Monday 23rd of December 2024 - 07:40:57 PM
மைனர் பெண்ணினிடம் அத்துமீறிய அப்பா. மைனர் பெண்ணின் கொடூர தண்டனை. டேனியல் ஹெல்சேத் 4
மைனர் பெண்ணினிடம் அத்துமீறிய அப்பா. மைனர் பெண்ணின் கொடூர தண்டனை. டேனியல் ஹெல்சேத் 4
எல்லாளன் / 21 மே 2024

முந்தைய பகுதிகள்:  பாகம் 1    பாகம் 2     பாகம் 3

இந்த ஆளுக்கு சரியான ஆள் அம்மா எலிசபெத்தான் என தெரிந்து வைத்திருந்த சியாரா, வீட்டில் என்னை அடைத்து பாலியல் தொல்லை தருகிறார் என தாயிடம் போனில் புலம்பினாள். அம்மா வந்து உன்னை காப்பாற்றுகிறேன் என வாக்குறுதி கொடுத்த எலிசபெத், அப்படியே கலைச்சேவையில் கவனத்தை செலுத்தி மகளை மறந்து போனாள். வேறு வழியில்லாமல் கிடைத்த கேப் ஒன்றில் காதலன் ஆரோனுக்கு தகவல் சொன்னாள் சியாரா.
 
மறுநாள் காலை, 2021ம் ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி. டேனியல் வீட்டு காலிங் பெல்லை அமுக்கினான் பயமறியாத இளங்கன்று ஆரோன். கதவை திறந்த டேனியலை அலேக்காக உள்ளே அள்ளிச் சென்று, தன் ஆத்திரம் தீரும் வரை அடிக்க தொடங்கினான். சத்தம் கேட்டு, அறைக்குள்ளிருந்து வெளியே வந்த சியாராவும் ஆரோனுடன் சேர்ந்து டேனியலை பொரட்டியெடுக்க, இருவரின் தாக்குதலால் நிலைகுலைந்து சரிந்த டேனியல் ஏதோ ஒரு தருணத்தில் உயிரை விட்டார்.

டேனியல் இறந்து விட்ட பின்னரும் பொணத்தை போட்டு பொளந்து கட்டிய சியாரா ஆரோன் ஜோடி, கோபம் அடங்கி, அடிப்பதை நிறுத்தி சில நிமிடங்கள் கழித்தே டேனியல் டெத்தாகி விட்டார் என்பதை புரிந்து கொண்டனர். என்ன செய்வது ஏது செய்வதென தெரியாமல் தடுமாறிய சில்வண்டுகள், சில நிமிட் யோசனைக்கு பின் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

டேனியலின் டெபிட் கார்டை எடுத்துக் கொண்டு, வீட்டை பூட்டி விட்டு, டேனியலின் காரில் கடை வீதிக்கு சென்றனர். ATM ல் 1300 டால்ர்கள் பணத்தை எடுத்து, மரம் அறுக்கும் எலக்ட்ரிக் ரம்பங்களான செயின்ஸா, சர்குலர் சா, ரம்பம் என வகை வகையாக வாங்கிக் கொண்டு வரும் வழியில் கொஞ்சம் பெட்ரோல், ப்ளாஸ்டிக் பைகள் மற்றும் கைக்கு கிளவுஸ் என ப்ரபஸ்னல் கில்லர்கள் ரேஞ்சில் பர்ச்சேஸை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

எலக்ற்றிக் ரம்பங்களை பயன்படுத்தி டேனியல் உடலை துண்டு துண்டாக வெட்டி, பொறுமையாக எரித்து சாம்பலாக்கி விட்டு சாவகாசமாக புறப்பட்டு செல்லலாம் என்பது இருவரின் ஐடியா, ஆனால், பாவம் குழந்தைகள், எலக்ட்ரிக் ரம்பத்தின் எமகாதக வேகத்தில், ரெண்டு மூணு வெட்டிலேயே பீரிட்டு தெறித்த ரத்தத்தை பார்த்து டரியல் ஆகி, அது அது அப்படியே கிடக்க, ஆங்காங்கே பொற்றோலை ஊற்றி அவசரத்தில் தீ வைத்து விட்டு, எப்படியும் எரிந்து ஒன்றுமில்லாமல் சாம்பலாகிவிடும் என்ற நம்பிக்கையில் நடையை கட்டிவிட்டனர்.
 
மறுநாள் ஏப்ரல் 9ம் திகதி காலை, தினமும் போன் செய்து பேசும் மகன்  முதல் நாள் போன் செய்யவில்லை என்ற ஆதங்கத்தில், டேனியலின் செல்போனை தொடர்பு கொண்ட அம்மா கிரிஸ்டினிற்கு, டேனியல் பதில் அளிக்காததால், தன் பேத்தி சியாராவை தொடர்பு கொண்டார் கிரிஸ்டின்.


 
அப்போது, அப்பா டேனியலின் காரில்,  காதலன் ஆரோனுடன், சால்ட் லேக் சிட்டிக்கு பறந்து கொண்டிருந்த சியாரா, அப்பாவின் செல்போன் ரிப்பேர் என சொல்லி கிழவியை ஏமாற்றி விட்டதாக நினைத்து தனக்குள் சிரித்து கொக்கரித்துக் கொண்டாள். ஆனால், சியாராவின் பதிலில் திருப்தி அடையாத கிரிஸ்டின், டேனியலின் வீட்டு ஓனர் பெக்கி நியூமென்னிற்கு போன் செய்து, ஒரு எட்டு போய் டேனியலிடன் போனை கொடுக்க முடியுமா என கெஞ்சினார். 

கிழவியின் பரிதவிப்பை பார்த்த பெக்கி நியூமென், ப்க்கத்திலிருந்த டேனியலின் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது, வீட்டு கதவு திறந்து கிடக்க உள்ளேயிருந்து எரிந்த புகை நாற்றம் வந்து கொண்டிருந்தது. பதறியடித்து பயர் ஸ்டேஷனுக்கு போன் செய்தார் பெக்கி.

சால்ட் லேக் சிட்டி ரயில்வே போலிஸ் ஸ்டேஷனில் வைத்து, சியார, ஆரோன் இருவரையும் கஸ்டடி எடுத்த லாஸ் வேகாஸ் நகர போலிஸ், ஆரோன் சியாரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த டேனியலின் காரையும். அதில் இருந்த டேனியலின் ரத்த கறை படிந்த சில ப்ளாஸ்டிக் கவர்களையும் கைப்பற்றினார்கள் போலிஸ்.


  
சியாராவின் செல்போனில் இருந்து, சியாராவும் ஆரோனும், டேனியலை எப்படி கொலை செய்தார்கள், ஏன் கொலை செய்தார்கள் என இருவரும் பேசி  சிரித்து ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும் வீடியோ ஒன்றை கைப்பற்றினார்கள் போலிஸ்.

இந்த ஆதாரங்களையும், சம்பவ இடமான டேனியலின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தடயங்களையும், வைத்து சியாரா, ஆரோன் இருவரின் குற்றங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தனர் லாஸ் வேகாஸ் நகர போலிஸ்.

2022ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி, ஆரோன், சியாரா இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி டியரா ஜோன்ஸ்.

எல்லாம் முடிந்து, எழவு கொட்டிய பின், "என் மகள் மைனர், அவளுக்கு டேனியல் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை, அதனாலேயே கொலை நடந்து விட்டது. எப்படியும் என் மகளை மீட்டே தீருவேன்" என இப்பொழுது மைக் நீட்டும் மீடியாக்களிடம் முழங்கி வருகிறாள் பப்ளிஸிட்டி பைத்தியம் எலிசபெத். 

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ஹிட்லரின் மனித தொழிற்சாலை. ஜெர்மனிய குழந்தைகளை உருவாக்க நடந்த கொடூர திட்டம்.
வரலாறு / 05 மே 2024
ஹிட்லரின் மனித தொழிற்சாலை. ஜெர்மனிய குழந்தைகளை உருவாக்க நடந்த கொடூர திட்டம்.

ஒரு எஸ்.எஸ் படை வீரன் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும். அதற்கு மேல் கணக்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி