Monday 23rd of December 2024 - 07:16:38 PM
துடிக்க துடிக்க தாயை சுட்டு கொன்ற மகன். தந்தை எடுத்த அதிர்ச்சி முடிவு: தாமஸ் பார்ட் விட்டேக்கர் 2
துடிக்க துடிக்க தாயை சுட்டு கொன்ற மகன். தந்தை எடுத்த அதிர்ச்சி முடிவு: தாமஸ் பார்ட் விட்டேக்கர் 2
எல்லாளன் / 16 மே 2024

முந்தைய பகுதி: பாகம் 1

போலிஸ் வந்தது, புலனாய்வு செய்தது. கொள்ளையடிக்க வந்தவர்கள், கொலை செய்து விட்டு போய் விட்டார்கள் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினார்கள்.

உலகின் அத்தனை இன்பங்களையும் துளி குறைவின்றி அனுபவித்து வந்த குடும்பத்தின் மகிழ்ச்சி மொத்தமும் ஒரே நாளில் நான்கு புல்லட்டுகளால் சிதறடிக்கப்பட்டு விட்டது. கனத்த இதயத்துடன் கெவின், பேற்றிகாவின் இறுதி காரியங்களை முடித்துவிட்டு, நரக வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள் கெண்ட் விட்டேக்கரும், தாமஸ் பார்ட்டும்.

ஹாஸ்பிடல், போலிஸ் ஸ்டேஷன் என அலைந்து கொண்டிருந்த இருவருக்கும் நரகமான நாட்களின் நிமிடங்கள் கூட  நகர மறுத்தன. ஆனால் உலகில் உள்ள கோடி பிரச்சினைகளில் இதுவும் ஒன்று, சரியான நேரத்தில் உங்களுக்கு இப்போது தெரியாத ஒரு அதிர்ச்சியை கொண்டு வந்து கொடுக்கிறேன் என வேகமாக கடந்து ஓடியது காலம்.

 இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது.

2005ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி.

மெக்ஸிகோவின் கடைகோடியில் இருந்த செர்ரல்வோ நகரம். பக்கத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மாண்டெர்ரி நகரில் இருந்த பிரபல ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த 26 வயது ரூடி ரியோஸ், இண்டர்வியூவிற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஏன் இபொழுது பார்க்கும் பர்னிச்சர் கடை வேலை பிடிக்கவில்லையா என்றால் 22 வயது காதலி சிண்டி சாலினஸ்.

உள்ளூர் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் ஒன்றில் கிடாரிஸ்டாக இருக்கும் சிண்டி சாலினஸிற்கு ரூடி ரியோஸ் மீது கொள்ளை காதல்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் சர்ச் ஒன்றில் சந்தித்துக் கொண்ட இருவருக்கும், பார்த்தவுடன் காதல் பத்திக் கொண்டது. ஆனால், நாகரீகம் கருதி, பரஸ்பர சிரிப்பு, நல விசாரிப்பு, செல் நம்பர் எக்ஸேஞ், சின்ன சின்ன SMS, சில நிமிட பேச்சு, செல்ல சண்டை, சிணுங்கள்கள், சில்மிஷங்கள் என சில நாட்கள் கண்கட்டி வித்தை காட்டி விட்டு பின் பரஸ்பரம் காதலை வெளிப்படுத்திக் கொண்டார்கள் இருவரும்.

அப்பா யார் என தெரியாத அனாதையான ரூடி ரியோஸின் அம்மா ஒரு விபச்சாரி. காசு கொடுக்கும் கஸ்டமர்களிடம் காட்டிய கரிசனத்தில் கால்வாசி கூட கருவில் தோன்றிய மகன் ரூடியிடம் காட்டாத அம்மா மேல் இருந்த கோபத்தில், அந்த ஊர் அரளி விதை டைப் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றான். ஆனால், நண்பர்கள் காப்பாற்றி நல்ல புத்தி சொல்லி திருத்தினார்கள். சரி, போற உயிர் நாட்டிற்காக போர்களத்தில் போகட்டும் என ராணுவத்தில் சேர்ந்து விட்டான் ரூடி ரியோஸ்.

2 வருடங்கள் ஆப்கானிஸ்தான் போர் களத்தில், தாய் மேல் இருந்த மொத்த கோபத்தையும் ஆப்கானிஸ்தானில் அகப்பட்ட அப்பாவி மக்கள் குழந்தைகளை தன் LMG மெஷின் கன் புல்லட்டுகளால் பரலோகம் அனுப்பி பூர்வ ஜென்ம பலனை அனுபவித்ததாக ஆனந்த பட்டான். ஒரு நாள் போர் முனையில், ரூடி ரியோஸின் இடது கையில் பாய்ந்த ஏதோ ஒரு ஆப்கான் போராளியின் புல்லட் அவனுக்கு வலி வேதனையை புரிய வைத்தது.

மெடிக்கல் லீவில் இருந்தவன், அந்த மெடிக்கல் கேம்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பல ராணுவ வீரர்கள், தங்களை நம்பியுள்ள குடும்பத்தையும் குழந்தைகளையும் குறிப்பிட்டு, தங்களுக்கு ஏன் உயிர் அவசியம் என்பதை சொல்ல சொல்ல, உயிரின் உன்னதத்தை உணர்ந்த ரூடி ரியோஸ், ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்த, மனம் திருந்தி, மெஷின் கன்னையும் மிலிற்றி ட்ரஸையும் மூட்டை கட்டி விட்டு, மெக்ஸிகோவிற்கு ப்ளைட் ஏறினான். இப்பொழுது சிண்டி சாலினஸ் என்ற தேவதையின் கதகதப்பான காதல் அரவணைப்பில் தனது உயிரின் உன்னதத்தை உணர்ந்திருக்கிறான்.

ரூடி ரியோஸின் பரிதாப ப்ளாஷ்பேக் சிண்டி சாலினஸின் காதாலுக்கு கெராஸின் ஊற்றி காற்று வீச, கனகனத்துக் கொண்டிருந்த காதல் நெருப்பு, பற்றி எரிந்து சுடர் விடத் தொடங்கியது.

கொழுந்து விட்டு எரிந்த காதலின் அனல் எல்லை தாண்டி, சிண்டி சாலினஸின் வீடு வரை வெளிச்சம் போட்டி காட்டி விட்டது. விஷயம் தெரிந்த சிண்டியின் அப்பா, ஹோமிரோ சாலின்ஸ், கோபப்படாமல், ரூடி ரியோஸின் விவரங்களை கேட்டு விட்டு, என்னதான் வீரனாக போருக்கு போயிருந்தாலும், சோறு போட தெம்பிருப்பவனுக்கே பெண் கொடுப்பேன். வெட்டியாக சுற்றாமல் எனது பர்னிச்சர் கடையில் வேலை பார், கல்யாணத்திற்கு பின் கஞ்சி குடிக்க உதவும் என்றார்.

மாமனார் பேச்சிற்கு மறுப்பு சொல்லாமல். அடிக்கடி சிண்டியை சந்திக்க அதை ஒரு வாய்ப்பாக நினைத்து, பர்ன்னிச்சர் கடையில் பாயை விரித்தான் ரூடி ரியோஸ்.

என்னதான் மாமனார் கடையாக இருந்தாலும், வெளியாட்கள் முன்னிலையில் மாமனாருக்கு அடிமை போல் பணிந்து குனிந்து வேலை செய்வது நாளடைவில் ரூடி ரியோஸிற்கு பிடிக்காமல் போனது. எனவே வெளியில் ஒரு நல்ல வேலையாக தேடிக் கொண்டிருந்தான். அந்த முயற்சிக்கு பலனாக 10 கிலோமீட்டர் தொலைவில் மாண்ட்டெர்ரி நகரில் இருந்த ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் இருந்து இண்டர்வியூக்காக அழைத்திருந்தார்கள். 

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தன் வாழ்க்கையே முடியப் போகிறது என தெரியாத ரூடி ரியோஸ், ஆர்வமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான். தன் காதலனை இனி வாழ்க்கையில் பார்க்க போவதில்லை என்ற துயரம் தெரியாத சிண்டி சாலினஸ் சிரித்தபடி அவனை வழியனுப்பி வைத்தாள்.

- தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் 3

டிரண்டிங்
'பிட்டு' பட நடிகையுடன் ஜல்சா. சிக்கலில் டொனால்ட் டிரம்ப்.
அரசியல் / 08 மே 2024
'பிட்டு' பட நடிகையுடன் ஜல்சா. சிக்கலில் டொனால்ட் டிரம்ப்.

டிவி தொடர் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து, தன்னுடன் டொனால்ட் டிரம்ப

தங்க கல்லறை. பிணத்துடன் புதைந்து கிடக்கும் ரகசியம்.
வரலாறு / 19 டிசம்பர் 2024
தங்க கல்லறை. பிணத்துடன் புதைந்து கிடக்கும் ரகசியம்.

பூமியை தோண்டினால் தண்ணீர் வரும். ஆனால் தங்கக் காசுகளும் தங்க ஆபரணங்களும் கிடைத்தால் சும்மா விடுவோமா?

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ஒரே பள்ளியில் 60 இரட்டையர்கள். குழப்பத்தில் ஆசிரியர்கள்.
பொதுவானவை / 05 நவம்பர் 2024
ஒரே பள்ளியில் 60 இரட்டையர்கள். குழப்பத்தில் ஆசிரியர்கள்.

46 ஜோடி இரட்டையர்கள், இரண்டு செட் மும்மூர்த்திகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மாதிரியான

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி