Monday 23rd of December 2024 - 02:49:56 PM
விளம்பரம் கொடுத்து மனைவியை கற்பழித்த கணவன்: ஏஞ்சலா டயஸ் - இயான் டயஸ் 3
விளம்பரம் கொடுத்து மனைவியை கற்பழித்த கணவன்: ஏஞ்சலா டயஸ் - இயான் டயஸ் 3
Rajamani / 30 ஏப்ரல் 2024

முந்தைய பகுதிகள்: பாகம் 1     பாகம் 2

போலிஸ் விசாரணை விரிந்து கொண்டே இருந்தது, ஆனால் மிச்சல்லேவின் சிறைவாசத்திற்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை. 5 மாதங்களாக சிறையில் தவித்துக் கொண்டிருந்த மிச்சல்லே. பொறுத்தது போதும் என பொங்கி,  அதுவரை அவள் மறைத்து வைத்திருந்த சில பல ரகசியங்களை கோர்ட்டில் பேச தொடங்கினாள்.

2013ம் ஆண்டு, பார்ட்டி ஒன்றில் பழக்கமான இயான் டயஸுடன் சில வாரங்கள் நட்புடன் பழகி வந்தாள் மிச்சல்லே, திடீரென ஒரு நாள் பூங்கொத்து ஒன்றை நீட்டி பிரண்ட்ஷிப்பை லவ்ஷிப்பாக புரோமோட் பண்ண பர்மிஸன் கேட்டான் இயான் டயஸ். அவனுக்குள் ஒளிந்திருக்கும் சனியன் சகடை பற்றி அறிந்திராத மிச்சல்லே, மிச்ச வாழ்க்கை இனி உன்னோடுதான் என புன்னகையுடன் பூங்கொத்தை பெற்று, இயான் டயஸின் சதி வலையில் விழுந்தாள்.

பப், பார்ட்டி, பன், டேட்டிங் என எஞ்சாய்மெண்டுகளால் வாழ்க்கை என்கேஜாக போய் கொண்டிருந்த நிலையில், நாம ஒரு வீடு வாங்கலாம், கல்யாணத்திற்கு பின் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்றான் இயான் டயஸ். அட வருங்கால புருஷன் ஆசைப்பட்டு விட்டானே என லோன் போட்டு 15 ஆயிரம் டாலர் டௌன் பேமெண்ட் கட்டி, மீதிக்கு பல இன்ஸ்டால்மெண்டுகளை போட்டு, 4 லட்சத்து 75 ஆயிரம் டாலருக்கு ஒரு வீட்டை வாங்கினாள் மிச்சல்லே. மொத்த பணமும் அவளுடையது ஆனால் வீட்டு ரெஜிஸ்ட்ரேஷன் இயான் டயஸ் மற்றும் மிச்சல்லே இருவரின் பெயரில் இருக்கட்டும் என்றான் இயான் டயஸ். சரி வருங்கால புருஷந்தானே போனா போகுது என ஒத்துக் கொண்டாள் மிச்சலே.

புது வீட்டை பூட்டி வைக்க கூடாது, பாழடைந்து விடும், என அவ்வப்பொழுது மிச்சல்லேவை புது வீட்டிற்கு அழைத்து சென்று தூசி தட்டினான் இயான் டாயஸ். சரி வருங்கால புருஷந்தானே பொழங்கிட்டு போகட்டும் என பொறுத்துக் கொண்டாள் மிச்சல்லே.


.
அடிக்கடி புது வீட்டிற்கு வந்து விட்டு பெற்றோர் வீட்டிற்கு ரிட்டன் ட்ராவல் பண்ணுவது போரடிக்குது, இனிமேல் பர்மனெண்டாக இங்கேயே தங்க போகிறேன் என்றான் இயான் டயஸ். அதற்கென்ன தங்கிட்டு போ என்றாள் மிச்சல்லே, தனியாக தங்க பயமாக இருக்கு நீயும் இங்கேயே வந்து விடு ரெண்டு பேரும் சேர்ந்து சோடி போடலாம் சோடி என்றான் இயான் டயஸ், சரி வருங்கால புருஷன் கேட்டுட்டானே என பெட்டி படுக்கையுடன் வந்து இயான் டயஸுடன் லிவ் இன் லைஃப் ஜோதியில் ஐக்கியமானாள் மிச்சல்லே.

மிச்சல்லே மொத்தமாக இயான் டயஸின் கட்டுப்பாட்டில் வந்ததும், மெல்ல மெல்ல, இயான் டயஸின், இல்லீகல் இச்சைகள் வெளிவரத் தொடங்கின. வெளியில் சொல்ல முடியாத வெட்க கேடான பல காம இச்சைகளை செய்யுமாறு மிச்சல்லேவை வற்புறுத்த தொடங்கினான் இயான் டயஸ், அதில் உச்சமாக ஒரு நாள் தன் நண்பன் ஒருவனுடன் மிச்சல்லே ஒண்ணுமன்னாக இருப்பதை தான் பார்த்து ரசிக்க வேண்டும் என எச்சதனமான ஆசையை மிச்சலேவிடம் சொன்னான். வருங்கால புருஷந்தானே என்றெல்லாம் பார்க்க மாட்டேன் போட்டு தள்ளி விடுவேன் என மிச்சல்லே காத்தியை காட்டி மிரட்ட, வாலை சுருட்டி கவட்டிற்குள் வைத்துக் கொண்டு கப்சிப் ஆனான் இயான் டயஸ்.

அதன் பின், அவ்வப்போது போதையில் இதை பற்றி இயான் டயஸ் பேசிய போதெல்லாம் அவனை மிரட்டி துரத்திய மிச்சல்லே, குரைக்கிற இயான் டயஸ் கடிக்காது என நினைத்து கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டாள்.
    
2015ம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி, காதலர் தினத்தன்று தன் காதலி மிச்சல்லேவிற்கு சிறப்பான காதல் பரிசொன்று கொடுப்பதாக சொன்ன இயான் டயஸ், லோக்கல் கிளாஸிபைட் வெப்ஸைட்டில் கற்பழிக்க கட்டழகன் தேவை என்று ஒரு விளம்பரத்தை கொடுத்து, யாரோ முன் பின் அறிமுகம் இல்லாத காஜி கலுசடை ஒருவனை வீட்டிற்கு அழைத்து வந்து, மிச்ச்சல்லேவை அவனுக்கு விருந்தாக்க முயன்றான். 

முரண்டு பிடித்த மிச்சல்லேவிற்கு மூன்று பெக் விஸ்கியை வலுக்கட்டாயமாக வாய்க்குள் ஊற்ற, அரை குறை மயக்க போதையில் அந்த காஜி கலுசடையின் காம வெறிக்கு விருந்தானாள் மிச்சல்லே, அதை கேமராவில் படம் பிடித்தபடி பார்த்து ரசித்தான் இயான் டயஸ்.

 - தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் 4

டிரண்டிங்
தோழியை கொன்று பிணத்தை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 1
க்ரைம் / 10 மே 2024
தோழியை கொன்று பிணத்தை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 1

16 வயது பால்கோவா மாதிரி இருக்கிறாள். இவளை தின்று விட்டால் போதும், நாமும் உயரமாகி, ஹார்ட்வெல்ட் மாதிர

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி