முந்தைய பகுதி: பாகம் 1
ஹை ஸ்கூல் முடிந்ததும், உள்ளூரில் இருந்தால்தானே காதல் கததரிக்காய் எல்லாம் என நினைத்து, 500 கிலோ மீட்டர்கள் தாண்டி, கலிபோர்னியா ஆரஞ்ச் நகரில் பசுபிக் கோஸ்ட் பேப்டிஸ்ட் பைபிள் காலேஜில் டயனேவை சேர்த்தார் வெஸ்லி. காதல் அத்தியாயம் அவ்வளவுதான் என என நினைத்து ஹாஸ்டலுக்கு சென்ற டயனேவிற்கு இன்ப அதிர்ச்சி.
காலேஜ் ஹாஸ்டலில் நினைத்த நேரத்திற்கு வெளியில் செல்ல முடிந்தது. அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்ட டயனே, கடிதம் மூலம் ஸ்டீவை தொடர்பு கொண்டு, காதலை வளர்க்க தொடங்கினாள். அடிக்கடி ஸ்டீவ் ஆரஞ்ச் நகருக்கு சென்று டயனேவுடன் ஊர் சுற்றி காதலை வளர்த்தார்கள். இந்த காலகட்டத்தில்தான் நிம்மதியாக நினைத்தபடி தன் வாழ்க்கையை வாழ்ந்தாள் டயனே.
விரும்பிய ஆடைகள், அழகிற்கு அழகு சேர்க்கும் அட்டகாச மேக்கப் என 16 வருடங்கள் மனதிற்குள் போட்டு புதைத்து வைத்திருந்த ஆசைகள் அத்தனையையும் அனுபவித்து வாழ்ந்தாள் டயனே. டயனேவின் டாவ் மேட்டர் காலேஜ் மேனேஜ்மெண்டுக்கு தெரிய வர, வெஸ்லியை கூப்பிட்டு லெப்ட் ரைட் வாங்கி விட்டது மேனேஜ்மெண்ட். மீண்டும் மீண்டுமா என கொந்தளித்த வெஸ்லி மகளை கல்லூரியை விட்டு நிறுத்தி வீட்டு சிறையில் அடைத்தார்.
ஒருபக்கம் கிடைத்த வாய்ப்பும் இப்படி பட்டென பஸ்பமாகி விட்ட கவலையில் இருந்த டயனேவிற்கு மறுபக்கம் பெற்ரோரின் திட்டுகள் பெரும் மன உளைச்சலை கொடுத்தது. பல்லை கடித்துக் கொண்டு பொறுமையுடன் இருந்த டயனே 18 வயது முடிந்ததும், ஒரு நாள் வெஸ்லியின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, வீட்டில் இருந்து தப்பித்து ஓடி ஸ்டீவிடம் தஞ்சம் புகுந்தாள்.
1973ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி இரு வீட்டார் எதிர்ப்புடன் இனிதே முடிந்தது ஸ்டீவ் டயனே திருமணம். அப்பொழுது ஸ்டீவ் அமெரிக்க கடற்படையில் பணி புரிந்து கொண்டிருந்தான். எனவே வருமானம் வசத்திக்கு குறைவில்லாமல், குஷியாக ஓடியது வாழ்க்கை. திருமணம் ஆண அடுத்த வருடமே முதல் மகள் கிறிஸ்டி பிறந்தாள், 1976ம் ஆண்டு செரில் லின் பிறந்தாள், இதுவரை நன்றாக போய்க் கொண்டிருந்த டயனே, ஸ்டீவ் திருமண வாழ்வில், 1979ம் ஆண்டு ஸ்டீபன் டேனியல் பிறந்த பின் புயல் அடிக்க தொடங்கியது.
டேனியல் தனக்கு பிறந்த மகன் இல்லை என ஸ்டீவ் பிரச்சினை செய்ய, நித்தம் வீட்டில் சண்டை சச்சரவுடன் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருந்தது. டயனே மேல் ஸ்டீவிற்கு இருந்த கோபம் நாளடைவில் குழந்தை டேனியல் மேல் திரும்ப, இதற்கு மேல் இந்த வண்டி ஓடினால் பல உயிர்களை பலி வாங்கி விடும் என பயந்த டயனே ஸ்டீவ் இருவரும் 1980ம் ஆண்டு டைவர்ஸ் செய்து கொண்டார்கள்.
25 வயதுதான் ஆகிறது, அதற்குள் 3 குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள், கணவன் இல்லை, எப்படி குழந்தைகளை கரை சேர்ப்பது.
வேறு வழியில்லாமல் வாடகை தாயாக மாறினாள் டயானே. வாடகை தாயாக 1982ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி ஜெனிபர் என்ற குழந்தையை பெற்றெடுத்தாள். சிறு வயதில் இருந்தே சுனாமியில் ஸ்விம்மிங் போட்டு வாழ்ந்து கொண்டிருந்த, டயனேவிற்கு மன அழுத்த சைக்காலஜி பிரச்சினை இருந்ததால், மனநல மருத்துவரிடம் ஆலோசனைகளை பெற்று சைக்காலஜி டெஸ்ட் எழுதினாள். தொடர்ந்து இரண்டு முறை டயனே சைக்காலஜி டெஸ்டில் ஃபெயில் ஆனதால், அவளை வாடகை தாயாக செயல்பட மருத்துவர்களும் அமெரிக்க அரசும் தடை விதித்தது.
குழந்தைகள்: கிரிஸ்டி ஆன் - செரில் லின் - ஸ்டீபன் டேனியல்
நான்கு பேரின் வயிற்றை நிரப்பிய வாடகை தாய் வேலையும் பறி போனதால், 1983ம் ஆண்டு அரிசோனாவை காலி செய்து 1200 மைல்கள் தாண்டி ஓரகன் மாஹாணத்திற்கு பிழைப்பு தேடி 3 பிள்ளைகளுடன் புறப்பட்டாள் டயனே. ஸ்ப்ரிங்பீல்ட் நகரத்தில், அமெரிக்கா அரசு தபால் துறையில் போஸ்ட் வுமனாக லெட்டர் டெலிவரி செய்யும் வேலை கிடைக்க, அமைதியாக வேலை பார்த்து கிடைத்த சொற்ப வருமானத்தில் தன் குழந்தைகளை வளர்த்து வந்தாள். இந்த சூழ்நிலையில்தான் இப்படி ஒரு கொடும் துயர சம்பவம் நிகழ்ந்து டயனேவின் வாழ்க்கையை சூன்யமாக்கி விட்டது.
டயனேவின் துயரத்தை கேட்ட இன்ஸ்பெக்டர் ஜெபர்ஸன் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிரச்சினையா என உச்சு கொட்டி விட்டு, மேற்கொண்டு அவளை தொந்தரவு செய்யாமல், வழக்கு பதிவு செய்து, இறந்த குழந்தை செரில் லின்னின் காரியங்கள் முடியட்டும் பின் டயனேவிடம் தேவைப்படும் விவரங்களை கேட்டுக் கொள்ளலாம் என நினைத்து, இதுவரை கிடைத்த தகவல்களை வைத்து அந்த பரட்டை தலை நம்பியாரை தேட தொடங்கினார்.
அடுத்த சில நாட்களில், செரில் லின்னின் இறுதி காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தடயங்கள், மற்றும் சில சாட்சிகளை விசாரித்து தன் புலன் விசாரணைகளை விரைந்து முடித்த இன்ஸ்பெக்டர். ஆல்மோஸ்ட் அந்த நம்பியாரை நெருங்கி விட்டார், ஆனால் சில சின்ன சின்ன விசயங்களை உறுதிப்படுத்துவதற்காக செரில் லின்-னின் இறுதி காரியங்கள் முடியட்டும் என காத்திருந்தார்.
காரணம் இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்த நம்பியார்... இல்லை இல்லை 'நம்பியாரி' டயனே டௌன்தான். ஆம் டாயானே டௌன்- தான் கண்மூடிதனமாக துப்பாக்கியால் சுட்டு, தன் சொந்த மகளை கொன்றதுடன், மற்ற இரு குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றது.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 3