முந்தைய பகுதிகள்: பாகம் 1 மற்றும் பாகம் 2
மாண்டெர்ரி நகரம். ரெஸ்ட்டாரண்டில், ரூடி ரியோஸின் வருகைக்காக வாஞ்சையோடு காத்திருதனர் சில முரட்டு மெக்ஸிகன்கள். அடிக்கடி தங்கள் இடுப்பில் இருந்த பிஸ்டலை தொட்டு பார்த்துக் கொண்டார்கள். ரூடி ரியோஸ் முரண்டு பிடித்தால் சுட்டுத்தள்ள தயாராக அந்த பிஸ்டல்கள் புல்லட்டுகளால் நிரப்பப்பட்டிருந்தன.
சரியாக காலை 11.20 மணிக்கு ரெஸ்ட்டாரண்டிற்குள் நுழைந்த ரூடி ரியோஸை ரவுண்டு கட்டினார்கள் அந்த முரட்டு மெக்ஸிகன்கள். என்ன ஏது என புரியாத ரூடி ரியோஸ் தற்காப்புக்கு தயாரான அடுத்த நொடி, கைகளில் முளைத்திருந்த பிஸ்டல்களை காட்டி. போலிஸ் என்றார்கள் அந்த முரட்டு மெக்ஸிகன்கள்.
சத்தமில்லாமல் கைகளை உயர்த்தி சரண்டரானான் ரூடி ரியோஸ். அவனை ஏற்றிக் கொண்ட மெக்ஸிகோ போலிஸ் ஜீப் வேகமாக மெக்ஸிகோ அமெரிக்க பார்டரான ஈகிள் பாஸ் நகரத்தை நோக்கி பறந்தது.
ஒன்றரை வருடங்களுக்கு முன். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம்.
அமெரிக்கா, டெக்ஸாஸின், ஸ்டாபோர்ட் நகர போலிஸ் ஸ்டேஷன். இரண்டு மாதங்களுக்கு முன் சுகர் லேண்ட் பகுதியில், கெண்ட் விட்டேக்கர் வீட்டில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த போலிஸின் வண்டியில் வாண்டடாக வந்து ஏறினார்கள் ஸ்கூல் படிக்கும் சில் வண்டுகள் போல் இருந்த ஆடம் ஹிப், வில் ஆண்டனி, ஜஸ்டின் பீட்டர்.
ஸ்கூல் டைமில் ஸ்டேஷனில் என்னடா வேலை என தலையில் தட்டிய போலிஸிடம் தாங்கள் தாமஸ் ப்ராட்டின் ஸ்கூல் மேட்ஸ் என்றார்கள். அதற்கென்ன என எகத்தாளமாக கேட்ட போலிஸிடம், அவன் தனது மொத்த குடும்பத்தையும் கும்பிபாகம் பண்ண எங்களுடன் சேர்ந்து ப்ளான் போட்டான் என சொல்லி போலிஸின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டார்கள்.
சுதாரித்த போலிஸ், ஜூஸ் ஆர்டர் சொல்லிவிட்டு, சொல்லுங்கடா செல்லங்களா என அந்த சில்வண்டுகளை கொஞ்ச தொடங்கினார்கள். சில்வண்டுகள் வாயை திறந்ததும் வண்டி வண்டியாக வண்டை வண்டையாக வந்து விழுந்தன தாமஸ் பிரட்டின் பிராடுதனங்கள்.
1979ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி பிறந்தான் தாமஸ் பிராட். கோடீஸ்வர அப்பா, பாசத்திற்கு குறைவில்லாத அம்மா. ஆசைப்படுவதற்கு அகவாகசம் கொடுக்காமல், அவன் ஆசைப்பட வாய்ப்புள்ள அனைத்தையும், அவன் ஆசைப்படும் முன்பே வீட்டில் வாங்கி அடுக்கி விடுவார் அப்பா விட்டேக்கர். ஆனால், வில்லியம் கிளமண்ட் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த 17 வயது தாமஸ் பிராட்டிற்கு பிடித்த விசயங்கள் மது, மாது, மாத்திரைகள் என போதை தரும் பொருட்களாக இருந்தன. அப்பாவிடம் கேட்டு பெறா முடியாத ரெண்டாம்தர ஆசைகளை நிறைவேற்ற சக போதைகை பிரண்டுகளுடன் சேர்ந்து தெருவில் திருட்டு வழிபறிகளில் ஈடுபட்ட்டான் தாமஸ் ப்ராட்.
அப்பா வாங்கி கொடுத்த காஸ்ட்லி பைக்குகளும் கார்களும் தாமஸ் ப்ராட்டின் கொள்ளை சம்பவங்களில் வேகமாக விரைந்து பறந்து அவனை காப்பாற்றிக் கொண்டிருந்தன.
பல நாள் திருடன் ப்ராட் 1997ம் ஆண்டு ஒரு நாள் போலிஸில் வசமாக சிக்கினான். ஸ்டேஷனில் வைத்து வகுந்தெடுத்து விசாரித்த போலிஸ், தாமஸ் ப்ராட் அதுவரை 7 வழிபறி சம்பவங்களை தலமையேற்று வெற்றிகரமாக முடித்துள்ளதை கண்டு பிடித்தார்கள். அப்பா கெண்ட் விட்டேக்கரின் கெஞ்சல்கள். கொஞ்சம் டாலர்கள், செல்வாக்கு ரெக்கமண்டேஷன்களால் ஜெயிலுக்கு போகாமல் தப்பித்த தாமஸ் பிராட் திருந்தியிருப்பான் என்றே பெற்றோர்கள் நம்பினார்கள்.
ஆனால், 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தை தன் தம்பியுடன் பங்கு போட தாமஸ் பிராட்டிற்கு விருப்பமில்லை. கூடவே பெற்றோர் சாகும்வரை பொறுமையாக இருந்து பங்கு பிரித்து அந்த பிச்சை 2 மில்லியன் டாலரை தம்பியுடன் பாகம் பிரித்து, ச்ச்சே... ரொம்ப லெந்தான ப்ராஸசா இருக்கு. என ஷார்ட் கட்டாக சொத்தை ஆட்டையப் போட வழி தேடினான் தாமஸ் ப்ராட்.
2 மில்லியன் சொத்து மட்டுமின்றி, அப்பா, அம்மா பெயரில் சில மில்லியன் இன்ஸூரன்ஸ் பாலிஸிகளும் மாதா மாதம் விட்டேக்கர் கட்டிக் கொண்டிருந்த இன்ஸ்டால்மெண்டுகளால் கொஞ்சம் கொஞ்சமாக பெருத்து கொழுத்துக் கொண்டிருந்தன. அவற்றையும் சேர்த்து ஆட்டையை போட முடிவெடுத்தான் தாமஸ் ப்ராட்.
தாமஸ் ப்ராட்டின், பாட்டியின் பாரஸ்ட் பங்களாவில் அந்த வருட கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்டனர் விட்டேக்கர் குடும்பம். அந்த டூரை தன் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ப்ளான் போட்டான் ப்ராட்.
தன் வழிபறி தொழிலில், கைப்பிள்ளைகளாக சிற்ப்பாக பணியாற்றிய நண்பர்கள் ஆடம் ஹிப், வில் ஆண்டனி, ஜஸ்டின் பீட்டர் ஆகியோரிடம் தன் திட்டத்தை விளக்கினான். தன் குடும்பம் பாரஸ்ட் பங்களாவில் இருக்கும் பொழுது, பங்களாவை கொழுத்தி, குடும்பத்தை கூண்டோடு கைலாசம் அனுப்பி விடலாம் என்பது பிராட்டின் ப்ளான். தீ வைக்க வேண்டியது கைப்பிள்ளைகளைன் கடமை. அதற்கு சன்மானமாக பிராட்டிற்கு கிடைக்கும் மொத்த சொத்தில் கனிசமான அமௌண்டை 3 பேருக்கும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தான் ப்ராட். காட்டு தீ, கிச்சன் கேஸ் ஸ்டவ் என ஏதாவது விசயத்தை வைத்து போலிஸை திசை திருப்பலாம் என்பது பிராட்டின் ப்ளான்.
தெருவில் பர்ஸ், செயினை பறித்துக் விட்டு பைக்கில் பறந்து தப்பி விடலாம், ஆனால் தீ வைத்து எரித்து மொத்த குடும்பத்தையும் கொல்வதெல்லாம், கொஞ்சம் பெரிய சமாச்சாரம் என பதறி பின்வாங்கிய கைப்பிள்ளைகளிடம், நவரச நாயகனாக நடித்து, "ஹேய் ச்சும்ம உங்களை கலாய்க்க லுல்லுயாக்கு சொன்னேன்", என ஏதேதோ சொல்லி சமாளித்தான் ப்ராட்.
இவன் சாவகாசம் நம்மளை கழுவிலேற்றி கண்டமாக்காமல் விடாது என கதறியபடி தாமஸ் பிராட்டின் தொடர்பு எல்லைக்கு அப்பால் ஓடி ஒளிந்து விட்டார்கள், ஆடம் ஹிப், வில் ஆண்டனி, ஜஸ்டின் பீட்டர்.
இப்ப ஏண்ட இதை சொல்றீங்க, அன்னைகே வந்து சொல்லியிருந்தா அநியாயமா போன ரெண்டு உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே என கைப்பிள்ளைகளின் காதை திருகினார்கள் போலிஸ். பின்ன, எங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு இன்னொருத்தனுக்கு போக போகுதே என அங்கலாய்த்த கைப்பிள்ளைகள், வீடியோவின் முதல் சில நிமிடங்களில் வந்த முகமூடி மனிதர்கள், ஸ்டீவன் கேம்பகன், க்ரிஷ் ப்ரஷீர் பற்றி போலிஸிடம் வத்தி வைத்தார்கள்.
கைப்பிள்ளைகள் கொடுத்த தகவல்களை நூல் பிடித்து, நோண்டி சென்ற போலிஸிற்கு ப்ராட்டின் செகண்ட் இன்னிங்ஸ் சில்மிஷங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
- தொடரும் -
அடுத்த பாகம்: பாகம் 4 - வீடியோ