"மெலிஸாவின் உயிருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை", என டாக்டர்கள் உத்ரவாதம் கொடுக்க, ரைட்டு சைத்தான் திரும்பி வந்து என்ன தொல்லை தரப்போகுதோ என்ற பயத்தில் சொந்தகாரர்கள் ஹாஸ்பிடலை காலி செய்து சிதறி ஒட, மெலிஸாவின் கை ரேகையை பெற்று ஆய்வுக்கு அனுப்பி விட்டு, கைது செய்யும் நோக்கத்தோடு மெலிஸா முழுவதுமாக குணமாகட்டும் என ஹாஸ்பிடலில் காவல் இருந்தனர் போலிஸ்.
இரண்டு நாட்களில், நல்லபடியாக டிரீட்மெண்ட் முடிந்து தெளிவான மெலிஸாவை மருத்துவமனையில் இருந்து ஸ்டேஷனுக்கு பேக் செய்தார்கள் போலிஸ்.
சம்பவத்தன்று தன் வீட்டிற்கு வந்த ஸான்றாவுடன் தான் ஹைட் அண்ட் சீக் விளையாடியதாகவும், அப்பொழுது சூட்கேஸிற்குள் ஒளிந்து கொண்ட சான்றாவை எங்கு தேடியும் தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, வெகு நேரம் கழித்து எதோச்சையாக சூட்கேஸிற்குள் பார்த்த பொழுது ஸான்றா மூச்சு திணறி இறந்திருந்தாள், இதை வெளியே சொன்னால் தன் மேல் வீண் கொலை பழி விழுந்து விடும் என்ற பயத்தில் ஸான்றாவை அப்படியே அதே சூட்கேஸில் வைத்து பூட்டி பச்சாட்டி மற்றும் வைட் ஹால் ரோடுகளுக்கு இடைப்பட்ட, விவசாய நிலத்தில் இருந்த, குளத்தில் எறிந்து விட்டதாக, குட்டி குழந்தைகளுக்கு சுட்டி டீவி கதை சொல்வது போல் போலிஸிடம் கதை அளந்தாள் மெலிஸா.
ஸாண்ராவிற்கு அல்புரோசலம் தூக்க மாத்திரை கொடுத்தது யார்? அவளை பாலியல் துன்புறுத்தல் செய்தது யார்? சிம்ரன் இடுப்பு பூரிக் கட்டையால் அவளை கொடூரமாக தாக்கியது யார்? சுருக்கு கயிற்றால் ஸாண்ராவின் கழுத்தை நெரித்தது யார்? போன்ற போலிஸின் குறுக்கு கிடுக்குபிடி கேள்விகளுக்கு மெலிஸாவிடம் மரண மௌவுனத்தை தவிர வேறு பதில் இல்லை. மெலிஸாவின் மௌனத்தை மயிராக கூட மதிக்காத போலிஸ், 2009ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் திகதி மெல்லிஸாவை கைது செய்தனர்.
சம்பவம் நடந்த மார்ச் 27ம் திகதி மாலை 3:54 மணிக்கு மெலிஸாவின் வீட்டிற்கு சென்ற ஸாண்ராவை, வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த மெலிஸா, சூட்கேஸிற்குள் ஒளிந்து கொள், உள்ளே ரூமிற்குள் இருக்கும் உன் ப்ரண்ட் கேத்தரினை ஏமாற்றி சர்ப்ரைஸ் கொடுத்து விளையாடுவோம் என சொல்லி சூட்கேஸிற்குள் ஒளிய வைத்து, சூட்கேஸை பூட்டி, தனது காரில் ஏற்றிக் கொண்டு க்ளவர் ரோடு சர்ச்சிற்கு சென்றாள்.
அன்று வெள்ளிக்கிழமை மாலை என்பதால் சர்ச்சில் வேறு யாரும் இல்லை. சர்ச்சில் டீச்சராக பணியாற்றுவதால், சர்ச்சின் சாவிகள் மெலிஸாவிடமும் உண்டு.
சர்ச்சின் கிச்சன் பகுதிக்கு ஸான்றாவை சூட்கேசுடன் கொண்டு சென்ற மெலிஸா, தனது ஹேண்ட்பேகில் அந்நியனை அடக்குவதற்கு எப்பொழுதும் வைத்திருக்கும் அல்புரோசலம் தூக்க மாத்திரைகளை ஸாண்றாவிற்கு கொடுத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு சென்ற பின் ஐந்தே கால் வரை, ஏறத்தாழ ஒண்ணே கால் மணி நேரம் கொடூர பாலியல் சித்ரவதைகள் செய்து பின், பூரி கட்டையால் அதன் கைப்பிடி சிம்ரன் இடுப்பாக வளையும் வரை, தலையில் அடித்து சுருக்கு கயிறு ஒன்றால் கழுத்தை நெரித்து, ஸாண்றாவை கொலை செய்த பின், சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் ஏற்றி வைட் ஹால் ரோட்டிற்கு சென்று சூட்கேஸை குளத்தில் வீசி விட்டாள்.
க்ளோவர் ரோட் சர்ச்சின் கேட்டில் மட்டுமே CCTV கேமரா இருந்ததால், மெலிஸாவின் கார் சர்ச்சிற்கு வந்த மற்றும் வெளியில் சென்ற காட்சிகள் கிடைத்துள்ளன. சர்ச்சிற்குள் பார்க்கிங்கில் CCTV கேமரா இல்லாததால், மெலிஸா சூட்கேஸை காரிலிருந்து இறக்கிய மற்றும் ஏற்றிய காட்சிகள் கிடைக்கவில்லை.
2010ம் ஆண்டு ஜூன் 14ம் திகதி ஸ்டாக்டன் நகர கோர்ட்டில் தங்கள் விசாரணை விளக்கங்களை வெளியிட்டார்கள் FBI அதிகாரிகள். ஸான்றாவை என்ன செய்தேன் ஏன் செய்தேன் என ஒன்றும் நினைவில்லை என்று அந்நியன் அவதாரம் எடுத்த மெலிஸாவின் மன்றாட்டுகளை ஈவு இரக்கமின்றி புறந்தள்ளிய நீதிபதி லிண்டா லோப்தஸ், மெலிஸாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கலிபோர்னியா மாஹாணம் சாவ்சில்லே பெண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மெலிஸா கோர்ட்டில் சொன்ன வார்த்தைகள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் நான் உங்களிடம் சத்தியமாக சொல்கிறேன், இனிமையான தேவதையாக திரிந்த ஸாண்றா கேண்டு சாகும் பொழுது துளிகூட வலியை அனுபவிக்கவில்லை.