிக்கு சரக்கை ஊற்றி கொடுத்தான் பெர்டெல்லா, சரக்கின் வீரியத்தில் தன் காரியத்தை மறந்த ஜெர்ரியை அலேக்காக தன் வீட்டிற்கு அழைத்து சென்ற பெர்டெல்லா அங்கு டயாஸ்பம், மற்றும் ஆஸ்ப்ரோமஸின் என்ற போதை ஊசிகளை போட்டு ஜெர்ரியை மயக்கமாக்கினான்.

மயங்கிய ஜெர்ரியை கட்டிலில் கட்டி போட்டு தொடர்ந்து 28 மணி நேரங்கள் தன் சித்து வேலைகள் சித்ரவைதைகளால் ஜெர்ரியை துவம்சம் செய்தான். அளவுக்கதிகமான போதை ஊசிகள், டார்ச்சர்களால் ஜெர்ரி இறந்து விட, அவனது நரம்புகளை அறுத்து உடலில் இருந்து ரத்தம் முழுதும் வடியும் வரை தன் கிச்சனில் பெரிய பாத்திரம் ஒன்றில் தலைகீழாக நிற்க வைத்தான். பின் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சத்தை ஷெப்டிக் டேங்கிலும் மிச்சத்ததை தன் வீட்டு தோட்டத்திலும் புதைத்து விட்டான்.

ஜெர்ரியை காணவில்லை எங்காவது பார்த்தீர்களா என கேட்ட பால் ஹோவலிடம் இல்லையே ஏன் என்னாச்சு என உச்சுகொட்டி தன் பச்சாதாபத்தை தெரிவித்து விட்டு தன் அடுத்த இரையை தேடி திரிந்தான் பெர்டெல்லா.

1984ம் ஆண்டு ஜெர்ரியில் ஆரம்பித்த பெர்டெல்லாவின் கொலை வெறியாட்டம், 1985ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி, 20 வயது ராபர்ட் ஷெல்டன், ஜூன் 22ம் திகதி 22 வயது மார்க் வெல்லஸ், செப்டம்பர் 26ம் திகதி 25 வயது ஜேம்ஸ் பெர்ரிஸ், 1986ம் ஆண்டு ஜூன் 17ம் திகதி 23 வயது டாட் ஸ்டூப்ஸ், 1987ம் ஆண்டு ஜூன் 23ம் திகதி 20 வயது லாரி வைய்ன் பியர்ஸன் என வெற்றிகரமான நான்காவது வருடத்தை கடந்து ஓடிக் கொண்டிருந்த பெர்டெல்லாவின் குத்தாட்டம், கடைசியில் கிறிஸ்டோபர் பிரைஸன் மூலம் ஈஸ்டருக்கு  முதல் நாள் முடிவிற்கு வந்தது.

பெர்டெல்லாவின் சகித்துக் கொள்ள முடியாத சகசங்களை கேட்டு தலை சுற்றிப் போன 4த் சர்க்யூட் ஜாக்ஸன் கவுண்டி கோர்ட் நீதிபதிகள் ராபர்ட் மேயர்ஸ் மற்றும் ஆல்வின் சி ரண்டல் இருவரும் சேர்ந்து 1988ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி, பெர்டெல்லாவிற்கு ஆறு ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தார்கள்.

வழக்கமாக சைக்கோ சீரியல் கில்லர்களை சாகச வீரர்களாக கொண்டாடும் அமெரிக்க பத்திரிகைகள் கன்சாஸ் சிட்டி கசாப்பு கடைகாரன் என ராபர்ட் பெர்டெல்லாவிற்கு ஒரு பட்ட பெயர் வைத்து கொண்டாடி தள்ளினார்கள்.
 


இவ்வளவு கொடூரமாக தங்களை கொலை செய்ய தூண்டியது எது என கேட்ட கணம் கோர்ட்டாரிடம், பெர்டெல்லா, "1965 ல் வெளிவந்த த கலெக்டர் திரைப்படத்தை பார்த்தேன், ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்தி தன் வீட்டில் தனது பட்டாம்பூச்சிகளுடன் அடைத்து வைத்து ரசித்து பார்த்து வாழ்ந்து வரும் ஹீரோ, நோயால் மரணத்தை அவள் நெருங்கி விட்டாள் என அறிந்து அவளை காப்பாற்ற முயற்சி செய்து தோற்று போகும் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த ஹீரோவை போலவே நானும் என்னால் இறந்து போன அத்தனை பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தேன். பாவம் நான், அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை." என கூறி நீதிபதிகளையே அதிர வைத்தான்.

மிஸௌரி மாஹாணம், கொலம்பியா சிட்டி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பெர்டெல்லா, 1992ம் ஆண்டு அக்டோபர் 8ம் திகதி, ஹார்ட் அட்டாக்கால் இறந்தான். அவன் இறந்த செய்தியறிந்த அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி ஆல்வின் சி ரண்டல் கிண்டலாக சொன்ன வார்த்தைகள். ஒரு இனிமையான மனிதனை மரணம் இவ்வளவு சீக்கிரம் அணுகியிருக்க கூடாது. 

டிரண்டிங்
ஓசி பரோட்டாவிற்கு திகில் திட்டம். ஆடிப் போன தேனி மாவட்டம் அல்லி நகரம்
க்ரைம் / 11 டிசம்பர் 2024
ஓசி பரோட்டாவிற்கு திகில் திட்டம். ஆடிப் போன தேனி மாவட்டம் அல்லி நகரம்

நண்பர்கள் இருவரும் சில பல பரோட்டாக்களை உள்ளே தள்ளி வயிறு முட்ட சாப்பிட்ட பின், கடைசியாக சாப்பிட்டுக்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
65 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கும் Dyatlov Pass மர்மம்
மர்மங்கள் / 17 நவம்பர் 2024
65 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கும் Dyatlov Pass மர்மம்

அவர்களுக்கு பலமான காயம் ஏற்பட்டு இறந்தனர். அதில் ஒருவருக்கு மண்டை ஓடு உட்புறமாக உடைந்தது, இருவருக்க

உலகின் ஒரே கொதிக்கும் நதி. 200 டிகிரி வரை உயரும் கொதிநிலை
உலகம் / 14 டிசம்பர் 2024
உலகின் ஒரே கொதிக்கும் நதி. 200 டிகிரி வரை உயரும் கொதிநிலை

மர்மங்கள் நிறைந்த இந்த காடுகளுக்குள் சென்று விட்டால் எளிதில் மீண்டு வர முடியாது. ஏனெனில் பலவிதமான வி

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி