Saturday 19th of April 2025 - 08:21:25 AM
குடி, கூத்து, போதை, குரூப் செக்ஸ்: கடைசியில் கற்பழிப்பு நாடகத்தால் போலிசில் சிக்கிய தம்பதிகள். ஏஞ்சலா - இயான் டயஸ் 4
குடி, கூத்து, போதை, குரூப் செக்ஸ்: கடைசியில் கற்பழிப்பு நாடகத்தால் போலிசில் சிக்கிய தம்பதிகள். ஏஞ்சலா - இயான் டயஸ் 4
எல்லாளன் / 18 மே 2024

முந்தைய பகுதிகள்: பாகம் 1      பாகம் 2    பாகம் 3 - வீடியோ

கற்பு களவாகி போனதை, போதை தெளிந்த பின் புரிந்து கொண்ட மிச்சல்லே, இதற்கு மேல் இந்த மிருகத்துடன் வாழ முடியாது என முடிவெடுத்து லிவ் இன் லைபிற்கு பை பை சொல்லிவிட்டு தன் பெற்றோர் வீட்டிற்கு பெட்டி படுக்கையை கட்டினாள். அத்துடன் நிற்காமல், அவள் காசு போட்டு வாங்கிய வீட்டை காலி செய்யும்படி, இயான் டயஸிற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்ப, 1 வருடத்தில் மிச்சல்லேவின் 15 ஆயிரம் டாலர், டௌன் பேமெண்டை செட்டில் செய்வதாகவும், மீதி இன்ஸ்டால்மெண்டுகளை தானே கட்டி விடுவதாகவும், சில அட்வகேட்டுகள் முன்னிலையில் சமாதானம் பேசி சமரசம் ஆனார்கள் மிச்ச்ல்லேவும், இயான் டயஸும்.

ஆனால், இது வரை மிச்சல்லேவிற்கு சல்லி பைச தராமல் ஏமாற்றி வந்த இயான் டயஸ், இன்ஸ்டால்மெண்டுகளையும் கட்டாமல், மிச்சல்லேவின் போன்கால், மெஸேஜுகள் எதற்கும் பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தான்.  கடுப்பான மிச்சல்லே அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சியில், முன் ஏற்பாடுகளாக இயான் டயஸிற்கு ஈ மெயில் மூலம் எச்சரிக்கை கொடுத்தாள். பேங்க் பிரஷர், பெற்றோரின் வசவுகள் என மிச்சல்லேவின் கோபம் கொஞ்சம் கட்டுப்பாடுகளை இழந்து, ஈ மெயிலில் சில பல சாபங்களையும், பைபிள் பஞ்ச் டயலாக்குகளையும் போட்டு பில் பண்ணி பீல் பண்ணி விட்டாள்.

மிச்சல்லேவின் பீலிங்கை புரிந்து கொண்ட போலிஸ், விரைந்து செயல்பட்டு, ஏஞ்சலா, இயான் டயஸின், செல்போன், லேப்டாப்களை கைப்பற்றி சைபர் க்ரைம் கில்லாடிகளிடம் கொடுக்க, அவர்கள் ஏஞ்சலா, இயான் டயஸின் இல்லீகல் ஆக்டிவிட்டிகளை அக்கு வேற ஆணி வேறயையாக பிரித்து மேய்ந்து விட்டார்கள்.

இயான் டயாஸை மிதிக்காத குறையாக, மிச்சல்லே வீட்டை வொகோட் பண்ணி சென்ற பின், நினைத்தபடி கொட்டமடிக்க சகல வசதிகளுடன் தனி வீடு இருந்தும்,  தன் கழிசடை காம இச்சைகள நிறைவேற்ற சரியான ஆள் கிடைக்காமல் தேடி திரிந்த இயான் டயஸிற்கு ஜாடிக்கேத்த மூடி போல் ஒரு ஜோடியாக அறிமுகமானாள் ஏஞ்சலா.

இருவர் வேவ் - லெந்த்தும் வேற லெவல் வெரைட்டி காம இச்சைகளை நாடி தேட, அட சேம் பின்ச் என கொஞ்சிக் கொண்டவர்கள், சட்டு புட்டென மோதிரத்தை மாற்றிக் கொண்டு மிச்சல்லே வாங்கிப் போட்டிருந்த வீட்டில் குடியேறி கூத்தடிக்க தொடங்கினார்கள். இந்த நிலையில்தான் செட்டில்மெண்ட் பணத்தை கேட்டு மிச்சல்லேவின் மிரட்டல் மெயில்கள் இயான் டயஸின் இன்பாக்ஸை நிரப்பிக் கொண்டிருந்தன. 
    
மாதா மாதம், சம்பளம் மொத்தத்தையும் குடி கூத்தில் கரைத்து விட்டு, கையில் பத்து பைசா இல்லாமல் இருக்கும் இயான் டயஸ் ஏஞ்சலா ஜோடி, உடனடியாக 15 ஆயிரம் டாலர்கள் புரட்ட எங்கே செல்வது. போதையில் புரண்டு புரண்டு யோசித்த ஜோடி கிளிகளின் கேடி புத்தியில் பூத்த புண்ணாக்கு ஐடியாதான் இதுவரை அவர்கள் எக்ஸிக்யூட் பண்ணி இப்போது எண்ட் கார்டில் வந்து நிற்கும் மிச்சல்லே பெயரில் தங்களுக்கு தாங்களே அனுப்பிக் கொண்ட மிரட்டல் ஈ மெயில்கள், க்ளாஸிபைடில் கற்பழிக்க கட்டழகன் தேவை விளம்பரம், கற்பனை முரட்டு முகமூடியின் கற்பழிப்பு முயற்சி. 

மிச்சலேவை போலிஸில் சிக்க வைக்க, அவள் இயான் டயஸிற்கு அனுப்பிய ஈ மெயில்களில் இருந்த முக்கியமான அம்சங்களான பைபிள் வசன மேற்கோள்கள், மிச்சல்லே பயன்படுத்தியிருந்த வார்த்தைகள், மிரட்டல் ஸ்டைல், சாபங்கள், குறிப்பிட்ட வார்த்தைகளில் தொடர்ந்து மிச்ச்ல்லே செய்திருந்த எழுத்து பிழைகளை, அப்படியே காப்பியடித்து மிச்சல்லே எழுதியதை போன்றே மிரட்டல் ஈ மெயில்களை நமக்கு நாமே திட்டத்தில், தங்களுக்கு தாங்களே அனுப்பி கொண்டதுடன். போலிஸ் மற்றும் சுற்றம் சூழ் சமூகத்திடம் சிம்பதியை கிரியேட் பண்ண, ஏஞ்ச்லாவை கர்ப்பிணியாக நடிக்க வைத்தனர்.

ஆம், ஏஞ்சலா உண்மையில் கர்ப்பமாக இல்லை, இயான் டயஸிற்கு தெரிந்த மெடிக்கல் ஸ்கேனிங் செண்டரில், கொஞ்சம் டாலர்களை கொடுத்து வேறு பெண்ணின் ஸோனோகிராம் ரிப்போர்ட்டுகளை வாங்கி, அவசரத்தில் அப்போதைக்கு கிடைத்த ரெட்டை குழந்தைகளின் ஸோனோகிராம் ரிப்போர்ட்டை, ஏஞ்சலாவின் கருவின் ஸ்கேன் ரிப்போர்ட் என போலிஸையும், சுற்றம் சூழ் சமூகத்தையும் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர். அத்தனை ஆதாரங்களையும், அமெரிக்காவின் சத்யவான்  சாவித்ரியாக வாழந்த இயான் டயஸ், ஏஞ்சலா தம்பதிகளின் லேப்டாப், செல்போன்களில் இருந்து கைப்பற்றினார்கள் சைபர் க்ரைம் கில்லாடிகள்.
     
போலிஸ் டிபார்ட்மெண்டில் டெப்டி மார்ஷலாக இருக்கும் இயான் டயஸ், தனது பதவி, மற்றும் பழக்க வழக்கங்களை பயன்படுத்தி மிச்சல்லேவை பர்மெனெண்ட்டாக சிறையில் வைத்து விடலாம் என நினைத்தான். அப்படி செய்து விட்டால் 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் சொத்தை அப்படியே ஆட்டையை போட்டு விடலாம் என்பது இயான் டயஸின் கணக்கு. அந்த கண்றாவி கணக்கில் டன் கணக்கில் மண் அள்ளி போட்டு விட்டார்கள் அனேஹம் நகர போலிஸ்.

ஜூன் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மிச்சல்லே, 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

அதே நாள் ஏஞ்சலா மற்றும் இயான் டயஸ் இருவர் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். இன்று வரை நடைபெற்று வரும் வழக்கில், இருவருக்கும் குறைந்தபட்சம் 20 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.

2018ம் ஆண்டு மிச்சல்லே, அனஹேம் போலிஸ் டிபார்ட்மெண்ட் மேல், அப்பாவியான தன்னை அநியாயமாக சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததற்கு நஷ்ட் ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். 2021 ஏப்ரல் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட அமமௌண்ட் டாலர்களை கொடுத்து மிச்சல்லே பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வந்தார்கள் அனஹேம் நகர போலிஸார்.

நான் அப்பாவி நிரபராதி என நிரூபிக்கவே நஷ்ட ஈடு கேட்டேன், அது நடந்து விட்டது, ஆனால், நான் சிறையில் இருந்த நாட்களில் மனதளவில்  சந்தித்த போராட்டங்களை, துன்ப, துயரங்களை எந்த நஷ்ட ஈடும் ஈடு செய்ய முடியாது என சொல்லும் மிச்சல்லே இப்பொழுது அமைதியாக டொரண்டோ நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

டிரண்டிங்
கேரள தம்பதி கொடூர கொலை. ஆவடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
க்ரைம் / 01 மே 2024
கேரள தம்பதி கொடூர கொலை. ஆவடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

மாலை 5 மணியளவில் இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் சிவன் நாயரை சந்தித்து பேசியுள்ளனர். இர

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
யாருமே காணாத பழங்கால அழகின் இருண்ட ரகசியங்கள்
உலகம் / 09 டிசம்பர் 2024
யாருமே காணாத பழங்கால அழகின் இருண்ட ரகசியங்கள்

முந்தைய காலங்களில் ஈயம், ஆர்சனிக், பாதரசம், ரேடியம் போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அழ

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி